இளைஞர்மணி

டிரென்டிங் செயலிகளைக் கண்டுபிடிக்க!

26th Jan 2021 06:00 AM | - ஏ.எஸ்.

ADVERTISEMENT

 

இணையதளப் போட்டி என்றாலே முதலாவது, இரண்டாவது இடம் என்றெல்லாம் இல்லை; ஒரே இடம்தான் அதுதான் "டிரென்டிங்'. 

இந்த டிரென்டிங்கில் இடம் பிடிக்க நடைபெறும் போட்டா போட்டிக்கு மக்களின் அதிகப் பயன்பாடுதான் காரணம்.

சுட்டுரையில் பதிவிடப்படும் "ஹேஷ் டாக்குகள்', பரபரப்பு செய்திகள் டிரென்டிங் ஆவதையும், வித்தியாசமான அல்லது சர்ச்சைக்குரிய யூ டியூப் விடியோக்கள் "வைரல்' ஆவதையும் பார்த்திருப்போம்.

ADVERTISEMENT

ஆனால், தற்போது புதிய சேவையாக ஆன்ட்ராய்டு செயலிகளைப் பதிவிடும் கூகுள் பிளே ஸ்டோரில் டிரென்டிங் குறிப்பு வெளியிடப்படுகிறது.

அதிகமான பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள்தாம் பிரபலமாகப் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளின் டிரென்டிங்கில் ஏற்றம், சரிவு என்பதை விளக்கும் குறியீடு தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், எத்தனை செயலிகளை முந்தி டிரென்டிங் செயலி முதலிடத்தில் உள்ளது என்றும் எவ்வளவு நேரம் டிரென்டிங்கில் உள்ளது என்றும் அது தெரிவிப்பதில்லை.
இதைக் காண கூகுள் பிளே ஸ்டோர் செயலிக்குள் சென்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள "டாப் சார்ட்ஸ்' - ஐ கிளிக் செய்து உள்ளே சென்றால், பல்வேறு பிரிவுகளில் எந்தந்த செயலிகள் டிரென்டிங்கில் உள்ளன என்பதைத் தெரிவிக்கும் மேல் குறியீடு காணப்படும்.

அதில், தற்போதைக்கு சிக்னல் செயலி, டெலிகிராம், ஜூம் ஆகிய செயலிகள் டிரென்டிங்கில் உள்ளதைக் காண்பிக்கும் மேல் குறியீடு உள்ளது. இதற்கு அந்த செயலிகளை அன்றைய தினம் அதிகமானோர் பதிவிறக்கம் செய்ததே காரணம்.

"மீவி' செயலி டிரென்டிங்கில் இருந்து கீழ் இருப்பதற்கான குறியீடும் உள்ளது. இப்படி செயலிகளின் டிரென்டிங்கையும் கண்டுபிடித்து பயன்படுத்தலாம்.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT