இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 284

ஆர்.அபி​லாஷ்


ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.

வீரபரகேசரி: உள்துறை அமைச்சரே, தேர்தல் ஆணைய அமைச்சரே!
இருவரும் எழுந்து நின்று வணங்குகிறார்கள்: உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நிற்கிறோம் மன்னா.

வீரபரகேசரி: இருக்கட்டும் இருக்கட்டும்! தேர்தலில் நாம் ஜெயிப்பது உறுதியாகி விட்டது. Why dont we set the ball rolling right now?

தேர்தல் ஆணைய அமைச்சர்: மன்னர் மன்னா, பந்து எதுக்கு? 
உள்துறை அமைச்சர் அவரிடம்:  மன்னர் நாம் அடுத்து திறக்கப் போகும் பிரம்மாண்டமான கால்பந்து அரங்கைப் பற்றி பேசுகிறார் என நினைக்கிறேன். 
தேர்தல் ஆணைய அமைச்சர்: மன்னர் மன்னா, அதைப் பற்றி ஏற்கனவே யோசித்து வைத்து விட்டேன். அந்த அரங்குக்கு உங்கள் பெயரையே சூட்டியிருக்கிறோம். அது மட்டுமல்ல, வீரர்களின் முதுகில் உங்கள் மனைவியரின் செல்லப் பெயர்களை பொறிக்கச் சொல்லி இருக்கிறேன். 

வீரபரகேசரி: பெயர் சூட்டுவது நல்ல விசயம் தான். ஆனால் முதுகில் பெயர் எழுதினால் என் ராணியர் புகைவார்கள். They will get their knickers in a twist. ஒவ்வொருத்தியும் தன் பெயர் மட்டும் தான் இருக்கணும் என என் தலையைத் தின்னுவாள். 

கணேஷ்: என்னது அந்தப்புர ராணிகள் நிக்கர் மட்டுமா அணிகிறார்கள்?

ஜூலி: நீ வேறே! அதோட அர்த்தமே வேறே. 

கணேஷ்: ஏன் பெண்களுக்கு ஆடை சுதந்திரம் இல்லையா? 

ஜூலி: இப்படி ஆபாசமா நினைக்கிறதை நிறுத்து. அதுக்கு பெண்ணிய நியாயம் தருவதையும் நிறுத்து. Don't be a faux feminist.

கணேஷ்: என்னய்யா ஒண்ணுமே புரியாத மாதிரி பேசுறீங்க? 
ஜூலி: Feminist என்றால் பெண்ணியவாதி. அதாவது பெண் சமத்துவத்துக்காகப் பேசுகிறவர். 

கணேஷ்: அது தெரியாதா எனக்கு? 

ஜூலி: Faux feminist  என்றால் போலியான பெண்ணியவாதி. பெண்களிடம் நல்ல பெயர் வாங்க போலியாக பெண்ணுரிமை பேசுகிறவர்கள். தங்களுடைய தேவைக்காக பெண்ணியத்தை வளைக்கிறவர்கள். A pseudo feminist.

கணேஷ்: ஓ! நான் என்னவோ நீ என்னைத்தான் சொல்றேன்னு நினைச்சேன். பரவாயில்ல. Continue. 

ஜூலி: க்கும்... To get one's knickers in a twist என்றால் தேவையில்லாமல் ஓர் அற்ப விசயத்துக்காக கடுப்பாவது. அதாவது to be cantankerous or contentiously touch. ரொம்ப டிராமா போடாதேன்னு பொருள். இது ஒரு நக்கலான சொல்லாடல். இது பிரிட்டனில் உள்ள வெள்ளைக்காரர்கள் அதிகமும் பயன்படுத்துகிற சொல்லாடல். இதன் இன்னொரு வடிவம் to get one's knickers in a knot.  இது ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் புழக்கத்தில் உள்ள சொல்லாடல்.  

கணேஷ்: ஆனா நிக்கருக்கும் கோபத்துக்கும் என்ன சம்பந்தம்? 

ஜூலி: அதாவது நீ போடுகிற உள்ளாடையை சரிவர அணியாமல் கால் அதற்குள் தாறுமாறாக மாட்டிக் கொண்டால் என்னவாகும்? 

கணேஷ்: ஹி ஹி! 

ஜுலி: அப்போ கடுப்பாகி கத்துற மாதிரின்னு வச்சுக்கயேன். 

வீரபரகேசரி: அப்புறம், நாம ஏன் இப்போ கால்பந்து மைதானத்துக்கு பேரிடுவது பற்றியெல்லாம் பேசுறோம்? 

தேர்தல் ஆணைய அமைச்சர்: மன்னா நீங்க தான், கால்பந்து ஆடணுமுன்னு சொன்னீங்க? 

வீரபரகேசரி: யோவ் நீயெல்லாம் ஸ்கூலுக்கு போனியா இல்லியா? 

தேர்தல் ஆணைய அமைச்சர்: மன்னர் மன்னா, நான் பன்னிரண்டாம் வகுப்பு இறுதிப்பரீட்சை   பாஸ் பண்ணிருக்கேன். அடுத்தது நான் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போது... 

வீரபரகேசரி: போது போதும்! முடியல. என் தப்பு தான். இப்போ it has come back to bite. உம்மையெல்லாம் வச்சு எப்படிய்யா காலம் தள்ளுறது? 

தேர்தல் ஆணைய அமைச்சர்: மன்னா நான் உங்கள் அடிமை! 

கணேஷ்: மன்னர் ஏன் அவரைத் திட்டுகிறார்? அவர் பந்தைப் பற்றித் தானே பேசினார்?

ஜூலி: Set the ball rolling என்றால் பொருளே வேறு.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT