இளைஞர்மணி

இதுவும் ஒரு சாதனை!

DIN

அமெரிக்கா, ரஷியா,  பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள சர்வதேச விண்வெளிநிலையம் (ஐ.எஸ்.எஸ்) இந்தியப் பெருங்கடலுக்கு மேலே 420 கி.மீ.  உயரத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகிறது. 

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை விண்கலம் மூலம் ஆய்வுப் பணிக்காக  அங்கு அனுப்பி வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில்  10 ஆண்டுகளில் இல்லாத சாதனை அண்மையில் நிகழ்த்தப்பட்டது.  ஐ.எஸ்.எஸ் } இல் ஒரே நேரத்தில் தங்கி பணியில் ஈடுபட்டுள்ள  விண்வெளி வீரர்களின்  எண்ணிக்கை 11 ஆக அதிகரித்ததே அந்தச் சாதனை!

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின்  விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்கள் ஐ.எஸ்.எஸ்.க்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டனர். ஏற்கெனவே அங்கு 7 பேர் தங்கியுள்ள நிலையில் இவர்களுடன் சேர்த்து இப்போது 11 பேர் தங்கியுள்ளனர்.  இவர்கள் அனைவரும் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான்,  பிரான்ஸ்  ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 11 பேரும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒரு வரலாற்றுத் தருணத்தைப் பறைசாற்றுகிறது.

"உலகம் முழுவதும் உள்ள கடினமான சூழ்நிலையில் எங்களுக்குத் தைரியத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன்'' என்று கரோனா சூழலைக் கூறி வாழ்த்தியுள்ளார் 
ஜப்பான் விண்வெளிநிறுவனத் தலைவர் ஹிரோஷி யமகவா. இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இப்போது 4 விண்வெளி வீரர்களையும்  ஏற்றிச் சென்ற  விண்கலமானது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டதாகும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிதாக இணைந்துள்ள 4 பேரும் 6 மாதங்கள் அங்கு தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபடுவர். ஏற்கெனவே 6 மாத ஆய்வுப் பணியை நிறைவு செய்த 4 விண்வெளி வீரர்கள் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவர்."ஐ.எஸ்.எஸ் } இல் நிறையப் பேர் இருப்பதால் அது  விரிவுபடுத்தப்பட வேண்டும்'' என நகைச்சுவையாக கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி நிறுவன இயக்குநர் ஜோசப்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 13 பேர் இருந்ததே முந்தைய சாதனை. 

நாசாவின் சொந்த விண்கலம் மூலமே ஐ.எஸ்.எஸ்.க்கு விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வந்தனர். 2011 } இல் அதை நிறுத்திய பிறகு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். 

-எஸ்.ராஜாராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT