இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 292

DIN


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
அப்போது ஏழ்மையைக் குறிக்க poor as Job’s turkey எனும் idiom பயன்பாட்டில் ஏன் வான்கோழியைக் குறிப்பிடுகிறார்கள் என கணேஷ் புரொபஸரிடம் கேட்கிறான். புரொபஸர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போமா? 

புரொபஸர்: விவிலியத்தில் வரும் ஒர்க்ஷ, அதாவது தமிழில் யோபு எனச் சொல்வோமே, அந்த சுவாரஸ்யமான பாத்திரத்தை தெரியும் இல்லையா? 
கணேஷ்: ஆமா அவரைப் பற்றி படித்திருக்கிறேனே } உன்னதமான நீதிமானான யோபு எப்படி சாத்தானால் கடுமையாகச் சோதிக்கப்படுகிறார், படாதபாடுகள் பட்டு, தன் செல்வத்தை இழந்து, உறவுகளை இழந்து இறுதியில் எப்படி மீண்டு வருகிறார், எல்லாத் துன்பங்களுக்குப் பிறகும் இறைநம்பிக்கையை இழக்காமல் எப்படி   அவர் இருந்தார் என்பது உருக்கமானது. எனக்கு ரொம்பப் பிடித்த விவிலிய பாத்திரம் யோபு. ஆனால் யோபுவுக்கும் வான்கோழிக்கும் என்ன சம்பந்தம்? எனக்குப் புரியவில்லை.  

புரொபஸர்: சரி... நல்லது. இந்த யோபுவே இவ்வளவு ஏழ்மையில் பாடுபட்டிருக்கும் போது அவருடைய பண்ணையில் இருந்த வான்கோழியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்? அதற்கு யாரும் தீனி போட்டிருக்க மாட்டார்கள். அது வாடி வதங்கி மெலிந்து தவித்துப் போயிருக்கும் இல்லையா? 
கணேஷ்: ஓ... ஆமாம். அதனால் தான் யோபுவை விட யோபுவின் வான்கோழி எவ்வளவு கொடுமையான நிலையில் இருந்திருக்கும் என்பதைக் காட்ட poor as Job’s Turkey என சொல்கிறார்களா? 

புரொபஸர்: ஆமா, அதாவது யோபுவைப் போல வறுமையில் தவித்தார் என்பதை விட இது இன்னும் தீவிர  கொடுமையாக - கொஞ்சம் வேடிக்கையாகக் கூட இருக்கும். 
கணேஷ்: புரிஞ்சுது சார். 
தேர்தல் ஆணைய அமைச்சர் தன் போனில் எதையோ பார்த்து விட்டு உற்சாகமாகி எழுந்திருக்கிறார்: மன்னர் மன்னா! 
வீரபரகேசரி: என்னய்யா? 
தேர்தல் ஆணைய அமைச்சர்: தேர்தல் கணிப்புகள் வெளியாகி விட்டன. 
வீரபரகேசரி: தேர்தலை நாம் அறிவிக்கவே இல்லை. அதற்கு முன்பாகவா? 
பிரசார அமைச்சர்: மன்னா, நாம் தான் ஆட்சியின் முதல் நாளில் இருந்தே அடுத்த தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்து விட்டோமே. We have been preparing the ground for the resounding success of the next election since your first day at office.  

கணேஷ்: Prepare the ground என்றால்? 

வீரபரகேசரி: ஒரு வெற்றிக்கான அடித்தளத்தை அமைப்பது என சொல்வார்களே... அது. 
கணேஷ்: நன்றி மன்னா. 

தேர்தல் ஆணைய அமைச்சர்: ஆம் மன்னா, அதனால் தான் தேர்தல் என நாம் சொல்லும் முன்பே மக்கள் அதைப் பற்றி யோசித்து கணிப்புகளை வெளியிட்டு விட்டார்கள். Chance prepares the favoured mind.
வீரபரகேசரி: யோவ் அதுchance favours the prepared mind. அதாவது யார் கடுமையாக முயற்சி செய்து எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கே அதிர்ஷ்டம் அமையும். அதிர்ஷ்டம் ஒன்றும் நம் மடியில் வந்து விழுந்து விடாது. ஆனால் ஒற்றர்கள் நீங்க சொல்வதற்கு நேரெதிராக அல்லவா சொல்கிறார்கள்... 
பிரச்சார அமைச்சர்: என்ன மன்னர் மன்னா? 

வீரபரகேசரி: எனக்கு கிடைத்துள்ள அறிக்கைகள், தகவல்களின்படி வரும் தேர்தலில் நாம் பெருவாரியான வெற்றியைப் பெறுவது அசாத்தியம் -  it might be a rainbow chase. 

கணேஷ்: அதென்ன ரெயின் போ சேஸ்? வானவில் தானே? வானவில்லை யாராவது துரத்துவார்களா? 

புரொபஸர்: வானவில்லைத் துரத்துவது என்பதே எப்படியான ஓர் அழகிய உருவகமாக இருக்கிறது? அது உண்மையிலே நடக்குமா என்று நீ கேட்டாய் அல்லவா? அது நல்ல கேள்வி. இந்த உலகில் எல்லாவிதமான மனிதர்களும் இருக்கிறார்கள் } சாகசங்களை விரும்புகிறவர்கள், சூதாட்டத்தில் ஈடுபடுகிறர்கள், புதையல் வேட்டையில் ஈடுபடு
கிறவர்கள் என...  

கணேஷ்: ஆமாம். 

புரொபஸர்: அந்த காலத்தில் ஒரு மூடநம்பிக்கை நிலவியது } அது வானவில்லின் பிறப்பிடம், தோன்றுமிடம் சம்பந்தப்பட்டது. அன்றைய கதைகளில் இது பற்றின குறிப்புகள் வரும். நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT