இளைஞர்மணி

தற்காலிகப் பணி... மாற்றுங்கள்... நிரந்தரப் பணியாக!

சுரேந்தர் ரவி

நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கல்லூரியில் பட்டம் பெறுவோரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகமாக உள்ளது. அத்தனை பேருக்கும் வேலை கிடைக்கிறதா என்பது சந்தேகம்தான். பலருக்கு வேலை கிடைத்தாலும், அது படிப்புக்கேற்ற வேலையாக இருப்பதில்லை.
அவ்வாறு வேலைக்குச் சேர்க்கப்படும் இளைஞர்கள் பலரும் தற்காலிகமாகவே சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்குஉடனடியாக நிரந்தரப் பணியைப் பெரும்பாலான நிறுவனங்கள் வழங்குவதில்லை. பெரும் நிறுவனங்கள்,
பன்னாட்டு நிறுவனங்கள் கூட குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை பணியாளர்களைத் தற்காலிகமாகவே பணிக்கு அமர்த்துகின்றன.
அத்தகைய சமயத்தில் பணியாளர்களின் பணித்திறனை ஆராய்ந்து, அவர்களை நிரந்தரமாக்கலாமா அல்லது பணியில் இருந்து நீக்கலாமா என்பதை நிறுவனங்கள் முடிவெடுக்கின்றன. நிறுவனங்கள் இத்தகைய நடைமுறையைப் பின்பற்றி வருவதால், தற்காலிகப் பணி குறித்து இளைஞர்களிடையே தயக்கம் காணப்படுகிறது.
தற்காலிகப் பணியை ஏற்பதில்அவர்கள் அச்சப்படுகின்றனர்.
ஆராய்ந்து பார்த்தால் உண்மையில் தற்காலிகப் பணியில் பல்வேறு பலன்கள் காணப்படுகின்றன. நிறுவனத்தில்தற்காலிகமாகப் பணிபுரியும்போது நமக்கேற்ற பணி நேரத்தைப் பெரும்பாலும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அவ்வாறான நிலையில் கிடைக்கும்கூடுதல் நேரத்தை வேறு விஷயங்
களுக்குப் பயனுள்ளதாகப் பயன்படுத்த முடியும்.
அதே வேளையில், அனைத்துதற்காலிகப் பணிகளும் எப்போதும்தற்காலிகமாகவே இருக்கப் போவதில்லை. இளைஞர்களின் பணித்திறனை சோதிப்பதற்காகவே நிறுவனங்கள்முதலில் தற்காலிகமாகப் பணியில் அமர்த்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாகத்தற்காலிகப் பணியை நிரந்தரமான பணியாக இளைஞர்கள் மாற்றிக் கொள்ள முடியும்.
முழு ஈடுபாடு... முழுத்திறன் தற்காலிகப் பணியாக இருந்தாலும், அதைச் செய்வதில் முழு ஈடுபாடுஅவசியம். எந்தவிதக் கவனச்சிதறலும் சோர்வும் இல்லாமல் பணியைச் செய்ய வேண்டும். அரைகுறை மனதுடனோ ஈடுபாடின்றியோ பணி செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், பணி முழுமை பெறாமல், தற்காலிகப் பணிக்கே ஆபத்து நேர வாய்ப்பிருக்கிறது.
பணியைச் செய்யும்போது கடின உழைப்பைத் தற்காலிகப் பணியாளர்கள் வெளிப்படுத்த வேண்டும். பணியின்போது முழுத் திறனையும் வெளிக் கொணர்ந்து பணியாற்ற வேண்டும். தற்காலிகப் பணிக்காலம் என்பது இளைஞர்களைப் பரிசோதிக்கும் காலம். அத்தகைய சமயத்தில் சம்பந்தப்பட்ட பணிக்கு ஏற்றவர் என்பதை இளைஞர்கள்நிரூபிக்க வேண்டும். அதற்கான நட
வடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தனித்திறமைகள் ஒவ்வோர் இளைஞருக்கும் தனித்திறமை உள்ளது. தற்காலிகப் பணியில் இணையும் இளைஞர்கள், தங்களின்திறமையைப் பயன்படுத்தி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றவேண்டும். திறமைகள் மீது நம்பிக்கை வைத்தால், இளைஞர்கள் பெரிதும்பலனடைய முடியும்.
தற்காலிகப் பணியாளர்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எந்த மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் என்பது உற்றுநோக்கப்படும். எனவே, தங்களது தனித்திறமைகளைத் தற்காலிகப் பணியாளர்கள் திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது, விரைவாக முடிவெடுப்பது, சக பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது, பணியை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் முடிப்பது, பணியாளர்கள் குழுவின் பணித்திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திறன்களைத் தற்காலிகப் பணியாளர்கள் வெற்றிகரமாக வெளிக்காட்ட முடியும்.
நேரம் தவறாமை தற்காலிகப் பணியாளர்கள் குறித்த நேரத்தில் அலுவலகத்துக்கு வருவதைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். காலம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அதிலும் தற்காலிகப் பணியாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நிர்வாகம் கூர்ந்து கவனிக்கும்.
அப்படியான தருணங்களில், பணிக்குத் தாமதமாக வருவது உயர்நிலை அதிகாரிகளிடம் அதிருப்தியையே தோற்றுவிக்கும். எதிர்பாராத இடையூறுகள் காரணமாக ஓரிரு நாள்கள் தாமதமாக வருவது சகஜமாகவே எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், பணிக்குத் தொடர்ந்து தாமதமாகவே வருவது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
அதைக் கருத்தில் கொண்டு அலுவலகத்துக்குச் சரியான நேரத்தில் வருவதை தற்காலிகப் பணியாளர்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். போக்குவரத்து நெரிசல், கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட இடையூறுகளைக் கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து அலுவலகத்துக்குப் புறப்படும் நேரத்தைப் பணியாளர்கள் சரியாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
இணைந்து பணியாற்றுதல் தற்காலிகப் பணியாளர்கள் சக பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிறுவனத்தில் பணிபுரியும்போது தனியாக எந்த வேலையையும் செய்துவிட முடியாது. ஒரு வேலையை முடிப்பதற்கு சக பணியாளர்களின் உதவியும் கட்டாயம் தேவைப்படும். எனவே, அவர்களுடன் மனக்கசப்பின்றி இணைந்து பணியாற்றும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
சக பணியாளர்களுடன் விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பது பணிகளில் தொய்வை ஏற்படுத்தும். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது தற்காலிகப் பணியாளர்கள் மீதான மதிப்பையும் அதிகரிக்கும்.
தற்காலிகப் பணியை நிரந்தர மாக்குவது பணியாளர்களின் கைகளிலேயே உள்ளது. சரியான நேரத்தில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி தற்காலிகப் பணியாளர்கள் பணியை நிரந்தரமாக்கிக் கொள்ளலாம். வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT