இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

16th Mar 2021 06:00 AM

ADVERTISEMENT


முக நூலிலிருந்து....


விதைகளை மென்று தின்னும் 
பழக்கமில்லாதவை என்பது கூட 
ஒரு காரணமாக இருக்கலாம்...
மரங்கள் பறவைகளை நேசிப்பதற்கு.

இரா.எட்வின்


எதிர்பார்ப்பற்று
நிகழ்தல் சாத்தியமே
இல்லை எதுவும்... 
அன்பும் பண்பும் மட்டும்
விதிவிலக்கா என்ன ? 

ADVERTISEMENT

நிறைமதி

 

எப்போதும்
எதிர்பார்ப்புகள் 
மகிழ்ச்சியைக் 
கொன்றுவிடும்.

சுந்தரபுத்தன்

 

நீர் தடையில்லை,
வா அருகினில்.
சிறகு நீருக்கும் உண்டு
அலையாக...
வான் பார்க்கிறது,
நாணம் குமிழியிட
நீருக்குள் ஒளிந்து 
கொள்வோமா?

ஆசு சுப்பிரமணியன்

 

சுட்டுரையிலிருந்து...

என்  கைகளின் உதவி  இல்லாமலேயே
எழுதுகிறது  எனது  பேனா...
சட்டைப்  பாக்கெட்டுக்குள்
பேனா... மை
டீ இன்னும் வரலை

 

டூ வீலரை உண்மையிலேயே ரிப்பேர்னு
தள்ளிக் கொண்டு போனாலும்...
""பெட்ரோல் இல்லையா?'' 
என்று கேட்கும் சமூகத்தில் வாழ்கிறோம் .

செங்காந்தள்


முன்பு எதற்கெல்லாம்
கோபம் வந்ததோ,
இப்போது அதை எல்லாம் 
கடக்கப் பழகிவிட்டேன். 
விரக்தியா... இல்லை
பக்குவமான்னு  தெரியல. 

பனித்துளி

 

நிராகரித்தாலும் 
நீயென் நிலவு...
நகர்ந்து கொண்டே 
இருந்தாலும் 
நான் உன் மேகம். 

மின்மினி


வலைதளத்திலிருந்து...

உடலின் மிகப் பெரிய உறுப்பு எது? பலரால் யூகிக்க முடியாது. அந்தக் கேள்விக்குப் பதில்... மனிதனின் எடையில் 12 முதல்15 சதவிகிதம் வரை தோல்தான். பலரும் நினைப்பதுபோல் தோல், ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கு வாழும் இடம் கொடுத்து, உடலுக்குத் தீங்கு செய்ய நினைக்கும் கிருமிகளை, உடலுக்குள் புகவிடாமல் செய்யும். அதேசமயம், முக்கிய மருந்துகளை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கும் புத்திசாலி. பாதுகாப்பு அரண். 

உடலின் வெப்பத்தைச் சீராகவைத்திருப்பது, "விட்டமின் டி'-யை உருவாக்குவது, சருமத் துளைகள் மூலம் சுவாசிப்பது, யூரியா போன்ற கழிவை வெளியேற்றுவது, கொழுப்பு, நீர் முதலான பொருட்களைச் சேமித்துவைப்பது எனப் பல வேலைகளைச்  செய்யும் உறுப்பு அது. அதனாலேயே தோலில் வரும் நோய்களின் பட்டியல் கொஞ்சம் நீளம்.

தோலின் பணியும் பயனும் அறியாது, அதில் மேற்கத்திய முலாம் பூசி (அழகூட்டி என்ற பெயரில்) அதில் நாம் நடத்தும் வன்முறைகள், தோலையும் தாண்டி உட்சென்று தொல்லைகள் தருபவை.  

ஏறத்தாழ 80,000 "அழகுபடுத்திகள்' உலகச் சந்தையில் உள்ளன. ஒவ்வொரு குழந்தையும் போடும் நெயில் பாலீஷில் கலந்துள்ள காரீயம் உண்டாக்கும் அபாயம் பற்றி  பெற்றோர்களுக்குத் தெரியாது. குளிக்காமல் கொள்ளாமல், கக்கத்தில் மணமூட்டி அடித்து கல்லூரிக்குக் கிளம்பும் இளசுக்கு, அதிலுள்ள ஃபார்மால்டிஹைடு, எத்திலீன் ஆக்ûஸடு வருங்காலத்தில் குழந்தைப் பேறுக்குத் தடை உண்டாக்கும் எனத் தெரியாது.  

 முகப் பூச்சுக்களில் இருக்கும் தாலேட், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன், சில வகை பிளாஸ்டிசைசர்ஸ், பாரபன்கள் (பெரும்பாலான க்ரீம், ஷாம்புக்களில் சேர்க்கப்படும் பிரிசர்வேட்டிவ் பொருள்), நிறமிகளுக்காகச் சேர்க்கப்படும் வண்ண நானோ துகள்கள்... இவை அனைத்தும் தோலின் இயற்கை அரணை உடைத்து உடலுக்குள் உறிஞ்சப்பட்டு, "அழகான நோயாளியை' உருவாக்கக்கூடும் என்கிறது அறம் உள்ள மருத்துவ அறிவியல்!

http://senkanthal.blogspot.com/

ADVERTISEMENT
ADVERTISEMENT