இளைஞர்மணி

என்ன வேலை... தேர்ந்தெடுப்பது எப்படி?

வி.குமாரமுருகன்

எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு வருக்குள்ளும் இருக்கும். அந்த ஆசையை ஆர்வமாக மாற்றி, முயற்சி செய்தால் அதை நிச்சயம் அடைய முடியும். 
சிலர் விருப்பத்தைத் தேர்வு செய்யாமல்  கிடைத்ததைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதை விட்டு வெளியேறும் வழி தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இருந்தாலும் கூட அவர்களின் விருப்பம் கனவாகவே தொடர்ந்து கொண்டிருக்கும். அதைக் கூட நாம் நினைத்தால் மாற்றி அமைக்க முடியும். 
முதலில் ஒவ்வொருவரும் செய்து வரும் தொழில் தொடர்பான தவறான எண்ணங்களை தம் மனதில் இருந்து நீக்க வேண்டும். அதன்பின் நம் எதிர்கால வாழ்க்கைக்கு எத்துறையைத் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக, எங்கெல்லாம் தொழில் வாய்ப்புகள் இருக்கின்றனவோ அவை குறித்து மேலோட்டமாக ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  
பெரும் பாலோனோர் ஒயிட் காலர் வேலையில் சேர்ந்து பாதுகாப்பாக வாழ்க்கையை கடந்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் அது போன்ற நிலைமை இருக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒயிட் காலர் ஜாப் களிலும் முடிவை எடுப்பதற்கு தேவையான நேரங்களில் கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கும் என்பதை மனதில் கொண்டு உங்களுடைய தொழிலை, வேலையைத் தேர்வு செய்ய வேண்டும். 
பணியில் சேர்ந்தவுடன் அதிக வருமானம் கிடைக்கும் வேலையை மட்டுமே தேர்வு செய்ய நினைப்பது சரியல்ல. 
தொழிலைத் தேர்வு செய்வதற்கு முன்னர் உங்கள் மதிப்பு என்ன? 
உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது?
அல்லது எந்தத் துறையில் உங்கள் திறன் உள்ளது என்பது பற்றி சிந்திக்க 
வேண்டியது அவசியம். 
புதிதாக ஒன்றை தொடங்கும் போது அது தொடர்பான துறையில் வெற்றி பெற்றவர்கள் கூறிய கருத்துக்களைத் தெரிந்து கொள்வது  அவசியம்.   
அத் துறையில் அவர்கள் கால் பதித்து வளர்ச்சி பெற்ற பின் அதை மேலும் வென்றெடுக்க தேவையான கருத்துக்களையும் கொண்டிருப்பார்கள். 
அவற்றையும்  தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நமது வாழ்க்கைக்கு தேவை எது? பணமா? மக்களுக்கு உதவி செய்வதா? அல்லது புதிய புதிய படைப்புகளை உருவாக்குவதா?  நமக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு செயல்பட்டால் அது சிறப்புடையதாக இருக்கும். பணம் தான் நமக்கு தேவை என்றால், அதற்கு தேவையான துறைகளைத் தேர்வு செய்து செயல்படலாம். மக்களுக்கு உதவி செய்துகொண்டே ஒரு துறையில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கு ஏற்ற துறையைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் தொழிலில் வெற்றி பெற முடியும். 
அத்துடன் நம் மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும். மனது மகிழ்ச்சியாக இருந்தால் தான் செய்யும் தொழில் சிறப்பானதாக அமையும். 
அதுபோல ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் தான் பணி செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருக்கும்.  அதற்காக பல ஆக்கப்பூர்வமான ஐடியாக்களைக் கூட அவர்கள் கையில் வைத்திருப்பார்கள். அத்தகையவர்கள் எத் துறையில் பிரகாசிக்க விரும்புகிறார்களோ அதை மட்டுமே தேர்வு செய்து பயணிப்பது நலம் பயக்கும். 
கல்வி கற்று முடித்தவுடன் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய்ய வேண்டுமா ?அல்லது கிடைத்த துறையில் பயணிக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்துகொண்டு அதன்பின் தொழில் அல்லது வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய இணைய தளங்களில் சென்று அதற்கான பட்டியலைத் தயார் செய்யலாம். அதன் பின் நமக்குத் தேவையான துறை சிலவற்றைத் தேர்வு செய்து அது குறித்த விவரங்களை, அத்துறை தொடர்பான நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ கேட்டுப்பெறலாம். அதையும் தாண்டி வேலைவாய்ப்பு முகாம்கள், தொழில்துறை முகாம்களுக்கு சென்று அனுபவ அறிவைப் பெற்றவர்கள் கூறும் கருத்துகளைத் தெரிந்துகொள்ளலாம். 
இப்படி நாம் தேர்வு செய்யும் பொழுது அத்துறையில் நம்மால் ஜொலிக்க முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT