இளைஞர்மணி

ஐஐடி- பாம்பே வழங்கும் இலவச ஆன்லைன் படிப்பு!

எம். அருண்குமார்


பாம்பே ஐஐடி சார்பாக குவான்டம் மெக்கானிக்ஸ் குறித்த இலவச ஆன்லைன் படிப்பு நடத்தப்படுகிறது.

பாம்பே ஐஐடி நடத்தும் இந்த இலவச ஆன்லைன் படிப்பு பி.டெக். பிசிக்ஸ், பி.டெக். எலக்டிரிகல், எம்எஸ்சி பிசிக்ஸ், எம்எஸ்சி கெமிஸ்ட்ரி படித்த மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.

குவான்டம் இயங்கியல் என்பது இயற்பியலின் ஓர் அடிப்படைக் கோட்பாடாகும். இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அப்படிப்பு குறித்த குறைந்தபட்ச புரிதல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வேவ் பங்சன், சுரோடிங்கர் சமன்பாடு, எக்ஸ்பெக்டேஷன் வேல்யூஸ் போன்றவை குறித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படிப்பை ஐஐடி - பாம்பேயின் இயற்பியல்துறை பேராசிரியை பி.ரமாதேவி நடத்தவிருக்கிறார்.

குவான்டம் மெக்கானிக்ஸ் குறித்த இலவச ஆன்லைன் படிப்பின் காலம் 12 வார காலமாகும். இம்மாதம் 18 - ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஏப்ரம் மாதம் 9 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இந்தப் படிப்பில் லினியர் வெக்டார் ஸ்பேஸ், கிளாசிக்கல் யள் குவான்டம் மெக்கானிக்ஸ், பெளண்ட் ஸ்டேட்டஸ், ஃபங்சன் பேஸஸ், இன்ட்ரடக்ஷன் டூ குவாண்டம் மெக்கானிக்ஸ் உள்பட குவாண்டம் மெக்கானிக்கஸ் தொடர்புடைய பல பிரிவுகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

நேஷனல் புரோகிராம் ஆன் டெக்னாலஜி என்ஹான்ஸ்டு லேர்னிங் (என்பிடிஇஎல்) என்ற தொலைநிலைக் கல்வியை வழங்கும் நிறுவனத்தின் வழியாக, இந்த இலவசப் படிப்பை ஐஐடி - பாம்பே வழங்குகிறது.

இந்த என்பிடிஇஎல் நிறுவனத்தின் வாயிலாக ஐஐடி - பாம்பே, ஐஐடி - டெல்லி, ஐஐடி- கான்பூர் உள்ளிட்ட ஐஐடி களும், ஐஐஎஸ்ஸி- பெங்களூர் உள்ளிட்ட பல கல்விநிறுவனங்களும் தொலைநிலைக் கல்வி வகுப்புகளை நடத்துகின்றன.

இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாம்பே ஐஐடியின் இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம். ஜனவரி 25-ஆம் (2021) தேதிக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும்.

இந்த இலவச ஆன்லைன் படிப்பை முடித்தமைக்கான சான்றிதழைப் பெறுவதற்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். ஐஐடி - பாம்பே, என்பிடிஇஎல் ஆகிய இரண்டும் இணைந்து சான்றிதழை வழங்குகின்றன. இந்த படிப்புக்கான தேர்வு ஏப்ரல் 25-ஆம் (2021) தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT