இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

பரிதி இரா. வெங்கடேசன்


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை


பணி:  சீனியர் சயின்டிஸ்ட்  - 03

தகுதி: கெமிஸ்ட்ரி, பயாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,19,532

வயது வரம்பு:  37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: சயின்ஸ்டிஸ்ட்  - 05

தகுதி: பாலிமர் கெமிஸ்ட்ரி, பாலிமர் சயின்ஸ்,  பயோ ஆர்கானிக்ஸ், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இயற்பியல், பயோ இயற்பியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,03,881

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செமினார் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruit.clri.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி:  Recruitment Section, CSIR-Central, Leather Research Institute, Sardar Patel Road, Aayar, Chennai - 600 020

மேலும் விவரங்கள் அறிய : https://recruit.clri.org/uploads/advt/Advt.No.1-2021.pdf  என்ற லிங்க்கில் சென்று பாருங்கள்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  06.08.2021
அஞ்சலில் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசித் தேதி: 23.08.2021

நபார்டு வங்கியில் வேலை


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பணி: ஜெனரல் - 74
பணி: அக்ரிகல்ச்சர் - 13
பணி:  அக்ரிகல்ச்சர் என்ஜினியரிங் - 03
பணி:  அனிமல் - ஹஸ்பண்ட்ரி - 04
பணி:  ஃபிஷரீஸ் - 06
பணி:  ஃபாரஸ்ட்ரி - 02
பணி: பிளான்டேஷன்  / ஹார்ட்டிகல்ச்சர் - 06
பணி: லேண்ட் டெவலப்மென்ட்   / சாய்ல் சயின்ஸ்  - 02
பணி: வாட்டர் ரிசோர்சஸ்  - 02
பணி:  பைனான்ஸ் - 21
பணி:  கம்ப்யூட்டர் / இன்பர்மேஷன் டெக்னாலஜி - 15

தகுதி: பணி சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதுக்குள்  இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.28,150 - ரூ.55,600

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெறும்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் போன்ற நகரங்களில் நடத்தப்படும்.

விண்ணப்பக் கூட்டணம்: ரூ.800. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1607211640Grade%20A-2021%20Advt.pdf  என்ற லிங்க்கில் சென்று பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.08.2021

துணை ராணுவப் படையில் வேலை
 

பணி: சப் இன்ஸ்பெக்டர் (பயனீர்) 
காலியிடங்கள்: 18

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி:  சப் இன்ஸ்பெக்டர் (ட்ராஃப்ட்ஸ்மேன்)  
காலியிடங்கள்: 03

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் 

பணி: சப் இன்ஸ்பெக்டர் (கம்யூனிகேஷன்) 
காலியிடங்கள்: 56

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல், இயற்பியல், தகவல் தொடர்பியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டாப் நர்ஸ்)  
காலியிடங்கள்: 39

வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி:  அறிவியல்  பாடப்பிரிவில்  பிளஸ் 2 தேர்ச்சியுடன் 3 ஆண்டு பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ. 1,12,400

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண்கள் பிரிவினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்கள் அறிய : https://nvshq.org/wp-content/uploads/2021/07/Notification-SSB-Sub-Inspector.pdf என்ற லிங்க்கில் சென்று பாருங்கள்.


விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  07.08.2021

அணுசக்தி கழகத்தில் வேலை


பணி: சயின்டிபிக் ஆபீசர் (குரூப் ஏ) 

சம்பளம்: மாதம் ரூ.56,100

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், பயோ சயின்ஸ், ஜியாலஜி, அப்ளைடு ஜியோகெமிஸ்ட்ரி, ஃபுட் டெக்னாலஜி போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை: GATE-2020 அல்லது GATE-2021 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். GATE தேர்வு எழுதாதவர்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செப்டம்பர் 2021-இல் நடைபெறும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் முதலில் பழ்ஹண்ய்ங்ங் நஸ்ரீண்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீ ஞச்ச்ண்ஸ்ரீங்ழ் ஆக பணியமர்த்தப்படுவர். தேவையான பயிற்சிக்குப் பின்னர் Scientific Officer  ஆக நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.barconlineexam.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய :

http://barconlineexam.in/document/BARC_information_brochure_2021_Final.pdf என்ற லிங்க்கில் சென்று பாருங்கள்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.08.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT