இளைஞர்மணி

வே‌லை... வே‌லை... வே‌லை...

பரிதி இரா. வெங்கடேசன்


தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 


மொத்த காலியிடங்கள்: 19
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: பெர்சனல் அசிஸ்டண்ட்  - 04
சம்பளம்: மாதம் ரூ.19500-ரூ.62,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சியுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.  

பணி: ஜுனியர் அசிஸ்டண்ட்   - 10
சம்பளம்: மாதம் ரூ.19500-ரூ.62000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருப்பதோடு  கணினி அறிவியலில் 6 மாத டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.   

பணி: டைம் கீப்பர்  - 02
சம்பளம்: மாதம் ரூ.5670-102-7710
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி: டிரைவர்  - 03
சம்பளம்: மாதம் ரூ.5680- 102-7720
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை:  www.tancem.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை  சுயசான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: 

The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor, No.735,
Anna Salai, Chennai 600 002.

மேலும் விவரங்கள் அறிய: http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf   என்ற அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 22.01.2021

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

பணி: ரிசர்ச் ஃபெல்லோ 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.45,000
தகுதி: ரெகுலர் முறையில் சட்ட பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:  01.07.2020 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: ரிசர்ச் அசிஸ்டண்ட்  
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ரெகுலர் முறையில் சட்ட பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  www.tnsja.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி:

The Registrar (Recruitment), High Court, Madras – 600 104

மேலும் விவரங்கள் அறிய: 
http://www.tnsja.tn.gov.in/reports/not_152_2020.pdf  என்ற லிங்கில் சென்று பாருங்கள். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி:   
22.01.2021


தேசிய உரத் தொழிற்சாலையில் வேலை  

பணி: அக்கவுண்ட் அசிஸ்டண்ட்
காலியிடங்கள்:13
சம்பளம்: மாதம் ரூ.23,000 - ரூ. 56,500
வயது வரம்பு: 18  வயது முதல்  30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பி.காம் பட்டம் பெற்றிருக்க  வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/ADV-%20ACCOUNTS%20ASSISTANT.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.01.2021 

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை 


பணி: அசிஸ்டண்ட் புரோகிராமர் 

சம்பளம்: மாதம் ரூ.35,900 - ரூ.1,13,500

தகுதி: அறிவியல், புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல் துறையில் இளநிலை பட்டம் மற்றும் கம்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பம் போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய: http://www.tnsic.gov.in/pdf/notification.pdf  என்ற அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.01.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT