இளைஞர்மணி

தேவையானதை மட்டும் வாங்குங்கள்!

14th Dec 2021 06:00 AM | - ஆர்.வி.

ADVERTISEMENT

 

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் நாமே மாசுபடுத்திவிட்டு மருத்துவமனை வாசலில் நிற்கிறோம். இது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை.

மனிதர்களாகிய நாம் இயற்கையோடு இணைந்து வாழ்கிறோமா? என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அதிகரித்து வரும் கார்பன் உமிழ்வுகள், காடுகள் அழிப்பு மற்றும் நிலச் சீரழிவு ஆகியவை நமது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவித்து வருகின்றன.

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொருத்தவரை தனிநபர்களின் பங்களிப்பை விட, பெரிய நிறுவனங்கள், அரசாங்கங்களின் பங்களிப்பு அதிகத் தேவையாக இருக்
கிறது. நாடுகளும் பெரும் நிறுவனங்களும் உற்பத்தி, விநியோகம் தொடர்பான தங்களுடைய கொள்கைகளையும் செயல்களையும் மாற்றினால் மட்டுமே பெரியமாற்றங்கள் சாத்தியம்.

தனிமனிதன் என்கிற முறையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நம்மால் முடிந்த பணிகளைச் செய்ய வேண்டும்.

தன்னார்வத் தொண்டு
உலகம் முழுவதும் பல வெற்றிகரமான இளைஞர்கள் தலைமையிலான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவை இன்று நமக்கு முன்னுதாரணங்களாகஉள்ளன. அவற்றில் இணைந்து நீங்கள்சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உங்கள் பணியை நிறைவேற்றலாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்களுக்கு உதவலாம். ஆன்லைன் விழிப்புணர்வுபிரசாரங்களை நடத்தலாம்.

காகித பயன்பாட்டைக் குறைத்தல்
காகிதம் மரங்களில் இருந்து தயாரிக்கப்படுவது. நாம் பயன்படுத்தித் தூக்கியெறியும் ஒவ்வொரு காகிதமும் மரத்தின் பகுதியே. நாம் காகிதப் பயன்பாட்டைக் குறைக்க குறைக்க மரங்களை வெட்டுவது குறையும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படும் காகிதங்களின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தால், காகிதப் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கேடு எவ்வளவு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள இயலும்.

இதேபோல் தேவையற்ற காகிதத்தை மறுசுழற்சி செய்வது காகித உற்பத்திக்கான மூலப்பொருட்களின் தேவையை குறைக்கும், இதனால் மரங்கள் மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாக்க முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று கிடைக்கும் கணினி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், எல்லா நிலைகளிலும் காகித அடிப்படையிலான செயல்பாடுகளிலிருந்து நாம் விலகிநிற்கலாம்.

கழிவுகளை நீக்குங்கள்
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வீடுகளில் இருந்து தேவையற்றது என்று தூக்கிப் போடப்படும் குப்பை, கூளங்கள் எல்லாமே கழிவுகள்தாம்.

நாம் பயன்படுத்திய பொருட்களை தூக்கிப் போடாமல், அவற்றை வேறு வடிவில் மாற்றி பயன்படுத்தலாம். உதாரணமாக உடைந்து போன பிளாஸ்டிக் நாற்காலியை, மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் வாளி செய்யலாம். இவ்வாறு மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இதே பொருள்களை புதிதாக ஆக்கத் தேவைப்படும் மூல வளங்களும் ஆற்றலும் வீணாவது தடுக்கப்படும்.

குப்பைகளை தரம் பிரிப்பது, மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்வதுஅல்லது அதன் தேவைகளை குறைக்க முற்படுவது, மண்ணில் மக்காத பொருளை ஒரு நாளும் ஊக்குவிக்காமல் தவிர்ப்பது போன்ற செயல்களை தனிமனிதனாகஅன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.

வளங்களைச் சேமித்தல்
நமக்குக் கிடைக்கும் 70 சதவிகிதம் தண்ணீரில் 0.03 சதவிகிதம் மட்டுமே நன்னீர். அதனால்தான், நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தண்ணீரைச் சேமிப்பது மிகவும் முக்கியமானது.

குளிப்பது, துவைப்பது, பாத்திரம்கழுவுவது, வீட்டைச் சுத்தம் செய்வதுஆகியவற்றுக்கு எவ்வளவு குறைவான தண்ணீர் செலவழிக்க முடியுமோஅவ்வளவு குறைவான தண்ணீரைச் செலவழிக்க இளைஞர்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏரி, குளம், குட்டை, நீரூற்று, நீரோடை, ஆறு போன்ற நீர் ஆதாரங்களை மாசுபடுத்தக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்
நிலம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் இரண்டையும் ஆபத்தில் ஆழ்த்தும், மண் மற்றும் கடல் மாசுபாட்டிற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பிளாஸ்டிக் ஆகும். எனவே எந்த ஒரு பொருளை வாங்கும் போதும், அதன் சுற்றுச்சூழல் பாதிப்புத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பேனாக்கள், பொம்மைகள், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கும்போது முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பொருள்களை வாங்காமல் தவிர்க்க இளம் தலைமுறையினர் நினைக்க வேண்டும்.

தேவையானதை மட்டும் வாங்குங்கள்
தேவைக்கு அதிகமாக வாங்கும் வழக்கம் இல்லாமல் இருந்தால்தான் இவ்வுலகத்தில் அத்துனை உயிர்களுக்கும் வாழ இடமும், உணவும் கிடைத்து கொண்டேயிருக்கும். அதனால்தான் நம் முன்னோர்கள் தேவைக்கு அதிகமான நுகர்வை குறைத்து வாழ்ந்து வந்தார்கள். இன்று இருப்பது போல் அவர்களிடம் அதிகமான உடைகள், ஆபரணங்கள், ஆடம்பரமாக ஒன்றுக்கு மூன்று கார்கள் இல்லை.

மகிழுந்துக்கு பதில் கால்நடைகளும், கால்களும் வேலைகளை செய்தன. உடைகளைக்கிழியும் வரை உடுத்தினார்கள். உணவுப் பண்டங்களை வீணாக்குவதை பாவம் எனக் கருதினார்கள்.

மளிகைப் பொருள்கள், உடைகள், அணிகலன்கள் அல்லது வீட்டுப் பொருள்கள் எதுவாக இருந்தாலும், தேவையானதை மட்டும் வாங்குவதன் மூலம், உற்பத்திசெய்யப்படும் கழிவுகளின் அளவைக் குறைக்க முடியும். "உலகின் நம்பிக்கை இளைஞர்கள் மீது ஏற்பட்டுள்ளதால் நிலம், நீர், காற்று மாசுபடாமல் பாதுகாப்பதை நாம் ஒவ்வொருவரும் தன் வாழ்வியல் நெறியாக கருதி வாழ்ந்து காட்டுவோம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT