இளைஞர்மணி

அஞ்சல்துறையிலிருந்து ஐஏஎஸ் வரை!

வி.குமாரமுருகன்

""திறமை மிக்க பல இளைஞர்கள் தங்களுக்கு கிடைத்த ஆரம்பநிலை ஊழியர் பதவியை விட்டுவிட்டு உயர் நிலைக்கு வருவதில் விருப்பம் இல்லாமல் கிடைத்த வேலையில் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அத்தகையவர்கள் சற்று கடினமாக உழைத்தால் பெரும் உயர் பதவியை எட்ட முடியும்'' என்கிறார் பாராளுமன்ற செயலக தொலைத் தொடர்புத்துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற தென்காசியைச் சேர்ந்த என்.எம்.பெருமாள். அவர் நம்மிடம் கூறியதாவது:

""கடந்த ஜனவரி மாதத்தில் தமிழக அஞ்சல் துறை, கிராம அஞ்சலகச் சேவை அலுவலர்களுக்கான நேரடித் தேர்வு முடிவை வெளியிட்டது. மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வித் தகுதிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் கிடையாது. தேர்வர்களின் மதிப்பெண்களைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிரமிப்பு ஏற்பட்டது. எந்தப் பிரிவைச் சார்ந்த இளைஞர்கள் என்றாலும் 98 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் நிறைந்த அளவில் இருந்தார்கள்.

இன்றைய தமிழக இளைஞர்களின் அறிவு சார்நிலையை ஒப்பிடும்போது தேர்வு பெற்றுள்ள 3000 தேர்வர்களும் உயர் நிலை அறிவுத்திறனுடன் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவர்களில் அநேக சேக்ஸ்பியர்களும், கம்பர்களும், ஐன்ஸ்டைன்களும், ராமானுஜர்களும் மறைந்து இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆசிரியர்களின் தூண்டுதலால் பல்வேறு நூல்களைப் படித்து அவர்கள் நிலையில் அறிவின் விளிம்பைத் தொட்டவர்கள் இவர்கள் என்று கூட கூறலாம்.

அஞ்சலகத் துறையில் ஒரு சாதாரண வேலையில் சேர்ந்திருக்கும் இவர்கள் மத்திய அரசில் உள்ள உயர்நிலை வேலைகளையும் சற்று கடின உழைப்புடன் முயற்சித்தால் அடையலாம். ஐஏஎஸ் தேர்விலும் இவர்கள் வெற்றி அடைய முடியும்.

உயர்நிலை மதிப்பெண்கள் எடுத்து கிராம அஞ்சலக சேவையில் சேர்ந்திருப்பவர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம் எனக் கூற முடியும். இது நம்மால் முடியுமா என பலருக்கு சந்தேகம் எழுவது இயற்கை. இந்த 3000 பேரும் குறைந்தது மத்திய அரசின் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியாக உயர கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசில் இந்தியும், ஆங்கிலமும் அலுவலக மொழிகளாக உள்ளன. இந்த இரண்டு மொழிகளிலும் புலமை பெறுவதற்கு அஞ்சலகத் துறை அலுவலர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசில் கணிசமான பதவிகளுக்கு தேர்வுகள் ஆங்கிலம், இந்தி என்ற இரு மொழிகளில் மட்டுமே நடைபெறுகின்றன. எனவே கிராம அஞ்சலகச் சேவையாளர்கள் மத்திய அரசு தேர்வுகளில் நல்ல முறையில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மத்திய அரசு சார்ந்த தேசிய தேர்வு முகமை விரைவில் புதிய செயல்பாட்டுடன் செயல்பட உள்ளது. எஸ்எஸ்ஸி, வங்கி, ரெயில்வே போன்றவற்றுக்கு ஒருங்கிணைந்த முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்ட நிலை என்ற மூன்று நிலைகளிலும் ஆண்டுக்கு இருமுறை முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட உள்ளன. அஞ்சலகச் சேவையாளர்கள் வயது வரம்பிற்குத் தகுந்தவாறும் கல்வித் தகுதிக்குத் தகுந்தவாறும் எல்லாத் தேர்வுகளிலும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக மத்திய அரசு நடத்தும் கீழ்நிலைத் தேர்வுகள் பல தமிழக தேர்வாணையத் தேர்வுகளைக் காட்டிலும் தேர்வர்களைப் பொறுத்தவரையில் சற்று எளிதானதாகும். தமிழகத் தேர்வாணையத் தேர்வுகளில் பல கேள்விகள் சமச்சீர் பாடத் திட்டத்தை அடியொற்றியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதற்காக பெரும்பாலான தமிழக மாணவர்கள் 6 முதல் 12 - ஆம் வகுப்பு வரை அனைத்துப்; பாடநூல்களையும் பருவம் வாரியாக படிக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்வரும் கிட்டத்தட்ட 35 முதல் 50 பாடநூல்களைப் படிக்கிறார்கள்.

மத்திய அரசு தேர்வுகளைப் பொருத்தவரையில் கிட்டத்தட்ட 15 முதல் 20 பாடநூல்களைப் படித்தால் போதுமானது. 11,12- ஆம் வகுப்புகளின் வரலாறு பாடம், 10 ஆம் வகுப்பு புவியியல், 9,10,11,12 -ஆம் வகுப்பு பொருளாதாரம் தொடர்பான பாடங்கள் , 9,10- ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள், 8,9,10 -ஆம் வகுப்பு கணக்கு பாடங்கள் இவற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவற்றைத் தவிர 11,12- ஆம் வகுப்பு பாடங்களில் அரசியலமைப்புச் சட்டப் பகுதிகளை மட்டும் படித்தால் போதுமானது. 11,12 -ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களை மேலோட்டமாக பார்த்தால் போதும். பொருளியலில் இந்திய பொருளாதாரத்தில் புள்ளி விவரங்கள் தற்கால நிகழ்வுகளாக இருக்க வேண்டும்.

மேலும் ஒரு சில இயர் புக்குகளையும் படிக்க வேண்டும். ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்எஸ்சி) நடத்தும் தேர்வுகளில் மிக அடிப்படையான தேர்வு பன்முக உதவியாளர் தேர்வாகும். விஏஓ தேர்வைப் போன்று அடிப்படைத் தகுதி 10- ஆம் வகுப்பு மட்டுமே. இதற்கு அடுத்தாற் போல ஒருங்கிணைந்த +2 நிலைத்தேர்வு நடத்தப்படுகிறது. அஞ்சல் பிரிப்பாளர், அஞ்சலக உதவியாளர்கள் போன்ற பதவிகள் இத்தேர்வினால் நிரப்பப்படுகின்றன. ஒருங்கிணைந்த பட்ட நிலைத் தேர்வு, வருமான வரி ஆய்வாளர், சுங்க ஆய்வாளர், அஞ்சல் துறை ஆய்வாளர் போன்ற பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. மூன்று வித தேர்வுகள் ஒவ்வொன்றிலும் ஆண்டுக்கு 5000 முதல் 10,000 பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இதைத் தவிர வங்கிகளில் உதவியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு பலவிதமான தேர்வுகள் உள்ளன. மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளான D​R​DO, EPF, IB, ESI, RBI, R‌l‌y, D‌e‌f‌e‌n​c‌e, IS​R​O போன்றவையும் ஆண்டு தோறும் தேர்வுகளை நடத்தி வருகின்றன. ஜீடிஎஸ் அனைவரும் தங்களின் வயது கல்வித்தகுதிக்கேற்ப அனைத்துத் தேர்வுகளிலும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக மத்திய அரசு தேர்வுகளில் பொது அறிவு, புத்திக்கூர்மை, கணிதம், அடிப்படை ஆங்கிலம் ஆகிய நான்கு பகுதிகள் இருக்கும். வங்கி சார்ந்த தேர்வுகளில் கணினி இயலுக்கும், பொருளாதாரம் மற்றும் வங்கி இயலுக்கும் சற்று அழுத்தம் கொடுக்கப்படலாம். தேர்வர்கள் எல்லாப் பாடங்களிலும் புலமை பெற முயற்சிக்க வேண்டும். கிராமப்புற அஞ்சல் சேவையாளர்களுக்கு
(G​D​S) பகுதி நேர வேலையாக இருப்பதால் மீதி நேரங்களை நன்கு பயன்படுத்தி முயற்சி மேற்கொண்டால் உயர் பதவியை எளிதாக பெற முடியும்'' என்றார் என்.எம்.பெருமாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT