இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

23rd Feb 2021 06:00 AM

ADVERTISEMENT

 

முக நூலிலிருந்து....

ஒவ்வோர்அனுபவமும் எழுதப்படாத ஒரு புத்தகத்தின் பக்கங்கள்.

லீலா லோகநாதன்

 

ADVERTISEMENT

தகுதி இருக்குமாயின் எப்போது வேண்டுமானாலும்
என்னைக் கைவிடலாம்...
நீங்கள் கைவிடுவதற்கு யாருமில்லையென
நினைக்க வேண்டாம்.

செங்கான் கார்முகில்

 

இயற்கையோடு மனிதன் போராடியது போக,
இயற்கை தன்னைக் காத்துக் கொள்ள மனிதனோடு போராடும்
காலம் வந்திருக்கிறது.

யவனிகா ஸ்ரீராம்


ஒருவரோடு ஒருவர் உள்ளங்கலந்து உரையாடுவது என்பது,
நாம் ஒருவரையொருவர் நன்றாக அறிந்திருந்தாலுங் கூட,
மிகக் கடினமாக இருக்கிறது.

திருமாவேலன்

 

சுட்டுரையிலிருந்து...


எத்தனை குழப்பத்திலும்,
நிதானமாக பறக்கும் பறவைகள்...
வலை இருப்பதைக் கவனிக்க மறந்தது போலத்தான்,
நமது வாழ்க்கையும்.

கிறுக்கன்

 

சந்தோஷத்தில்கை குலுக்கும் ஐந்து விரல்களை விட,
கஷ்டத்தில் கண்துடைக்கும்ஒரு விரலே மேலானது.

மைக்


வலி இல்லாத
வாழ்க்கையும் இல்லை;
வழி இல்லாத
வாழ்க்கையும் இல்லை;
வலிகளைக் கடந்து
வழிகள் தேடுவோம்.

வினோதினி ஜெகநாதன்

 

எல்லோருடையகேள்விகளுக்கும் விடையளித்துவிடலாம்;
உன் மனசாட்சியின்கேள்விகளுக்கு நீ கை கட்டி தான்நின்றாக வேண்டும்.

கர்ணன்

வலைதளத்திலிருந்து...


பூமியில் உள்ள கனிமங்களில் பல நம் உடலுக்கு எவ்வளவு அத்தியாவசியம் ஆகிறதோ அதேயளவிற்கு நம் உடலை பலமாக வைத்திருக்க போதுமான அளவு சூரிய வெளிச்சமும் நம் உடலுக்கு அவசியமாகிறது. ஒரு மரம் அதன் பூர்வீக நிலத்தில் செழித்தது வளர்வது இயற்கையான ஒன்று, இருப்பினும் அது அந்த நிலத்தோடும் காலநிலையோடும் பல்வேறு போராட்டங்களின் மூலமே பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் என்பதும் நாம் மனதில் கொள்ள வேண்டிய இன்னொரு விடயமாகும் அதே மரத்தை இன்னொரு முறை வேரோடு பெயர்த்து அதற்கு ஒவ்வாத மற்றும் அது இதுவரை பழக்கப்படாத தட்ப வெப்ப சூழலில் வளர்ப்பது என்பது பெரிதும் சவாலான ஒரு விடயம். மனிதர்களுக்கும் இது பொருந்தும். இன்று இயற்கை அனர்த்தங்கள், உள்நாட்டுப்போர் போன்ற விடயங்களால் சூழ்நிலையின் கைதிகளாக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் மக்கள், வெப்ப வலைய நாடுகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கடும் பனி குளிர் காலநிலை கொண்ட மேற்கு உலகம் புலம் பெயர்ந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

குறிப்பாக விளிம்புநிலை பொருளாதாரச் சூழலில் இருந்து வந்த பெண்கள், புலம் பெயர் நாடுகளில் படும் இன்னல்களைப்பார்த்தால் இவர்கள் கதைகள் கொதிக்கிற எண்ணையில் இருந்து நெருப்பில் விழுந்த கதையாக இருக்கிறது.

பெருநகரங்களின் உருவாக்கத்திற்கு பின்னர் பொருளாதார மாற்றம் காரணமாக பெருநகரங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்ட பெண்களின் வாழ்வு, நான்கு சுவர்களுக்குள் அடைபடும்போது அவர்களுக்கு வரும் நோய்களின் மூலகாரணம் போதிய சூரிய ஒளி அற்ற வாழ்வுச் சூழல், சமூக ஊடாட்டம் அற்ற வாழ்வு, தனிமை மற்றும் அதன் நிமித்தம் ஏற்படும் மனவுளைச்சல், கவனிக்கப்படாத மனவுளைச்சல் நாளடைவில் ஃபிப்ரோமியால்ஜியோ போன்ற உடல் வலியாக பரிமாணம் கொள்ளுதல் ஆகும்.

இங்கு பல மருத்துவர்கள் நோய்க்கான மூல காரணிகளைக் கண்டுபிடிப்பதை விட்டு விட்டு நோயின் அறி குறிகளை தற்காலிகமாகக் குறைக்கும் மருந்துகளைக் கொடுக்கிறார்கள். இது இவர்களை மேலும் பலவீனமாக்குகிறது.
‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌o‌o‌d​a‌r‌u.​c‌o‌m

Tags : இணைய வெளியினிலே...
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT