இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

DIN

முக நூலிலிருந்து....


செக்கு மாடுகளிடம் வழி கேட்காதீர்கள்...
உங்களை சுற்ற வைத்து விடும் 

பொள்ளாச்சி முருகானந்தம்.

மனிதன் எல்லாவற்றைப் பற்றியும் எழுதிவிட்டான்...
ஒன்றைத் தவிர, 
அது: கடவுளின் சுயசரிதை.

பாதசாரி விஸ்வநாதன்

வசிப்பும் வாசிப்பும் வேறு வேறு அல்ல...
நினைவில் காடுள்ள மனிதர்களுக்கு. 

பழநிபாரதி


முழு கண்ணாடி  எத்தனை துண்டாய் உடைந்தாலும்,
கடைசித் துண்டு உள்ளவரை வானம் காட்ட மறுப்பதில்லை. 
எனக்குள்ளும் நிறைய கண்ணாடித் துண்டுகள் அன்பென்பது
என் கண்ணாடியில் வானம்.

குமரன் விஜி

சுட்டுரையிலிருந்து...

தொலைதல் மட்டுமே கண்டடைவதற்கான ஒரே வழி.
ஆகவே, தொலைந்து போங்கள்.
காலத்திலிருந்தும், 
காதலிலிருந்தும்,
கொஞ்சம் சிரத்தையுடன் உங்களிடமிருந்தும்.

மிருகம்

சொற்கள்  அம்பை விடக் கூர்மையானவை.
அது  உயிருக்குள் ஊடுருவிப் பாயும்.
அதனால்தான் உதட்டிற்கு  வில்லின் வடிவமும்...
அம்பிற்கு  நாக்கின் வடிவமும். 

என்னவனைத் தேடி

சரியோ, பிழையோ தைரியமாகப் பேசிடு.
பதில் சொல்லத் தயங்கினா பாதிப் பழியை நம்ம மேல போட்டு விடுவாங்க.

பிரம்மச்சாரி

தன் வாக்குத்திறனால் எதிராளியைக் கடித்துக் குதறியேனும்
வெற்றி கொள்வதன்றி...
உண்மையை அறிய விரும்புவதில்லை இம்மனித இனம்.

வாசகி


வலைதளத்திலிருந்து...

கூட்டைக் கலைக்கக் கூடாது எனும் எண்ணம் ஏற்பட்டு அதற்காகப் பல தியாகங்களைச் செய்யும் போது அங்கே சகிப்புத்தன்மையை நாம் காண முடிகிறது. இதுவும் நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பண்பு. ஆனால், கூட்டைக் காப்பாற்றும்போது இருக்கும் இந்தச் சகிப்புத்தன்மை, பாம்பைக் கண்டவுடன் அடிக்கும் போதும், யானையும், காட்டுப்பன்றியும் நமது விளைநிலங்களை சேதப்படுத்தும் போதும் காணாமல் போய்விடுகிறது. அதாவது, நமது உயிருக்கும், உடைமைக்கும் தீங்கு ஏற்படும் என நாம் என்னும் போது மேற்சொன்ன பண்புகள் நம்மிடையே இருப்பதில்லை. அதனால், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் செய்யத் துணிகிறோம்.

வேகமாக மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில், அதற்காக  இயற்கை வளங்களைக் குன்ற வைக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் இவ்வேளையில்,  மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

இயற்கை பாதுகாப்புக்கு அறிவியல் இன்றியமையாதது. அதற்கு இணையாக மக்களின் ஆதரவும் இன்றியமையாதது. இயற்கையின்பால் இயல்பாகவே மனிதர்களுக்கு உள்ள நல்லுணர்வுகளைப் போற்றி, அவை எவ்வேளையிலும் குன்றாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும். இதை இயற்கை ஆர்வலர்களும், இயற்கைக் கல்வியாளர்களும் புரிந்து கொண்டு, அறிவியல் தரவுகளையும், முடிவுகளையும் மட்டுமே எடுத்துச் சொல்லாமல், மக்களுக்கு இயற்கையின் மேல் உணர்வுப்பூர்வமான ஈர்ப்பையும், பிடிப்பையும் கொண்டு வர  பாடுபட வேண்டும். குறிப்பாக ஆட்சிபுரிவோருக்கும், தொழிலதிபர்களுக்கும், கொள்கை வகுப்பவர்களுக்கும் இந்தப் பண்புகளைப் பற்றி  சரியான தருணங்களில் எடுத்துச் சொல்ல வேண்டும். விட்டுக்கொடுத்தலும், அனுசரித்துப்போவதும் மனிதர்களிடையே மட்டும் இல்லாமல் இயற்கையுடனும் இருக்கவேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். 

https://uyiri.wordpress.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT