இளைஞர்மணி

முகநூல்... புதிய சேவை!

4th May 2021 06:00 AM

ADVERTISEMENT

 

என்னதான் வீடியோ, கிராபிக்ஸ் என்று திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், ஒலி வடிவிலான பாடல்கள்தாம் அனைவரையும் வசீகரிக்கின்றன. அவரவர் மனநிலைக்கு ஏற்ற பாடல்கள் உற்ற துணையாகத் திகழ்கின்றன. பொது முடக்க காலத்தில் வீடியோக்களைவிட   பாடல்களைத்தான் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி மகிழ்கின்றனர். 

இதை உணர்ந்த முகநூல் நிறுவனம், "கிளப் ஹவுஸ்' என்ற பிரபல  இசைசெயலியைப் போல் "லைவ் ஆடியோ ரூம்ஸ்' என்ற புதிய சேவையை  அறிமுகம் செய்ய உள்ளது. இதில் பாடல்களைக் கேட்டு மகிழ்வது மட்டுமல்லாமல் நேரலையில் ஆடியோ வடிவில் உறுப்பினர்களுடன் விவாதமும் நடத்தலாம். இந்த விவாதங்களில் பங்கேற்கவும், ஒருவரின் இசை உருவாக்கத்தைக் கேட்கவும் பணம் செலுத்தும் புதிய சேவையையும் முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

முதலில் இந்த சேவை ஃபேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, இளம் ஆடியோ வித்வான்களை உருவாக்க நிதி திரட்டும் பணியையும் தொடங்க 
உள்ளது. மேலும், "சவுண்ட் பைட்ஸ்' என்ற புதிய சேவையும் சில மாதங்களில் தொடங்க  உள்ளது. டிக்டாக்கைப் போன்று ஆடியோ வடிவங்களில் சிறு பைல்கள் இருக்கும். முகநூல் மூலம் பயனாளிகள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் ஆடியோ பைல்களைப் பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

திரைப்படப் பாடல்களைப் பதிவேற்றம் செய்யும் செயலியுடனும் முகநூல் நிறுவனம் ஒப்பந்தம் செய்து அதில் உள்ள பாடல்களை முகநூல் பயனாளிகள் கேட்டு மகிழவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் முகநூல் நிறுவனம் இளைஞர்களை ஆடியோ வசப்படுத்த உள்ளது என்றே கூறலாம்.

- அ.சர்ஃப்ராஸ்
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT