இளைஞர்மணி

சிரிக்கும்... கோபப்படும் ரோபோ!

8th Jun 2021 06:00 AM | - அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

மனிதர்களின் பணிச்சுமையைக் குறைக்க உருவாக்கப்பட்ட ரோபோக்கள், இன்று அபாயகரமான பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
தொழிற்சாலைகளில் இயந்திரங்களாகப் பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் இன்று மருத்துவமனை, ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
என்னதான், ரோபோக்கள் மனிதனுடன் இணைந்து பணியாற்றினாலும், அவற்றின் வடிவமைப்பும், தோற்றமும், இறுக்கமான முகமும்,  அவை வெறும் தொழில்நுட்பக் கருவிகள்தாம் என்பதையும்  மக்களுக்கு அவ்வப்போது நினைவுப்படுத்தி விடுகின்றன.
இந்த நிலையை கொலம்பியா பல்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாற்றியிருக்கின்றனர். ரோபோக்களுக்கும் 
மனிதர்களின் முகபாவ அசைவுகளைக் கொடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டு பிடித்துள்ளனர்.
ரோபோக்களின் முகம் மனிதனைப்போல் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதில் பயன்படுப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கால் மனித முகபாவங்களின் அசைவுகளை அளிப்பது மிகவும் கடினமாக இருந்து வந்தது.
இதைப் போக்க 42 தசை அசைவுகளை  ஏற்படுத்தும் வகையில் மனித தோல் போன்று ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி, அதற்கு 6 உணர்வுகளை அளித்துள்ளனர்.
கோபம், வெறுப்பு, அச்சம், மகிழ்ச்சி, சோகம், ஆச்சரியம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஏற்படும் மனித முகபாவனைகளை ரோபோவுக்கு அளித்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
""ரோபோவின் மூளைப்பகுதி அடங்கிய சிறிய இடத்தில் இதற்கான அனைத்து தொழில்நுட்பங்களையும் அடங்க  வைத்துச் செயல்படுத்துவதுதான் இதில் பெரும் சவாலாக இருந்தது'' என்று ஆராய்ச்சியாளர் ஜன்வர் பராஜ் தெரிவிக்கிறார்.
எதிரே இருக்கும் ஒருவரின் உணர்வை வெளிப்படுத்தும் முகபாவனைக்கு ஏற்ப ரோபோவும் தனது முகத்தை மாற்றிக் கொண்டு இயங்கினால் மனித - ரோபோ தொடர்பு இயல்பாக இருக்கும்'' என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் உறுதி அளிக்கின்றனர்.
""ரோபோவை உண்மையில் சிரிக்க வைத்தது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்தது'' என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ரோபோ தொழில்நுட்பத்தை வருங்காலத்தில் வீடுகள், பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம் என்றும்  அவர்கள் தெரிவிக்கின்றனர். 

Tags : Laughing ... angry robot!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT