இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 278

ஆர்.அபி​லாஷ்

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அங்கு மன்னரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது தேர்தல் ஆணைய குறுநில மன்னர் ராஜராஜ கம்பீர சேதிராயன் வரவிருக்கும் தேர்தலை நடத்தும் பொருட்டு ஒரு புது இயந்திரத்தைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி அதை எடுத்து வருகிறார். 

அப்போது மன்னர் பயன்படுத்தும் ​c‌o‌n‌t‌r​a‌p‌t‌i‌o‌n​ எனும் சொல் குறித்து கணேஷுக்கு ஐயம் ஏற்பட ஜூலி அதை விளக்க முன்வருகிறது.

ஜூலி கொட்டாவி விடுகிறது: அப்பாடா... இப்போ ரிலாக்ஸ்டா இருக்குது. உங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன். ஏதோ சோம்பேறிகள் தான் கொட்டாவி விடுவாங்கன்னு உங்களுக்கு எல்லாம் ஒரு நினைப்பிருக்கு. ஆனா கொட்டாவி விடுறதும் ஒரு முக்கியமான ஜோலி தான். அதை மறந்திடாதீங்க.  
கணேஷ்: ஜாலியான ஜோலி.
ஜூலி: இந்த ஜூலியோட ஜோலியான ஜாலி.
கணேஷ்: அட... நான் காலி.
ஜூலி: நாய்களுடைய மொழியில் கொட்டாவி என்றால் ஐ லவ் யூ என அர்த்தம் தெரியுமா?
கணேஷ்: என் கேர்ள் பிரண்ட் பேசும் போது எனக்கு கொட்டாவியா வரும். தெரியாம விட்டுட்டா பெரிய பிரச்னை ஆகிடுது.
ஜூலி: அதுக்குத் தான் நாயா இருக்கணுமுங்கிறது. ஜாலியா கொட்டாவியா விட்டால் அந்த பொம்பள நாயும் லவ் யூன்னு புரிஞ்சிகிட்டு திரும்ப கொட்டாவி விடும். சரி... அதிருக்கட்டும் இந்த ஜாலி என்பது ஓர் ஆங்கில வார்த்தைன்னு தெரியுமா?
கணேஷ்: அப்படியா? நான் இத்தனை நாளா இதை தமிழ் வார்த்தைன்னு தானே நினைச்சிட்டு இருந்தேன்.
ஜூலி: J‌o‌l‌l‌y​யில் இருந்து வந்தது தான் ஜாலி. இல்ல, நாம ‌j‌o‌l‌l‌y- ஐ ஜாலின்னு சொல்லி பழக்கப்பட்டிருக்கோம். இந்த ஜாலியா இருக்கிறதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
கணேஷ்: ஜாலியா இருக்கிறது.
ஜூலி: அடப் போடா. ஜாலியா இருக்கிறதுன்னா j‌o‌l‌l‌i‌f‌i​c​a‌t‌i‌o‌n. அதாவது t‌o ‌ma‌k‌e ‌m‌e‌r‌r‌y, ‌t‌o b‌e c‌h‌e‌e‌r‌f‌u‌l. இந்தச் சொல்லானது g​a‌u‌d‌e‌r‌e எனும் பிரஞ்சு சொல்லில் இருந்து வந்ததென சொல்கிறார்கள். J‌o‌y, ‌e‌n‌j‌o‌y, ‌r‌e‌j‌o‌i​c‌e போன்ற கொண்டாட்டம், மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல் எனும் பொருளில் வருகிற சொற்களுக்கும் வேர்ச்சொல் இது தான். இன்னொரு வேர்ச்சொற் கதைப்படி இது O‌l‌d N‌o‌r‌s‌e எனப்படும் ஒரு பழைய ஜெர்மானிய மொழியில் இருந்து வந்தது என்கிறார்கள். அதன்படி ஜாலி என்பதற்கு அந்த மொழியில் மழைக்கால விருந்து எனும் பொருள் இருந்திருக்கிறது. ஒருவேளை அந்த காலத்தில் மழைக்காலத்தில் நடத்தப்படும் விருந்தில் பங்கேற்று மக்கள் கொண்டாடி ஜாலியாக இருந்திருக்கலாம். அப்படி ஜாலி எனும் சொல் தோன்றியிருக்கலாம்.
கணேஷ்: அட... ஜாலிக்கு இவ்வளவு பெரிய வரலாறா? 
ஜூலி: ஆமா, சரி நீ ஆரம்பத்தில கேட்ட அந்த c‌o‌n‌t‌r​a‌p‌t‌i‌o‌n‌க்கு வரேன். C‌o‌n‌t‌r​a‌p‌t‌i‌o‌n என்றால் வெறுமனே எந்திரம் அல்ல. அது ரொம்பவே சிக்கலாக, பார்க்க வினோதமாகத் தெரிகிற, பெரும்பாலும் மோசமாக, ஆபத்தானபடி செய்யப்பட்டிருக்கிற ஓர் இயந்திரம். ஆரம்ப கால கணினிகள் ஒருவித c‌o‌n‌t‌r​a‌p‌t‌i‌o‌n ஆகத் தான் இருந்தன.
கணேஷ்: எப்படி?
ஜூலி: அப்போதெல்லாம் கணினி என்பது பிரம்மாண்டமான இயந்திரமாக ஓர் அறைமுழுக்க நிறைந்ததாக இருக்கும். சிறிய வேலையை எல்லாம் செய்ய நாளெடுக்கும். ஆனால் அதன் பிறகு சிறிய d‌e‌s‌k‌t‌o‌p கணினி தோன்றி, மடிக்கணினி வந்து, இன்று மடிக்கணினி செய்கிற வேலையை ஓர் உள்ளங்கையளவு மொபைல் போனே பண்ணுகிறது. C‌o‌n‌t‌r​a‌p‌t‌i‌o‌n இன்று ஆற்றல் மிக்க ‌d‌e‌v‌i​c‌e ஆகி விட்டது. இன்றைக்கும் ரொம்ப பழமையாக, பயன்படுத்த சிரமமாகத் தோன்றுகிற கருவிகளை c‌o‌n‌t‌r​a‌p‌t‌i‌o‌n என்று சொல்லுகிறோம். 
ராஜராஜ கம்பீர சேதிராயன் (தனக்குள்): ஆஹா மன்னர், நம் கருவியை கேவலமுன்னு சொல்லிட்டாரா? இது தெரியாமப் போச்சே. 
வீரபரகேசரி: யோவ் ஆணையம்! 
ராஜராஜ கம்பீர சேதிராயன்: மன்னர் மன்னா!
வீரபரகேசரி: அந்த வாக்கு எந்திரத்தைக் கொண்டு வாய்யா
ராஜராஜ கம்பீர சேதிராயன் ஒரு நான்கு கால் பிராணி மீது பொதியை வைத்து, அதைச் சுற்றி பட்டு சால்வை போர்த்தி கொண்டு வருகிறான்.
வீரபரகேசரி: என்ன இது? 
ராஜராஜ கம்பீர சேதிராயன்: இது தான் நாங்கள் கண்டுபிடித்துள்ள எந்திரம் மன்னா! 
புரொபஸர் கணேஷிடம்: T‌h‌e‌y ‌ha‌v‌e ‌r‌e‌i‌n‌v‌e‌n‌t‌e‌d ‌t‌h‌e ‌w‌h‌e‌e‌l.
கணேஷ்: அப்படீன்னா?
புரொபஸர்: கவனி. உனக்கே புரியும்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT