இளைஞர்மணி

வலிமை குறைந்த பாஸ்போர்ட்!

26th Jan 2021 06:00 AM | -ஜீவா

ADVERTISEMENT

 

ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் முதலில் பாஸ்போர்ட் வேண்டும்.  அதற்குப் பிறகு எந்த நாட்டுக்குப் போகிறோமோ அந்த நாட்டின் விசா வேண்டும்.  விசா இல்லாமல் வெளிநாடுகளுக்குப் போக முடியுமா?
உலகின் எல்லா நாடுகளுக்கும் போக முடியாவிட்டாலும்,  190 நாடுகள் வரை போக முடியும்.

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஹென்லே அண்ட் பார்ட்னெர்ஸ் குரூப் நிறுவனம். இந்த நிறுவனம் ஒவ்வோராண்டும்  "தி ஹென்லே பாஸ்போர்ட் இன்டெக்ஸ்'  என்ற உலக அளவிலான  பாஸ்போர்ட் பற்றிய தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது.  2021 - ஆம் ஆண்டு அது வெளியிட்டுள்ள இன்டெக்ஸ் படி , ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். 

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்து 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.  ஜெர்மனி, தென்கொரியா நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்து 189 நாடுகளுக்கும், பின்லாந்து, இத்தாலி, லக்ஸம்பெர்க், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்து 188 நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணம் செய்யலாம். 

ADVERTISEMENT

அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே,  பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்து 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இந்தியாவின் பாஸ்போர்ட்டை வைத்து 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். 

பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட்டை வைத்து 32 நாடுகளுக்கும், இராக் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து 28 நாடுகளுக்கும் விசா இல்லாமல் செல்லலாம். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து 26  நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.  ஆப்கானிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட்தான் உலகிலேயே  மிகவும் வலிமை குறைந்த பாஸ்போர்ட் ஆகும். 

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT