இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

26th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

முக நூலிலிருந்து....


நமது மறதியும் பயமும்தான் தவறு செய்பவர்களின் ஆயுதமும், நம்பிக்கையும்.
ஓயாத அலைகள் போல்... 
நேர்மையாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது.

ஹேமவந்தனா


இந்த வளைந்து நெளியும் நாக்கு,
தனக்கெனத்  தனி உயிர் இருப்பதுபோல,
என்னைத் துளியும் மதிக்காமல் சளசளவென்று பேசுகிறது... 
கேலி செய்கிறது... 
இடித்துக் காட்டுகிறது ..
வம்புக்கு இழுக்கிறது... 
தீக்கங்குச் சொற்களை அள்ளி வீசுகிறது. 
பிறகு, 
அம்மா வேண்டாமென்ற வேலையைச் செய்துவிட்டு 
ஏதும் அறியாதவனைப்போல 
அவள் முந்தானைக்குள் பொதியும் 
பிள்ளையாக 
மீண்டும் என் வாய்க்குள்ளேயே வந்து 
உட்கார்ந்து கொள்கிறது. 

ADVERTISEMENT

கார்குழலி

சுட்டுரையிலிருந்து...

பக்குவம் என்பது யாதெனில் யாவையும் சிரித்துக் கடக்கப் பழகிக் கொள்வதே.

மெய்யினியாள்  


சில நேரத்தில்  சிலர்,  நம்மையே நாம்  ரசிக்கிற மாதிரி செஞ்சிடுறாங்க.

விதி டா சத்வா  

 

வாழ்வு எவ்வளவு விசித்திரமானது...
நாம் தேடுவோர் 
நமக்குக் கிடைக்காமலும்
நம்மைத் தேடுவோர்க்கு 
நாம் கிடைக்காமலும்.

சரவணன்

மரம் வைப்பவனுக்கு கூலி இல்லை, 
வெட்டுபவனுக்கே இங்கு கூலி.
வைப்பவனுக்கும் கூலி என்று
சொல்லிப் பாருங்கள், 
உலகம்  பசுமையாய் மாறும்.

முகமூடி


வலைதளத்திலிருந்து...

அடுத்தவன் வீட்டில் கலர் டிவி வாங்கிட்டா, நாமும் வாங்கினோம்.

அடுத்தவர் வீட்டில் ஙஅஇ மடிக்கணினியா... அவர் வச்சிருக்கிறதா ஆப்பிள் போனா...எந்த மாடல்?

இதுவரை ஓகே ...

ஆனா இப்போ அடுத்தவர் வீட்டில் என்ன சமையல்  என்பதிலிருந்து அவரு என்ன படம் பார்த்தாரு?

எந்த ஊருக்குப் போனாரு? அவரோட கேர்ள் ப்ரண்ட் யாரு? அவ ஏன் விதம் விதமா போட்டோ போடறா? இப்படியாக அடுத்தவர்... அடுத்தவர் ... அடுத்தவருடன் பயணிக்கும் வாழ்க்கையாக மாறி இருக்கிறது, இன்றைய வாழ்க்கை.
செல்ஃபியில் சிரிக்கிற போட்டோ போட்டுட்டு... அடுத்த நிமிடம் நாயும் பூனையுமா அடிச்சிக்கிற வாழ்க்கை.
குடும்பமா உட்கார்ந்து பொதிகையில் சினிமா பார்த்த காலம் மலையேறிவிட்ட து. 
வீட்டில் நாலு பேரு இருந்தா நாலு பேருக்கும் வேறு வேறு காட்சிகள் தேவைப்படுகின்றன.
பிள்ளைகள் பெற்றோர்களிடம் வாட்ஸ் அப்பில் மட்டுமே பேசுகிறார்கள். 
ஏன்...  பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும் வாட்ஸ் அப்பில் ஐ லவ் யூ, ஐ மிஸ் யு சொல்லிக் கொள்வதில்,  உறவைக் காப்பாற்றிக் கொள்வதாக நினைக்கிறார்கள்.
யாரும் யாரோடும் பேசுவதில்லை. எல்லாமே மெசேஜ் தான்...
கரோனா மாதிரி எதாவது ஒரு பூதம் வரணும்.
"செல்போனை பயன்படுத்தினால் அவனுக்கு இழுப்பு வந்திடும்னு... எந்த சமூக வலைத்தளத்தில்  "க்ளிக்' செய்தாலும் உடம்பு நிறம் மாறி... கன்னங்க் கரேல்ன்னு போயிடுவாங்களாம்... அம்புட்டுத்தான்' அப்படின்னு எதாவது ஒரு பீதி கிளம்பணும். 

http://puthiyamaadhavi.blogspot.com/

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT