இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

DIN

முக நூலிலிருந்து....

நூறு கிளை நீட்டி ஆயிரம் பூப்பூத்து
லட்சம் இலையசைத்தால் உன்னழகில்
எங்கென அமரும் இச் சிறுகுருவி

பழநிபாரதி



நீங்கள் உட்பட உங்களுக்கு யாரையும்  பிடிக்கவில்லையா?
நீங்கள் இலக்கியவாதி ஆகி விட்டீர்கள் என்றே பொருள்.

டிகே கலாப்ரியா


ஒரு நாளுக்கு சுமார் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை
கணினி முன் இருந்துவிட்டு...
அதன்பின் செல்போனும் டிவியும் பார்ப்பதென்பது, 
எவ்வளவு கடினமான ஒன்று
என சமீப காலமாக உணர்கிறேன். 

அபி  சார்லி


வெளிப்படையாகப் பேசுவதில்
இருக்கும் சிக்கல் புரிகிறது. 
வெளிப்படையாகப் பேசாமல் இருப்பதில்
இருக்கும் சிக்கல் புரிவதில்லை... 
அது உயிர்கொல்லி. 

 -தமிழ்மணவாளன்


சுட்டுரையிலிருந்து...

என்ன காரணமென்றே தெரியவில்லை...
சொந்தபந்தங்கள்  கூட சண்டையின்றிப் பிரிந்து செல்கிறார்கள்!

செல்வமணி   

யாருக்கும் விளக்கம் சொல்லத் 
தேவையில்லாத நிலையே...
சுதந்திரம் எனப்படுகிறது.

சாரல்

நான் நானாக, இதுவரை... 
யாருக்காகவும்  என்னை 
மாற்றிக் கொள்ளவில்லை...
எனக்காக யாரையும்
 மாறச் சொன்னதுமில்லை.

இன்ஷி

இதுவும் கடந்து போகும் என்பது உண்மைதான்...
ஆனால் கடந்து போன எதுவும் மறந்து போகாது.

யாழினி

வலைதளத்திலிருந்து...

தாழ்வான சுய மதிப்பீடு உருவாவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. பால்ய காலத்தில் உருவாகும் தனிமை, பாலியல் சிக்கல்கள், அடையாளச் சிக்கல்கள், கொடூரமான அவமானம், இவை  முக்கியமானவை. எல்லாவற்றையும் விட ஒருவரின் இயல்பான குணம். ஒரே போன்ற அனுபவங்களைக் கொள்ளும் இருவரில் ஒருவர் அதனால் புண்படுவதும், மற்றவர் அதை இயல்பான விஷயமாகப் பார்ப்பதற்கும் குணத்திலிருந்து வரும் சுய மதிப்பீடும் காரணம். சமூக மதிப்பீட்டிற்கும் சுய மதிப்பீட்டிற்கும் கூட உறவு இருக்கிறது. சிலர் தங்களின் கிராமப் பெயரை, குல தெய்வத்தின் பெயரைச் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.

இந்த தாழ்வு மனப்பான்மை தன்னைக் குறித்து பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்திலிருந்து உருவாவது. தன்னைத் தாழ்வாகவும் பிறரை உயர்வாகவும் கருதும் எண்ணம் இதிலிருக்கிறது. தாழ்வு மதிப்பீட்டின் முக்கியமான பிரச்னை தனக்கு எதையும் சரியாகச் செய்யத் தெரியாது என்ற எண்ணம்தான். நகரத்து மனிதர்கள் விஷயம் அறிந்தவர்கள், கிராமத்தவர்கள் விஷயம் அறியாதவர்கள் என்ற சமூக மதிப்பீடு ஒருவர் தன்னைப்பற்றி கொள்ளும் தாழ்வு மதிப்பீடாக உருமாறலாம். இங்கு தாழ்வின் காரணம் நகரம் ல கிராமம் என்ற எதிரடைவுகள்தான். சமூகத்தின் வரலாற்றுப் போக்கைப் புரிந்து கொள்ளும் போது அவர்களுக்கு இந்த தாழ்வு மதிப்பீடும் அதனாலான தாழ்வு மனப்பான்மையும் விலகலாம்.

இந்த மதிப்பீடுகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட மனம் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கல். ஆனால் ஒருவர் அதை உணரும் போதே பாதி சிக்கலை கடந்துவிடுகிறார். அதன் பின் அவர் செய்ய வேண்டியது சுய பரிசீலனை. பிறகு ஆலோசனைகளும் புத்தகங்களும் உதவலாம். ஒரு நல்ல வெற்றி,  அவருக்கு தன்னை குறித்த நம்பிக்கையை அளிக்கலாம். மேலே சொன்னது போல குணம் கூட முக்கிய காரணம்தான். ஆனால் தன்னுணர்வுதான் இந்த சிக்கலிலிருந்து விடுபட முதல் படி.

http://sarwothaman.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT