இளைஞர்மணி

பொழுதுபோக்குகள்... இணையதளம்!

2nd Nov 2021 06:00 AM |   - மு. சுப்பிரமணி     

ADVERTISEMENT

 

மனிதன் தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில், மகிழ்ச்சிக்காகவும், ஆர்வத்திற்காகவும் அல்லது ஓய்விற்காகவும் செய்வதாக "பொழுதுபோக்கு' இருக்கிறது. இன்றைய வாழ்க்கைச் சூழலில் இந்த  "பொழுதுபோக்கு' காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இருப்பினும், மனித வாழ்க்கையில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கும் பொழுதுபோக்கு பற்றியும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி பற்றியும் பல்வேறு செய்திகளை அளிக்கக் கூடியதாக ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்த  இணையதளத்தில் கலெக்ட்டிங்,   ஆர்ட்ஸ் & கிராஃப்ட்ஸ்,  கேம்ஸ்,  மாடல் &  எலக்ட்ரானிக்ஸ்,   ஸ்போர்ட்ஸ் & அவுட்டோர்ஸ், பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ், மியூசிக்,  ஸ்பிரிச்சுவல் & மென்டல் , ஃபுட் & ட்ரிங்க், பெட்ஸ்   ஆகிய  முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

கலெக்ட்டிங் எனும் தலைப்பில் ஆக்ஷன் ஃபிகர்ஸ்,  அமெச்சூர் ஜியாலஜி, ஆன்ட்டிக்யூஸ்,  ஆட்டோகிராப் கலெக்ட்டிங்,  கார் கலெக்ட்டிங்,  காயின் கலெக்ட்டிங்,  காமிக் புக்ஸ்,  கான்செர்ட் போஸ்டர்ஸ், டால் கலெக்ட்டிங், ஃபைன் ஆர்ட்  கலெக்ட்டிங், கன் & பிஸ்டல்ஸ்,  ஹாட்  வீல் & மேட்ச்பாக்ஸ் கார்ஸ்,  கீ செயின் கலெக்ட்டிங்,  மூவி மெமரபிலியா,  மியூசிக் மெமரபிலியா, ஸ்பூன் கலெக்ட்டிங்,  ஸ்டாம்ப் கலெக்ட்டிங்,  வாட்ச்  கலெக்ட்டிங்  என்பவை உள்ளிட்ட 24 துணைத்தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.  

ADVERTISEMENT

இதேபோன்று, ஆர்ட்ஸ் & கிராஃப்ட்ஸ் எனும் தலைப்பில்  26 துணைத்தலைப்புகளும், கேம்ஸ் எனும் தலைப்பில் 19 துணைத்தலைப்புகளும், மாடல் & எலக்ட்ரானிக்ஸ் எனும் தலைப்பில் மூன்று முதன்மைத் துணைத்தலைப்புகளும்,  ஸ்போர்ட்ஸ் & அவுட்டோர்ஸ் எனும் தலைப்பில்  6 முதன்மைத் துணைத்தலைப்புகளும், பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ்  எனும் தலைப்பில்  2 முதன்மைத் துணைத்தலைப்புகள் அவற்றின் கீழ்  6 துணைத் தலைப்புகளும், மியூசிக் எனும் தலைப்பில் மூன்று முதன்மைத் துணைத்தலைப்புகளும் அவற்றின் கீழ் 21 துணைத்தலைப்புகளும், ஸ்பிரிச்சுவல் & மென்டல் எனும் தலைப்பில் மூன்று முதன்மைத் துணைத்தலைப்புகளின் கீழ் 23 துணைத் தலைப்புகளும்,  ஃபுட் & ட்ரிங்க் எனும் தலைப்பில் 20 துணைத்தலைப்புகளும், பெட்ஸ் எனும் தலைப்பில் 11 துணைத்தலைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.   
ஒவ்வொரு துணைத்தலைப்புகளுக்கும் ஏற்றதான முழு விளக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடியோக்கள், வலைதளங்களுக்கான இணைப்புகள்,    இணையப் பக்கங்களுக்கான இணைப்புகள்,  லோக்கல் லிங்க்ஸ், புக்ஸ், டிவிடிஸ் & எக்யூப்மென்ட்ஸ்  போன்றவை தரப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அந்தத் தலைப்பு குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

பொழுதுபோக்கு என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடக்கூடும். இசையில் ஈடுபாடு கொண்டவருக்கு இசையே வாழ்க்கை. ஆனால், மற்றவர்களுக்கு அது பொழுதுபோக்காக இருக்கலாம். இப்படி ஒருவருக்குத் தொழிலாக இருப்பது, மற்றவருக்குப் பொழுதுபோக்காக இருப்பதுண்டு. தாங்கள் ஈடுபட்டிருக்கும் பணியிலிருந்து மாறுபட்டதாக, மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு மனமகிழ்ச்சி அடையச் செய்வதாக அமைந்திருக்கும் பொழுதுபோக்கு மனிதருக்குத் தேவையானதாகவே இருக்கிறது.

உலகில் பயன்பாட்டிலிருக்கும் பல்வேறு பொழுதுபோக்குகளைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் http://discoverahobby.com/ எனும் இணையமுகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT