இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 283

2nd Mar 2021 06:00 AM | ஆர்.அபிலாஷ்

ADVERTISEMENT

 

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது precarity எனும் சொல்லின் பொருள் என்ன என விளக்குகையில் அது லத்தீனில் இருந்து தோன்றிய சொல் என்கிறார். ""இனி கடவுள் விட்ட வழி'' என அதற்கு பொருள் வரும் என்கிறார். அதில் இருந்து எப்படி precarity தோன்றியிருக்கக் கூடும்? அதோடு கணேஷ் sore heads, squawkers and whiners ஆகிய சொற்களின் பொருளையும் கேட்கிறான். புரொபஸர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போமா?

புரொபஸர்: லத்தீனில் precarius என்றால் something obtained through prayer என அர்த்தம். அதாவது நடை முறையில் தீர்வில்லாத ஒன்றை கடவுளிடம் விட்டு விடுகிறோம் அல்லவா? பழைய படங்களில் ஆஸ்பத்திரியில் யாராவது சாகக் கிடக்கும் போது டாக்டர் தோன்றி God is great  என்பாரே அதுதான் இந்த நிலை. லத்தீனில் அப்படியான பொருளில் தான் இது பயன்படுத்தப்பட்டது. 
அதாவது dependent on the will of another. 
கணேஷ்: அருமை சார். இனி இதை மறக்க மாட்டேன். God is great எனத் தோன்றினாலே precarious நினைவுக்கு வந்து விடும். ஆனால் நீங்க இதை நம்புறீங்களா?
புரொபஸர்: இல்லை. எந்தச் சம்பவம், செயல் நடந்தாலும் அதில் மனிதனுக்கு ஒரு பங்கு உண்டு என நினைக்கிறேன். முழுக்க கை கழுவி எல்லாவற்றையும் கடவுள் தலையில் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆபத்தான சூழலிலும் அதைப் புரிந்து ஏற்க, எதிர்த்து நிற்க ஒரு மனிதன் இருக்கிறான். Perseverance என சொல்கிறோமே, விடாமல் முயல்வது, அது தான் மனிதனின் அற்புதமான இயல்பு. அது இருக்கும் வரைprecarity-ஐ அஞ்ச வேண்டியதில்லை. சரி, அடுத்து நீ கேட்ட அச்சொற்களுக்கு வருகிறேன். பொதுவாக நம்மை எதிர்த்து ஒருவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்; அது நம்மை எரிச்சல்படுத்துகிறது என்றால் நாம் அவரை sorehead என்று சொல்வோம். Sore என்றால் தேவையில்லாமல், நியாயமான காரணமில்லாமல் ஒருவர் இன்னொருவர் மீது கோபமாக இருப்பது. உதாரணமாக,  sore loser என சொல்லுவோம். தோல்வியை நிதானமாக எதிர்கொள்ளாமல் அடுத்தவர்கள் மீது, தான் தோல்வியுற்ற சூழல் மீது பழி சுமத்துவது தான் sore losers இன் இயல்பு. Sorehead என்பது ஒரு கொச்சை வழக்கு. அதன் பொருள் a person who has a tendency to be angry or to feel offended சமூக வலைதளங்களில் அத்தகையோரை அதிகமாகப் பார்ப்போம். என்ன எழுதினாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து பொருமுவார்கள்.

கணேஷ்: ஆமா. எங்கிட்டயே ஒண்ணும் இல்லாத விசயங்களுக்காக ஜன்மப் பகை வளர்த்து கிட்டவங்க பேஸ்புக்கில் உண்டு. ஆனால் நேரில் சந்திக்கும் போது ரொம்ப நல்லவங்களா பேசுவாங்க. 
புரொபஸர்: அடுத்தது squawkers. இதை squatters உடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. Squatter என்றால் a person who unlawfully occupies an uninhabited building or unused land. அதாவது பொது நிலத்தை ஆக்கிரமித்து அங்கு வாழ்கிறவர்கள். பெரும்பாலும் சொந்தமாய் வீடோ நிலமோ பணமோ வசதியோ இல்லாதவர்கள். அயல்நாடு
களில் சாதாரண மக்கள் கூட squatters ஆவதுண்டு. ஆனால் squaker என்றாலே சத்தமாக விமர்சிப்பவர்கள். எதுக்கெடுத்தாலும் சண்டை போடுறான்டா என சில பேரைப் பற்றி சொல்லுவோமே அவர் தான் squawker.

ADVERTISEMENT

கணேஷ்: சார், எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன் கிட்டே போய் எதாவது நல்ல விசயம் பற்றி சொல்லவே பயமா இருக்கும்.  
புரொபஸர்: ஏன்? 
கணேஷ்: உடனே அதில் ஏதாவது ஒரு தப்பைக் கண்டு பிடிச்சு என்னிடம் சண்டை போட ஆரம்பிச்சிருவான். சரி போகட்டும் என மன்னிப்புக் கேட்டால், ஏன்டா இப்போ தேவையில்லாம 
மன்னிப்பு கேட்குறே? என அடுத்த 
சண்டையை ஆரம்பிச்சிருவான். இப்படி நசநசன்னு எதுக்கெடுத்தாலும் சண்டை போடுவான் சார். இதை என்ன 
சொல்றது? 
புரொபஸர்: Whining இப்படியானவங்களை ஜ்ட்ண்ய்ங்ழ்ள் என சொல்லுவோம். Someone who complains a lot in a peevish  - அதாவது எரிச்சலுற்றுக் கொண்டே - manner. சில பேர் தன்னிரக்கத்துடன் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. 
கணேஷ்: "என்னால முடியலன்னு சொல்றே அப்படித்தானே?'  என எதுக்கெடுத்தாலும் புலம்புறவங்க...
புரொபஸர்: கரெக்ட். அவங்களும் whiners தான்.

(இனியும் பேசுவோம்)

Tags : வாங்க இங்கிலீஷ் பேசலாம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT