இளைஞர்மணி

பிரபலங்களைக் கண்டறியும்  தொழில்நுட்பம்!

கோமதி எம். முத்துமாரி


வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பங்களில் இப்போது அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து வருவது ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு.தொழில் நுட்பமாகும். அனைத்துமே கணினி மய
மாகிவிட்ட சூழ்நிலையில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மேம்பட்ட வளர்ச்சிக்காக அதிநவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவுக்கு மாறி வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு என்பது ஓர் அறிவியல் தொழில்நுட்பம். கணினி அறிவியலின் ஒரு பகுதி என்று கூறலாம். மனித மூளையில் உள்ள நியூரான்களை அடிப்படையாக வைத்து இந்த தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் முதல் ரோபோக்கள் வரை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு மூலமாக இன்று பல துறைகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக கல்வி, மருத்துவத்துறை தொழில் துறை, ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் துறைகளில் செயற்கை நுண்ணறிவு எதிர்பாராத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் ஆண்டுதோறும் செயற்கை நுண்ணறிவு ஈடுபடுத்தப்படும் விகிதம் 30 சதவீதம் அதிகரித்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மனிதன் ஒரு வேலையைச் செய்து முடிக்க பல மணி நேரங்கள் ஆகும் நிலையில் செயற்கை
நுண்ணறிவு மூலம் கட்டமைக்கப்பட்ட இயந்திரம் அதைச் சில நொடிகளில் முடித்து விடுகிறது. இதனால் உற்பத்தி பெருகுகிறது. நேரம் குறைகிறது; பணியாளர்கள் குறைக்கப்படுகிறார்கள். மனிதனைக் காட்டிலும் மிகத் துல்லியமாக இயந்திரங்கள் வேலையை முடிக்கின்றன.
இதனால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வேலைவாய்ப்புகளும் தற்போது அதிகரித்து வருகின்றன.
ஒரு காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் "மென்பொருள்' துறை எவ்வாறு கொடிகட்டிப் பறந்ததோ இன்று அந்த இடத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருக்கிறது என்று கூறலாம்.
செயற்கை நுண்ணறிவு அனைத்துத் துறைகளிலும் கையாளப்பட்டு வரும் நிலையில் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பிரபலங்களைப் பயன்படுத்தி அவர்களின் மூலமாக தங்களுடைய உற்பத்தி பொருள்களை, சேவைகளை விளம்பரம் செய்து சந்தைப்படுத்தும்முறையிலும் (இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்) இப்போது பயன்படுத்தப்படுகிறது.
மார்க்கெட்டிங் துறையில் சமூக வலைதளங்கள் ஒரு முக்கிய ஊடகமாக மாறிவரும் நிலையில், அதன் இன்னொரு பிரிவாக இந்த இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் பயன்படுத்தப்படுகிறது.
சமூக ஊடங்களில் அதிக அளவில் மக்களால் பார்க்கப்படுகிறவர்களைக் கண்டறிவதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தபடுகிறது.
உதாரணமாக, சமையல் கலை நிபுணர் ஒருவர் தன்னுடைய யூ ட்யூப், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல உணவு வகைகளைத் தயாரிப்பது குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் என்றால் அவரைப் பின்தொடரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் குறிப்பிட்ட விளம்பரத்துக்குப் பொருத்தமானவரா என்பதைக் கண்டறிய முடியும்.
இப்போது ஓர் உணவு நிறுவனம் தன்னுடைய ஒரு பொருளை குறிப்பிட்ட பிரபலம் மூலமாக விளம்பரம் செய்து மக்களிடம் அறிமுகம் செய்ய முடியும். இதனால் அவரைப் பின்தொடர்பவர்கள், நிறுவனம் அறிமுகப்
படுத்தும் பொருள் குறித்து அறிவதோடு அதனை வாங்கு
வதற்கும் முற்படுவர். இதன் மூலமாக புதிய தயாரிப்பு மீதான மக்களின் நம்பகத் தன்மை அதிகரிக்கும். இதன் எதிரொலியாக விற்பனையும் அதிகரிக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்போது இன்ப்ளூயன்சர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
தங்களுடைய பொருள் எத்தனை பேரின் கவனத்திற்கு சென்றிருக்
கிறது என்பதையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக அறிய முடிகிறது.
குறிப்பாக அழகு, மாடலிங், உணவு ஆகிய மூன்று துறைகளில் உள்ள பிரபலங்கள், இந்த இன்ஃப்ளூயன்சர் மார்கெட்டிங்கிற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். இன்ஃப்ளூயன்சர் தொடர்பான எல்லாவிதமான தரவுகளையும் சேகரிக்க இந்த செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்
படுத்தப்படுகிறது.
மனித நுண்ணறிவுக்கு குறைவான உள்ளீடுகளை அளித்தால் போதும். இயற்கையாகவே அமைந்திருக்கிற மனிதர்
களின் இயக்கத்திற்கு புதிதாக உள்ளீடுகளை அளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உதாரணமாக எதிர்பாராத ஒலியைக் கேட்டால் திரும்பிப் பார்ப்பது மனித இயல்பு. ஆனால் ஒரு ரோபோவை அப்படித் திரும்பிப் பார்க்கச் செய்ய நிறைய உள்ளீடுகளை அதற்குள் நிரப்பி முறைப்
படுத்த வேண்டும். தேவைக்கேற்றவிதத்தில், அளவில்
உள்ளீடுகள் இருந்தால்தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சிறப்பாகச் செயல்படும்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் செயல்கள் எவ்வளவுதான் தானியங்கி முறையில் அமைந்திருந்தாலும், மனித பங்களிப்பு இல்லாமல் இந்த தொழில்நுட்பம் செயல்பட முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT