தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலை
நிறுவனம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
பணி: உதவி கணக்கு அலுவலர்
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.56,300 - ரூ.1,78,000
தகுதி: பட்டயக் கணக்கு(சிஏ) அல்லது ஐசிடபுள்யூஏ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 -ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் ரூ.1000 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.tangedco.gov.in/linkpdf/Notification-AAO-2021.pdf என்ற லிங்க்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து
கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2021
மத்திய அரசில் வேலை
பணி: மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப் (எம்டிஎஸ்)
காலியிடங்கள்: 8,500
சம்பளம்: ஏழாவது சம்பளக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.01.2021 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://ssc.nic.in. என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்காலப் பயன்பாட்டிற்காக அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
மேலும் எழுத்துத் தேர்வு, வயதுவரம்பு சலுகை போன்ற விவரங்கள் அறிய: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_05022021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.03.2021
சென்னை உரத் தொழிற்சாலையில் வேலை
நிறுவனம்: மெட்ராஸ் பெர்ட்டிலைஸர்ஸ் லமிடெட்
பணியிடம்: சென்னை மொத்த காலியிடங்கள்: 45
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: பிரிவு 1 - கிராஜுவேட் அப்பரன்டீஸ்
1. கெமிகல் இன்ஜினியரிங் (கெமிகல், பெட்ரோ கெமிகல், பெட்ரோலியம், பெட்ரோ) -13
2. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் -3
3. எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 1
4. இன்ஸ்ட்ரூமென்டேஷன் (ஐசிஇ, இஐசி, இன்ஸ்ட்ரூமென்டேஷன் -1
5. சிவில் இன்ஜினியரிங் -1
6. ஐடி/ சிஎஸ்/ இசிஇ -2
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத் தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ. 4,984
பிரிவு 2- டெக்னீசியன் (டிப்ளமோ) அப்பரன்டீஸ்
1.கெமிகல் இன்ஜினியரிங் (கெமிகல், பெட்ரோ கெமிகல், பெட்ரோலியம், பெட்ரோ) -15
2.மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் -4
3.எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 2
4. இன்ஸ்ட்ரூமென்டேஷன் (ஐசிஇ, இஐசி, இன்ஸ்ட்ரூமென்டேஷன் -2
5.சிவில் இன்ஜினியரிங் -1
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ஊக்கத் தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ. 3,542
விண்ணப்பிக்கும் முறை: http://boat}srp.com அல்லது www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் http://boat}srp.com/wp}content/uploads/2021/02/MFL_2020}21_Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.03.2021
தமிழக அரசு பள்ளிகளில் வேலை
பணி: போஸ்ட் கிராஜுவேட்/ பிசிகல் எஜு
கேஷன் டைரக்டர்ஸ் கிரேடு - ஐ
காலியிடங்கள்: 2098
சம்பளம்: மாதம் ரூ.36,900 - ரூ.1,16,600
தகுதி: உயிர் வேதியியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், ஆங்கிலம், நிலவியல், வரலாறு, இந்திய கலாசாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், தமிழ், விலங்கியல் போன்ற பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
தேர்வுக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2021 ஜூன் 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெறும்.
இது தொடர்பான மேலும் விவரங்கள் அறிய: http://trb.tn.nic.in/pg2021/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.03.2021