இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

பரிதி இரா. வெங்கடேசன்

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை

பணி: பைனான்ஸ் ஆபீசர்  - 01
வயது வரம்பு: 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78,800 - ரூ.2,09,200

தகுதி: ஐசிஏஎஸ், ஐஆர்ஏஎஸ், ஐடிஏஎஸ், ஐபி&ஏஎஸ்  போன்ற துறைகள் ஏதாவதொன்றில் அலுவலராகப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: செக்ஷன் ஆபீசர் - 01
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ.1,42,400
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று நிர்வாகம் மற்றும் கணக்கியல் பணியில் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: லைப்ரரி அசிஸ்டன்ட்   - 01
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400
தகுதி:  நூலக அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  லைப்ரரி அட்டெண்டன்ட் மற்றும் டைப்பிஸ்ட்  - 01
வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.  

பணி: ஜூனியர் அசிஸ்டன்ட் 
(ஆன் காண்ட்ராக்ட்)  - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: ஜூனியர் அசிஸ்டன்ட் 
(ஆன் காண்ட்ராக்ட்)  - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  மேற்கண்ட இரு பணிகளுக்கும் வயது வரம்பில்லை. ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.rgniyd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து விரைவுத் தபால், கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Assistant Registrar(Administration)
Rajiv Gandhi National Institute of Youth Development(RGNIYD)
Bangalore to Chennai Highway, Sriperumbudur-602105. Kanchipuram District. Tamilnadu.

மேலும் விவரங்களுக்கு: https://www.rgniyd.gov.in/sites/default/files/pdfs/advt_non_teaching_post.pdf  என்ற லிங்க்கில் சென்று பாருங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.11.2021

இந்து சமய அறநிலையத்துறை வேலை


பதவி: மருத்துவ அலுவலர் - 02
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.75,000 

பதவி: செவிலியர் - 02
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் மிட்வைஸ் முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.14,000

பதவி: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் - 02
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.6,000 

விண்ணப்பிக்கும் முறை:  http://www.samayapurammariammantemple.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 112

மேலும் விவரங்களுக்கு: http://samayapurammariammantemple.org/samayapurammariammantemple.org/ftplogs/nodification/Medical%20Officer,%20Nurse%20and%20Attender%20in%20First%20Aid%20Center.pdf  என்ற லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.11.2021

கடலோர காவல் படையில் குரூப் "சி' வேலை

பணி: சிவிலியன் எம்டி டிரைவர்  
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவமும், மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஃபோர்க் லிஃப்ட் ஆபரேட்டர்  
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பணி சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் ஓர் ஆண்டு பணி அனுபவமும், பணிக்கேற்ற வாகனத்துக்
குரிய கனரக வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: எம்டி ஃபிட்டர் / எம்டி (மெக்கானிக்)  
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: ஃபயர்மேன்  
காலியிடங்கள்:  04
சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல உடற்திறன் பெற்றவராக இருக்க வேண்டும். 

உடற்திறன் தகுதி: உயரம் 165 செ.மீ, எடை 50 கிலோ, மார்பளவு 81.5 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ இருக்க வேண்டும். 63.5 கிலோ எடையுள்ள மனிதனைச் சுமந்துகொண்டு 183 மீட்டர் தூரத்தை 96 விநாடிகளில் ஓடி கடக்க வேண்டும். 2.7 மீட்டர் அகலமுள்ள பள்ளத்தில் நீளம் தாண்டுதல் வேண்டும். 3 மீட்டர் செங்குத்தான கயிற்றில் மேலே ஏற வேண்டும்.  

பணி: என்ஜின் டிரைவர் 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.25,500
தகுதி: பணிக்குரிய சான்றிதழ் பெற்றிருப்பதுடன், 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: எம்டிஎஸ் (செளகிதார்)  
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் படகுப் பணியில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 27, 30 வயதுக்குள் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதுவரம்பில் அரசு விதிமுறைகளின்படி சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Commander, Coast Guard Regin(North East), Synthesis Business Park, 6th Floor, Shrachi Building, Rajarhat, New Town, Kolkata - 700 161.

மேலும் விவரங்களுக்கு: https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202111030316037641075Advt.materialforCGWebsite2021.pdf  என்ற லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசித் தேதி: 26.11.2021

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை

பணி:  டெபுடி மேனேஜர் (ஃபைனான்ஸ் அக்கவுண்ட்ஸ்)   

காலியிடங்கள்: 17

சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.காம்., சிஏ., எம்பிஏ(நிதி) போன்ற ஏதாவதொரு படிப்புடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தேசிய தேர்வு ஆணையத்தால்(என்டிஏ) நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் மூலம் தேர்வு   நடைபெறும். 

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் நடைபெறும். தேர்வுக்கான அனுமதிச் சீட்டு விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://recruitment.nta.nic.in/NHAIRWEBINFO/File/ViewFile?FileId=1&LangId=P என்ற லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.11.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT