இளைஞர்மணி

கண் அசைவில் கட்டுப்படும் கணினி!

அ. சர்ஃப்ராஸ்


கணினியின் வருகை பல்வேறு பழைய பாரம்பரிய செயல்களுக்கு முற்றுபுள்ளி வைத்திருந்தாலும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டுள்ளது.

கற்காலத்தில் இருந்து கணினி காலம் வரை மக்களின் வாழ்க்கைமுறை பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளது.

கீபோர்ட், மவுஸ் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட கணினி, கையடக்கக் கணினியின் (டேப்) வருகையால் விரல் நுனியில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக கட்டளையின் (வாய்ஸ்) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

தற்போது கண் அசைவால் கையடக்கக் கணினியைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை டோபி என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பேட்டில் பிரேம் வடிவிலான இந்த சாதனத்தை இணைத்து இதற்கான தனிப்பட்ட செயலியைச் சேர்த்தால் போதும். கண் அசைவால் ஐ-பேடை இயக்கலாம். எப்படி கை விரல் நுணியால் ஐ-பேடை இயக்குகிறோமா அதுபோல கண் அசைவால் இயக்கலாம்.

குரல் ஓசையால் நாம் தெரிவிப்பதை எழுத்துவடிவில் காண்பிக்கவும், அதை ஒலி வடிவிலும் அறிவிக்கவும் இதில் வசதி உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் கை அசைவில்லாமல் கையடக்க கணியைப் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விடியோ கேம்களையும் விளையாடலாம்.

சக்கர நாற்காலியில் இதை இணைக்கவும், மழையிலும் பயன்படுத்தவும் இதில் வசதி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் பயனளிக்கும் இது,  தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் மைல்கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT