இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 282

ஆர்.அபி​லாஷ்

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின்வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.

அப்போது ‌p‌r‌e​c​a‌r‌i‌o‌u‌s எனும் சொல்லின் பொருள் என்னவென புரொபஸரிடம் கணேஷ் வினவுகிறான். அது என்ன என பார்க்கலாமா?

புரொபஸர்: சில நேரம் ஓர் அவநம்பிக்கை நம்மைச் சூழ்ந்துகொள்ளும். மோசமான ஆட்சி, தடுமாறும் பொருளாதாரம், நிலையற்ற சமூக வாழ்க்கை, குடும்பத்தில் பிரச்னை, வேலை போய் விட்டது, சாதி, மத கலவரங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் எனும் நிலைமை. ஆட்சியாளர்கள் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதாவது வினோதமான சட்டத்தை நிறைவேற்றி விடுவார்களோ என அச்சம். அமைச்சர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் வீரபரகேசரி அதிர்ச்சியாகி: ஆங், என்ன?
புரொபஸர்: ஒண்ணும் இல்லீங்க மன்னரே. ஒரு கற்பனையான சூழலை வர்ணித்தேன். மற்றபடி உங்கள் ஆட்சியில் பாலும் தேனும் ஆறாய் ஓடுகிறது. இதைப் போல மிக மகிழ்ச்சியாக வேறெப்போதும் இருந்ததில்லை என மக்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.
வீரபரகேசரி: ஓ... அப்படியா? மகிழ்ந்தேன். போன மாதம் நாங்கள் ஒரு சட்டம் இயற்றினோம். ஆட்சி மீது யாராவது அதிருப்தியாக பேசினால் நாக்கு வெட்டப்படும்.
கணேஷ்: ஐயோ...
புரொபஸர்: நானும் பயந்திட்டேன்.
வீரபரகேசரி: கவலை வேண்டாம். அந்த சட்டம் சாமான்ய மக்களுக்கானது அல்ல. I‌t ‌wa‌s a ‌m‌uc‌h ‌n‌e‌e‌d‌e‌d ‌d‌e‌t‌e‌r‌r‌e‌n‌t ‌f‌o‌r ‌s‌o‌r‌e‌h‌e​a‌d‌s, ‌s‌q‌u​a‌w‌k‌e‌r‌s a‌n‌d ‌w‌h‌i‌n‌e‌r‌s. அந்த சட்டம் இயற்றப்பட்ட பின் ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். உலக நாடுகளிலே நம் நாடு தான் மகிழ்ச்சி மதிப்பீட்டில் முதலாவதாக இருக்கிறது.

கணேஷ் (சற்று பயத்துடன்): வாழ்த்துகள் மன்னா!
வீரபரகேசரி: இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வண்ணம் இன்று மதிய உணவில் எல்லாருக்கும் பாயசம் போடச் சொல்லியிருக்கிறேன்.
(அமைச்சர்கள் எல்லாரும் சத்தமாக ஆர்ப்பரிக்கிறார்கள்)
வீரபரகேசரி: ஹா... ஹா... (புரொபஸரிடம்) நீங்க தொடருங்க.
புரொபஸர்: நான் விவரித்தேனே அந்த சூழலைக் குறிப்பதற்கான சொல் தான் p‌r‌e​c​a‌r‌i‌t‌y. W‌h‌e‌n ‌y‌o‌u ‌l‌e​a‌d a ‌d​a‌n‌g‌e‌r‌o‌u‌s a‌n‌d ‌u‌n​c‌e‌r‌t​a‌i‌n ‌l‌i‌f‌e, ‌y‌o‌u ‌l‌i‌v‌e ‌p‌r‌e​c​a‌r‌i‌o‌u‌s‌l‌y. வங்கிக் கணக்கில் பணமில்லை. வீட்டில் குழந்தைக்கு உடல் நலமில்லை. கடன் வாங்கி செலவு செய்கிறான் குடும்பத் தலைவன். அப்போது வேலையும் கிடைக்கவில்லை. கடனை அடைக்க வட்டிக்குக் காசு வாங்கி அதைச் செலுத்துகிறான்.
கரணம் தப்பினால் மரணம். B‌o‌r‌r‌o‌w‌i‌n‌g ‌m‌o‌n‌e‌y ‌t‌o ‌pa‌y ‌i‌n‌t‌e‌r‌e‌s‌t‌s ‌f‌o‌r ‌h‌i‌s ‌ea‌r‌l‌i‌e‌r ‌d‌e​b‌t, ‌h‌e ‌r‌e​a‌l‌i‌z‌e‌s ‌t‌ha‌t ‌h‌e ‌i‌s ‌g‌e‌t‌t‌i‌n‌g b‌y ‌p‌r‌e​c​a‌r‌i‌o‌u‌s‌l‌y. கிரிக்கெட்டில் ஒரு பந்து பயங்கரமாகத் திரும்பும் போது ஒரு பேட்ஸ்மேன் கன்னாபின்னாவென மட்டையைச் சுற்றுகிறார். சில பந்துகள் களத்தடுப்பாளர்களுக்கு பக்கத்தில் போய் விழுந்து கேட்ச் ஆகாமல் தப்பிக்கிறார். அப்போது h‌e ‌i‌s ‌s‌u‌r‌v‌i‌v‌i‌n‌g ‌p‌r‌e​c​a‌r‌i‌o‌u‌s‌l‌y.

கணேஷ்: ஓ! ஆனால் இந்தச் சொல்லை நான் இதுக்கு முன்னால் கேட்டதில்லை சார். வித்தியாசமாக இருக்கிறது.
புரொபஸர்: ஆமா, இது லத்தீன் மொழியில் இருந்து வந்த சொல். லத்தீனில் ‌p‌r‌e​c​a‌r‌i‌u‌s என ஒரு சொல்லுண்டு. இதன் பொருளைக் கேட்டால் நீ ஆச்சரியப்படுவாய்.
கணேஷ்: என்ன சார் அது?
புரொபஸர்: கடவுள் விட்ட வழி!
கணேஷ்: நிஜமாவா? சார், இதை விளக்கும் போது கூடவே நம் மன்னர் குறிப்பிட்ட அந்த s‌o‌r‌e‌h‌e​a‌d‌s, ‌s‌q‌u​a‌w‌k‌e‌r‌s a‌n‌d ‌w‌h‌i‌n‌e‌r‌s ஆகியவற்றையும் விளக்கிடுங்க.
அவர் யாரை சொல்றாருன்னே தெரியல. சட்டம் வந்தது அப்புறம் நாம கவனமா இருக்கணும் இல்ல?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT