இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 293

ஆர்.அபி​லாஷ்


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது “t might be a rainbow chase” என்று தன் அமைச்சரிடம் வீரபரகேசரி சொல்ல,  அரசியல் பின்புலத்திலான உரையாடலில் அது ஏன் வானவில் பற்றி கேட்கிறார்கள் என கணேஷ் புரொபஸரிடம் கேட்கிறான். அதற்கு புரொபஸர் தரும் விளக்கத்தைப் பார்ப்போமா?

புரொபஸர்: வானவில்லைத் துரத்துவது பற்றி சொன்னேன் அல்லவா...  

கணேஷ்: ஆமா... சார் 

புரொபஸர்: அந்த காலத்தில் வானவில்லின் நுனி மண்ணில் எங்கு 
பதிகிறதோ அங்கு புதையல் கிடைக்கும் என ஒரு மூடநம்பிக்கை நிலவியது. நிறையப் பேர் இப்படி வானவில்லை துரத்தி புதையல் வேட்டைக்காக 
அலைந்தார்கள். இயல்பாகவே அவர்கள் முட்டாள்களானார்கள். அதனாலே வீண் முயற்சி, வீணான வேடிக்கை முயற்சி எனும் பொருளில் a rainbow chase எனும் சொற்றொடர் பயன்
பாட்டுக்கு வந்தது. மன்னர் பிரசார அமைச்சரின் கணிப்பை சாத்தியமில்லை என்றும் சொல்லும் போது தனிப்பெரும்பான்மை வெற்றி கிட்டத்தட்ட ஒரு rainbow chase என்றார். 
வீரபரகேசரி: ஆமாம். ஆனால் இப்போதைய சூழலில் மட்டும் தான். நானே அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு 
இந்நாட்டின் ஒரே பிரதமர், சக்கரவர்த்தி, கடவுள். தேர்தலில் சில பல வாக்குகள் குறைவாக விழலாம். ஆனால் அது ஒரு சிக்கலே அல்ல. It is a foregone conclusion. 

கணேஷ்: அப்படி என்றால்? 
புரொபஸர்: முன்கூட்டியே முடிவான தவிர்க்க முடியாத முடிவு. 
கணேஷ்: அது எப்படி? இது மக்களாட்சி அல்லவா? 
வீரபரகேசரி: ஹா... ஹா... தம்பி நீ 
இன்னமும் இப்படி வெள்ளந்தியாகவே இருந்தால் எப்படி? மக்களாட்சி என்பது ஒரு கற்பனை. அதனால் மக்களுக்குத் தீங்கே அதிகம் என கிரேக்க தத்துவஞானி பிளேட்டோவே சொல்லி இருக்கிறார்.  
கணேஷ்: உண்மையா சார்? 
புரொபஸர்: ஆமாம். Does not tyranny spring from democracy என அவர் The Republic நூலின் எட்டாவது 
பகுதியின் ஒரு உரையாடலில் கேட்கிறார். ஆதி கிரேக்கத்தில் தான் மக்களாட்சி தொடக்கம் கண்டது. அங்கு ஒரு மக்கள் சபை இருந்து, அதிலுள்ளோர் வாக்களித்து மன்னனைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்தது. இந்த மக்கள் சபையினர் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டி இருந்தது. அதனால் rhetoric எனப்படும் அலங்கார பேச்சுக் கலை அங்கு நடைமுறையில் இருந்தது. சிறந்த பேச்சாளர்கள் மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் விதமாகப் பேசி பிரசித்தமாகி தலைவர்களாக, மன்னர்களாக உருப்பெற்றனர். உண்மை, தகவல்கள், தர்க்கம் ஆகியவை பெருவாரியான மக்களிடம் எடுபடவில்லை. அச்சம், குழுவுணர்வு, வெறுப்பு ஆகிய அடிப்படையான உணர்ச்சிகளைத் தூண்டி மக்களிடம் அங்கீகாரம் பெறுவது சுலபம். ஆனால் அது மக்களாட்சியின் தார்மீகத்தை அழித்து விடுகிறது என பிளேட்டோ கருதினார். இப்படி மக்களைத் திசைதிருப்பி தம் சுயலாபத்துக்காக ஜனநாயகவாதிகள் பயன்படுத்துவது தவறு என்பதால் ஜனநாயகமே ஒரு தவறான ஆட்சிமுறை, அது சுலபத்தில் சர்வாதிகாரத்துக்கு வழியமைத்து விடும் என அவர் நினைத்தார். ஆதி கிரேக்கத்தில் அப்படி நடந்தும் இருக்கிறது. அதனால் தான் அவர் கடுமையாக மக்களாட்சி முறையை எதிர்த்தார். It is an ironic scenario.  

கணேஷ்: Ironic என்றால்? இரும்பு சம்பந்தப்பட்டதா?  
புரொபஸர்: சேச்சே. அது iron. அயன் என உச்சரிப்போம். இது irony. ஐரனி என உச்சரிப்போம். Irony என்றால் நகைமுரண்.  
கணேஷ்: நகைமுரண் என்றால்? 
புரொபஸர்: வெளிப்படையாகத் தெரியாத உள்முரண். உதாரணமாக, சந்தர்ப்பம் சார்ந்த நகைமுரண் } situational irony. ஒரு காவல் நிலையம் கொள்ளையடிக்கப்பட்டது என்று கேட்டால் நமக்கு உடனே சிரிப்பு வருமில்லையா? ஏனென்றால் அதில் உள்முரண் உள்ளது. "பாபநாசம்' படத்தில் நாயகன் கொலை செய்து விட்டு பிணத்தைப் புதிதாக கட்டப்படும் காவல் நிலையத்தில் புதைத்து விடுவான். அங்கு பிணத்தின் மேல் நின்றபடி போலீஸ் அதிகாரிகள் பிணம் எங்கே போயிற்று என தலையைப் பிய்த்துக் கொள்ளும் போது நமக்கு வேடிக்கையாக இருக்கிறது. இதுவும் situational irony தான். அப்படித்தான் ஜனநாயகம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என ஒருவர் சொல்வதும். 

ஜூலி: Brutus is an honourable man!

கணேஷ்: அது யாரு புரூட்டஸ்?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT