இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 277

ஆர்.அபி​லாஷ்

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

வீரபரகேசரி தன்னைச் சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அங்கு மன்னரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது தேர்தல் ஆணைய குறுநில மன்னர் ராஜராஜ கம்பீர சேதிராயன் நடக்கவிருக்கும் தேர்தலை நடத்தும் பொருட்டு ஒரு புது எந்திரத்தைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி அதை எடுத்து வருகிறார். அப்போது மன்னர் பயன்படுத்தும் contraption எனும் சொல் குறித்து கணேஷுக்கு ஐயம் ஏற்பட ஜூலி அதை விளக்க முன்வருகிறது.

ஜூலி: சுருக்கமா சொல்லிடறேன். கேள்வியில்லாம கேட்கணும் சரியா?
கணேஷ்: அப்படி என்ன அவசரம் ஜூலி? வெட்டியா தானே இருக்கே?
ஜூலி: யாரு சொன்னா? முக்கியமான வேலை இருக்கு.
கணேஷ்: என்ன?
ஜூலி: நான் கொட்டாவி விடணும். ரொம்ப நேரமா அது வெயிட்டிங். நீ வர விட மாட்டேங்குற.
கணேஷ்: ஓகே ரைட்டு. 
புரொபஸர்: நாய்க்கு வேலையும் இல்ல, நிற்க நேரமும் இல்ல.
கணேஷ்: யாரைச் சொல்றீங்க?
புரொபஸர்: பழமொழிப்பா. அதுக்கு இணையா 
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு - busy as a beaver.
கணேஷ் (தலையைச் சொறிகிறான்): பீவர்னா?
புரொபஸர்: நீர்நாய்
கணேஷ்: அதான், அதே தான். நாக்கு நுனியில வந்து நிக்குது. On the tip of the tongue.
புரொபஸர்: அது ஒரு idiom தெரியுமா?
கணேஷ்: அப்படியா?
புரொபஸர்: ஆமா, ஒரு விசயத்தைச் சொல்ல நினைக்குறோம், ஆனால் அது நினைவுக்கு வர மாட்டேங்குது எனும் போது it was on the tip of my tongue, but I couldnt recall it  என சொல்வோம்.
கணேஷ்: சார், நீங்க எதுக்கு ஜூலியை பீவர்னு இப்போ சொன்னீங்க?
புரொபஸர்: நீ ஏன் இப்போ கோர்த்து விடுறே? நான் பொதுவா எனக்கு அந்தப் பழமொழி நினைவுக்கு வந்ததுன்னு சொன்னேன். சரி உனக்கு நீர்நாய் என்ன பண்ணுமுன்னு தெரியுமா?
கணேஷ்: அது கால் இல்லாம கரைக்கு வந்து தத்தக்கே புத்தக்கேன்னு தாவுறதைப் பார்த்திருக்கேன். மற்றபடி அதைப் பற்றி தெரியாது சார். 
புரொபஸர்: இந்த நீர்நாய் எப்பவுமே ரொம்ப பிஸியா எதையாவது மென்னுகிட்டே இருக்கும். எதுவுமே பெரிசா பண்ணாமலே அநியாயத்துக்கு பிஸியாக இருக்கும். அதை பகடி பண்ணத் தான் busy as a beaver பதினாலாவது நூற்றாண்டில் இருந்தே புழக்கத்தில் இருக்குது. 
கணேஷ்: அப்போ busy as a bee?

புரொபஸர்: அது இன்னும் பாஸிட்டிவ்வான சொல்லாடல். ஒருவர் ரொம்பவே சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பதை சொல்வதற்கானது. குறிப்பாக மற்றவர்களுக்காக சுயநலமின்றி நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்களுக்கு அதைச் சொல்லலாம்.  
ஜூலி கொட்டாவி விடுகிறது: அப்பாடா கொட்டாவி வந்திருச்சு. இவனைக் கொஞ்ச நேரம் கவனிச்சிக்கிட்டதுக்கு தாங்ஸ் புரொபஸர். இல்லேன்னா எனக்கு கொட்டாவியே வந்திருக்காது.  
கணேஷ்: கொட்டாவின்னா yawn தானே?
ஜூலி: ஆமா. Oscitancy என்பது கொட்டாவியின் மற்றொரு சொல். 
கணேஷ்: அதென்ன ஏதோ அஜீரண டானிக் பேரு மாதிரி? 
ஜூலி: oscitare எனும் லத்தீன் சொல்லில் இருந்து வருவதால் அப்படி அறிவியல்தனமாக தொனிக்கிறது. லத்தீனில் ர்ள் என்றால் வாய். Citare என்றால் அசைப்பது. ரொம்ப ஜிம்பிள் இல்லையா? ஒருவரை he appears 
oscitant so early in the day என்றால் காலையிலேயே சோம்
பலினால் கொட்டாவி விடுகிறாரே எனப் பொருள்.  
கணேஷ்: ஆனால் காலையில் தானே கொட்டாவி வரும், அதுவும் சீரியஸான வேலையைப் பண்ண உட்காரும் போது? 
ஜூலி: அதுவும் உண்மை தான். காலையில் நம் உடல் ரொம்ப அலுப்பாக, தசைகள் இறுக்கமாக இருந்தால் சோர்வாக, சரியான தூக்கமின்றி உணர்கிறோம் எனப் பொருள். அப்படி உடல் இறுக்கமாக, அலுப்பாக, களைப்பாக இன்னிக்கு ஆபீஸ் போகணுமா? என உணர்வதற்கு ஒரு சொல் இருக்கிறது - pandiculation. 
கணேஷ்: அதிருக்கட்டும், நான் முதலில் கேட்ட கேள்வி என்னாச்சு? 
ஜூலி: இன்னொரு கொட்டாவி வர இருக்குது. இரு அது வந்த உடனே சொல்றேன். 
கணேஷ்: என்ன கலாய்க்குதோன்னு டவுட்டு வருது.

(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT