இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

DIN


முக நூலிலிருந்து....

இலக்கு நோக்கிய அம்பிற்குத் தெரியுமா பயணத்தின்  வெற்றி?
இலகுவாக நகரும் இசைக்குத் தெரியுமா காற்றின் வெற்றி?
வெற்றியின் இலக்கணம் பிறரை விஞ்சுவதா?
தன்னை அறிவதா?
நீர்க்குமிழியும் நீரும் எவ்வெற்றிக்கான முகங்கள்?

ராசி அழகப்பன்

உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு அமைதியைக் கொடுக்க முடியாது. 

- எமர்சன்


சுந்தரபுத்தன்

ஐந்து கிலோ மீட்டர் நீள சாலையில் ஆறு இடங்களில் "மாற்றுப் பாதையில் செல்லவும்' என்ற அறிவிப்புப் பலகைகள்...
குண்டும் குழியுமான வாழ்க்கையில் மட்டும் ஏன் ஒரு மாற்றுப் பாதையைக் கூட தேர்ந்தெடுக்காமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம்?

- ரத்திகா

சுட்டுரையிலிருந்து...


கூண்டுப் பறவைக்கு
வானத்தைப் பரிசளிப்பவனை
முட்டாளென்பேன்.
அதன் மொத்த வானமே
நான்கு சட்டகங்களுக்குள்
அடங்கிவிட்டதென்பதால்.
தனக்கெனப் பிழைக்கத் 
தெரிந்திருந்தால்
அதேன் கூண்டுக்குள் 
அடைபடப்போகிறது?

மிருகம்

வெற்றிகளோடு தோல்வியும் இருந்தால்தான்...
வாழ்க்கைப் புத்தகம் சுவாரஸ்யமாகும்

அன்பிற்கினியாள்


நாம் ஆகாது என்று ஒதுக்குவதுதான்...
சிலருக்கு வாழ்வின் ஆதாரமாகவே இருக்கிறது

மெர்சல் சிவா


வலைதளத்திலிருந்து...


மனிதர்கள் செய்யும் கைமுறை வேலைகள் பல  இன்று கருவிகள் அல்லது இயந்திரம் மூலம் செய்யப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். அப்படி நாளுக்கு நாள் மேலும் இயந்திரமாக்கும் சூழல் உருவாகும் பொழுது நாம் அந்த புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல்  அவசியம் ஆகிறது.   

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிவரும் இந்தச் சூழலில், வருங்கால இளைஞர்கள் அதற்கேற்ப உள்ள படிப்புகளைத் தேர்வு செய்து படித்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


ஏதாவது இருக்கின்ற ஒரு  படிப்பைப் படித்து விட்டு வேலை கிடைக்கவில்லை என்று கூறுவது இனி கூடாது. அதே போல ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் புதிய மாறி வரும் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டால் அவர்கள் வேலை பிழைக்கும். இல்லையேல் நோக்கியா போன்ற நிறுவனங்களில் திடீர் என்று வேலை போனது போல பலருக்கு நேரிடலாம். 

அதனைத் தவிர்க்க அன்றாடம் நம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எச்சரிக்கை மணி.  

ரெடிமேடாக காம்பெளண்ட் சுவர்கள் கூட தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்து விட்ட இந்த தருணம், குறைந்த பட்சம் ஒவ்வொரு மனிதரும் நான்கு அல்லது ஐந்து திறன் கொண்டிருத்தல் வேண்டும். தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்று இல்லாமல், இருக்கும் புதிய வாய்ப்புகளுக்கு ஏற்ப தன்னைத் தயார் செய்து கொள்ளுதல் தான் இதற்கு முக்கிய தீர்வு.  

செயற்கை நுண்ணறிவு எனும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் மிக அதிகமாக ஒவ்வொரு துறையிலும் நுழையக் காத்திருக்கும் மிக முக்கிய தருணம் இது. இதில் "விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார். குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்' என்பது மிகவும் பொருத்தமான வரி தான்.

http://visionunlimitedchennai.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT