இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

DIN

முக நூலிலிருந்து....

முகத்தை எங்கே கொண்டு  போய் வைப்பது என்று தெரியாததால்...
என்னுடனே இருக்கிறது, என் முகம்.

மகேந்திரன்


இந்த முட்டைக்குள் ஒரு கழுகு இருக்கிறது என்கிறீர்கள்.
இந்த முட்டைக்குள் ஒரு பறவை இருக்கிறது என்கிறேன் நான்.
என் வெதுவெதுப்பான  உள்ளங்கையில் அது இருக்கிறது.
ஒரு முட்டை தான் எவ்வளவு அழகாக இருக்கிறது, 
ஒரு முட்டையைப் போலவே.

வண்ணதாசன் சிவசங்கரன்

வயிற்றை  குறைக்க ஓடும் நீங்கள்...
கொஞ்சம்  திரும்பிப் பாருங்கள் வயிற்றை நிறைக்க நாங்கள் ஓடும்  ஓட்டத்தை.

நா.வே.அருள்


சுட்டுரையிலிருந்து...

சிகரங்களை அடைய, சிறகுகளுக்காகக் காத்திராதே! 
பாதங்களைப் பயன்படுத்து! 

செங்காந்தள்


குத்திக்காட்டும் மனிதர்களாயினும் சரி...
குத்திக்கிழிக்கும் முள்ளாயினும் சரி...
தூக்கிச் சுமக்காமல், ஓரமாக தூக்கி வீசிவிட்டுச் செல்லுங்கள்...
வாழ்க்கை இலகுவாகும்.

மெளனகவி 

கடலில் கல் எறிவதால் கடலுக்கு வலிப்பதில்லை ....
கல் தான் காணாமல் போகிறது;
விமர்சனங்கள் கல்லாக இருக்கட்டும்...
நாம் கடலாக இருப்போம்.

எதார்த்தமானவள்


உங்களால் முடியும் என்பதற்காக...
எல்லாவற்றையும் விலைக்கு வாங்காதீர்கள். 
உங்களால் முடியவில்லை என்பதற்காக... 
எல்லாவற்றையும் விலைக்கு விற்காதீர்கள்.

கவிஞர் மகுடேசுவரன்

வலைதளத்திலிருந்து...

சம்பளம் வாங்கியதும் பலசரக்கு, பெட்ரோல், தினசரி செலவு எனப் பிரித்து வைத்த பின் எதிர்பாராத செலவுகள் வரும்போது நம் மனதில் உடனடியாகத் தோன்றும் எண்ணம் யாரிடம் கடன் கேட்கலாம் என்பதுதான். கடன் வாங்காமல் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து சமீபத்தில் ஒருவர் பேசியபோது, அவரோடு முரண்பட்டு ரொம்பநேரம் வாதிட்டுக் கொண்டிருந்தேன். மார்க்கோபோலோ பாண்டிய நாட்டிற்கு வந்தபோது, மன்னன் ஒருவனே கடன் வாங்கி கடன் கொடுத்தவனால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததை அவரது குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. கடன் குறித்த வரலாற்றை எழுதாமல் தொலைந்து போன சேமிப்புப் பழக்கம் பற்றி எழுதவே நினைக்கிறேன். 

இளம்பிராயத்தில் முதலாம்வகுப்பு படிக்கும்போது உண்டியலில் கிடைக்கின்ற சில்லரைக் காசுகளை சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அஞ்சு காசு, பத்து காசு, காலணா, எட்டணா வரை கிடைக்கும். அவற்றை உண்டியலில் போட்டு வைப்பேன். பிறகு, அதில் வீட்டிற்கு ஒரு கடிகாரம் வாங்கிய நினைவு இருக்கிறது.

முன்பு பெண்கள் தங்கள் கணவனிடமிருந்து செலவுக்குப் பெறும் தொகையில் ஒரு பகுதியை மிச்சம் பிடித்து சேமித்துவைப்பர். இதை சிறுவாட்டுப்பணம் எனச் சொல்வர். இருந்தாலும் இந்தத் தொகையை அந்தப் பெண்கள் பின்னாளில் குடும்பத்திற்குத்தானே செலவு செய்திருக்கிறார்கள்? என்னுடன் பணியாற்றிய ஒரு நண்பரின் மனைவி 50,000 ரூபாய்கிட்ட சேமித்து வைத்திருந்தார். பணமதிப்பு நீக்கத்தின் போது அவரது கணவரிடம் அந்தத் தொகையைத் தர இவர் ஒரு பெருங்கடனை அடைத்தார்.

சேமிப்புப் பழக்கம் நம்மிடம் இல்லாமல் போகும்போது நமது குழந்தைகளிடமும் இல்லாமல் போகிறது. அவர்கள் வாயிலாக சேமிக்க எதாவது ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.https://maduraivaasagan.wordpress.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT