இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

26th Jan 2021 06:00 AM | - இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT

 

இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் தொழில் பழகுநர் பயிற்சி
 

பயிற்சி: கிராஜுவேட் அப்பரன்டீஸ்
காலியிடங்கள்: 80

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உதவித் தொகை: மாதம் ரூ.9,000 வழங்கப்படும்.

ADVERTISEMENT

தகுதி: பயிற்சி அளிக்கப்படும் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி: டிப்ளமோ அப்பரன்டீஸ்
காலியிடங்கள்: 30

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உதவித் தொகை: மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.

தகுதி: பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி: டிரேடு அப்பரன்டீஸ்
காலியிடங்கள்: 40

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உதவித் தொகை: மாதம் ரூ.7,000 வழங்கப்படும்.

தகுதி: பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
2018 - ஆம் கல்வி ஆண்டுக்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கூடுதல் தகுதி, ஓர் ஆண்டுக்கும் அதிகமான பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கான முடிவு www.drdo.gov.in என்ற இணையதளத்தில் மூலம் வெளியிடப்படும்.

மேலும் விவரங்கள் அறிய: https://rac.gov.in/download/advt_gtre_aprntc_26272021.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.01.2021

தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை

பணி: பாய்லர் ஆப்ரேட்டர்

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.29,500 - ரூ.90,000

வயது வரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பாய்லர் அட்டென்டன்ட் பணிக்கான தொழிற்பயிற்சி முடித்து முதல் அல்லது இரண்டாம் நிலை சான்றிதழ் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது முதல் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.12,000 அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் ரூ.15,500 உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:
Recruitment Cell, HRD Department, S &P Complex, NALCO, Angul - 759 145, Odisha.

மேலும் விவரங்கள் அறிய: https://nalcoindia.com/wp-content/uploads/2020/12/Advertisement-No.14200301-for-SUPTJOT}OperatorBoiler_ver-02.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சேர கடைசித் தேதி: 31.01.2021


தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலை

காலியிடங்கள்: 53
பணி: ஆபீஸ் அசிஸ்டண்ட்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.12.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnscb.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Chairman, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Triplicane, Chennai – 600 005.

மேலும் விவரங்கள் அறிய: http://www.tnscb.org/wp-content/uploads/2021/01/OA-Notification-1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.01.2021
 

தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 16

பணி மற்றும் காலியிடங்கள்:

பணி: அசிஸ்டண்ட் கமிஷனர் (அட்மினிஸ்ட்ரேட்டிவ்) - 02

பணி: அசிஸ்டண்ட் கமிஷனர் (பைனான்ஸ்) - 01
சம்பளம்: மாதம் ரூ.47,600 - ரூ.1,51,100

பணி: ஆபிஸ் சூப்ரின்டென்டன்ட் (பைனான்ஸ்) - 02
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ. 1,42,400

பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு - I - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ. 1,12,400

பணி: ஸ்டெனோகிராபர் கிரேடு - II - 02
பணி: ஆபீஸ் அசிஸ்டண்ட் - 03
சம்பளம்: மாதம் ரூ.25,500 - ரூ. 81,100

பணி: மல்டி - டாஸ்கிங் ஸ்டாப் (எம்டிஎஸ்) - 05
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 100 எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள், இளங்கலை, பி.காம்., எம்.காம்., சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி), பிஜிடிஎம் முடித்து சம்பந்தப்பட்ட பணியில் அனுபவம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 31.12.2020 தேதியின்படி 27 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://tribal.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://cdn.digialm.com/per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/1113196151876914629752.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.02.2021

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT