இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 302

ஆர்.அபி​லாஷ்


ஊரடங்கு பிரகடனம்  செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது பொருளாதார ஏற்றத்தாழ்வு சம்பந்தமான சொற்களை புரொபஸர் அறிமுகப்படுத்தும் போது not to have two pennies to rub together எனும் மரபுத் தொடரின் பொருளையும் விளக்குகிறார். அது வித்தியாசமாக இருக்கிறதே, பென்னி எனும் சில்லரைக் காசுகளை உரசுவதற்கும் ஒருவர் பரம ஏழையாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என கணேஷ் வினவுகிறான். இதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் கதை இருக்கிறது என புரொபஸர் சொல்லுகிறார். அது என்னவென புரொபஸரிடம் இருந்து தெரிந்து கொள்வோமா?

புரொஸர்: பென்னி எனப்படும் இந்த காசு வகை இங்கிலாந்தில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. அப்போது இதை வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசி தயாரித்தார்கள்.

கணேஷ்: என்னது தங்கக் காசா?
புரொபஸர்: ஆமா, ஆனால் ரொம்ப சொற்பமாகத் தான். இந்த தங்கத்தை சுரண்டி எடுப்பது சட்டவிரோதமானது. பொதுவாக அரசு வெளியிடும் நாணயங்களை debase பண்ணக்கூடாது, அதாவது தரம் குறைத்து, உருவமாற்றம் செய்யக் கூடாது என்பது சட்டம். இங்கிலாந்தில் உள்ள ஏழை மக்களில் சிலரால் தம் ஆசையை அடக்க முடியவில்லை. 

அதனால் அவர்கள் இந்த சில்லறை நாணயங்களை ஒரு பையில் இட்டு வேகமாக குலுக்குவார்கள். அப்போது அவை ஒன்றுடன் ஒன்று உரசி உரசி ஒரு கட்டத்தில் தங்கத் துகள்கள் அல்லது வெள்ளித்துகள்களை உதிர்க்கும். கண்ணுக்கு சுலபத்தில் புலப்படாத மிகச்சிறிய துகள்களாகவே அவை இருக்கும். ஆனால் நிறையக் காசுகளை இப்படித் தொடர்ந்து உலுக்கி உரசி வரும்போது ஒரு கால் கரண்டி அளவுக்கு தங்கம் வெள்ளியோ கிடைக்கலாம். இதை அவர்கள் வெளியே விற்று சம்பாதிப்பார்கள். இந்த நாணயங்களை பின்னர் தாமாகவே தேய்ந்து போனவையாக காட்டி புழக்கத்தில் விடுவார்கள். இந்த சட்டவிரோதச் செயலை முடிவு கட்ட அரசு பின்னர் தங்க, வெள்ளி நாணயங்களை திரும்பப் பெற்றுக் கொண்டு அதன் இடத்தில் செம்பு நாணயங்களை அறிமுகப்படுத்தியது. இது இந்த நாணயங்களில் இருந்து சுரண்டி சம்பாதித்த மக்களுக்கு கடும் ஏமாற்றமாகியது. அப்படித் தான் கடும் வறுமையில் இப்படி நாணயங்களை சேர்த்து உரசி பல மாதங்கள் முயற்சியில் சிறிதளவு தங்கமோ வெள்ளியோ சேகரிக்க முயலும் அற்ப முயற்சி கூட இனி சாத்தியமில்லை, கையில் இருப்பவை வெறும் செம்பு நாணயங்களான  penny மட்டுமே எனும் கசப்புணர்வு ஏற்பட்டது. புதிய செம்பு நாணயங்களைக் கொண்டு ரொட்டியும் வாங்க முடியாது, சுரண்டி சம்பாதிக்கவும் முடியாது எனும் வறுமையின் கொடுமையைப் பகடியாக சித்திரிக்கத் தோன்றிய மரபுத் தொடரே not to have two pennies to rub together என்பது. புரியுதா?

கணேஷ்: ஆஹா... செம்மையான கதை சார். இன்னொரு சந்தேகம்.
புரொபஸர்: கேளு. 
கணேஷ்: நீங்க siege of Copenhagen நிகழ்வைப் பற்றி சொல்லும் போது ச்ப்ஹஞ்ள்ட்ண்ல் பற்றி குறிப்பிட்டீர்களே?
புரொபஸர்: ஆமா
கணேஷ்: flagship எனும் அந்தச் சொல்லை நான் ஏதாவது எலக்ட்ரானிக் கேட்ஜெட்டைப் பற்றி விளம்பரம் வரும் போது அடிக்கடி பார்க்கிறேன். இந்த மின்னணு சாதனங்களுக்கும் போர்க்கப்பல்களுக்கும் என்ன தொடர்பு? புரியலியே. 
புரொபஸர்: Flagship என்றால் இரு அர்த்தங்கள்: ஒன்று, பிரதானமான தளபதி இருக்கும் படைக்கப்பல். இந்த தலைமை தளபதியானவர் ஒரு நாட்டின் படைக் கப்பல்களுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாக ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பண்டங்களில் ஒன்று இருக்கும். இதுவே இரண்டாவது பொருள். உதாரணமாக ஆப்பிள் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் அதன் மேக்புக் கணினியும் ஐபோனும் முக்கியமானவை. அவற்றில் ஒரு புதிய மேக்புக் கணினியோ ஐபோனோ புத்தம் புதிதான, ஒப்பிட இயலாத சிறப்புக் கூறுகளுடன் வரும் போது அதை தமது flagship என ஐபோன் நிறுவனம் அறிவிக்கும். அதே போல மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சி நீ நாளை வேலை பார்க்கப் போகும் நிறுவனத்தில் இருக்கும். அதைத் தவிர்க்கவே முடியாது. அதை flagship event என்பார்கள். 

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT