இளைஞர்மணி

பூமிக்கு நீர் தரும் விண்கற்கள்!

எஸ். ராஜாராம்

சூரிய குடும்பத்தில் பூமியில்தான் தண்ணீர் வளம் உள்ளது. செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் தண்ணீர் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தாலும், அவை மாறுபட்ட வடிவங்களிலேயே கண்டறியப்பட்டுள்ளன.

அப்படியானால் பூமிக்கு தண்ணீர்  வந்தது எப்படி என்கிற ஆராய்ச்சியையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டு  வருகின்றனர். இந்நிலையில், பூமிக்கு விண்கற்கள் மூலம் தண்ணீர்  வந்திருக்கலாம் என ஒரு புதிய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த "சயின்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி உருவான ஆரம்பத்தில் விண்கற்கள் பூமிக்கு தண்ணீரைக் கொண்டு வந்திருக்கலாம் என்றும், இப்போதும் அது தொடர்ந்து நடைபெறுவதாகவும் சொல்கின்றன இந்தப் புதிய ஆராய்ச்சி முடிவுகள். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிமெக்காவ்ரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சைமன் டர்னர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

விண்கற்களில் இருந்து தண்ணீர்  வந்தது எப்படி என தெரிந்துகொள்வதற்கு முன்பாக விண்கற்கள் என்றால் என்ன என அறிந்துகொள்வோம். விண்கற்கள் சூரியனைச் சுற்றி வரும் பாறைப் பொருள்கள் ஆகும். இவை  செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் உள்ள சிறுகோள் பகுதியில் பாறைகளின் தடுமாற்றத்தில் இருந்து உருவானவை. இவை 1000 கி.மீ. சுற்றளவு முதல் நுண்ணிய துகள் வரையிலான அளவு வரை இருக்கும்.

பல வகைகளைக் கொண்ட விண்கற்களில் உலகம் முழுவதும் சேகரிக்கப்பட்ட "கார்பனேஷியஸ் சோன்டிரைட்' என்ற விண்கற்களை விஞ்ஞானிகள் ஆய்வுக்குட்படுத்தினர். அந்த விண்கற்களில் சமீபத்தில் திரவ ஓட்டம் இருந்ததா என்பதைக் கண்டறிய யுரேனியம் மற்றும் தோரியம் ஐசோடேப் ஆய்வும் நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வின்படி, சூரிய மண்டலத்துக்கு வெளியே சுற்றிவரும் விண்கற்களின் தாய் அமைப்புகள் தண்ணீரையோ, மீத்தேன் திரவத்தையோ கொண்டிருக்க வேண்டும். இந்த  தாய் அமைப்புகள் ஒன்றோடு ஒன்று மோதி விண்கற்கள் உருவாகும்போது, விண்கற்களில் உள்ள பனி உருகி சூரிய மண்டலத்தில் தண்ணீர்  அல்லது திரவத்தில் கரையக் கூடிய கூறுகளை உருவாக்குகிறது என்றும், இதையொட்டி விண்கற்கள் பூமி தோன்றிய காலம் முதல் தண்ணீரைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

விண்ணில் இருந்து மழை வடிவாக வரும் தண்ணீரை நாம் பார்க்கிறோம். அதேபோல விண்கற்களும் தண்ணீரைப் பூமிக்கு வழங்குகின்றன என்பது உண்மையிலேயே ஆச்சரியமான தகவல்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT