இளைஞர்மணி

தூய்மையாக்கும் ரோபோ!

3rd Aug 2021 06:00 AM | -அ.சர்ஃப்ராஸ்

ADVERTISEMENT

 

கடற்கரைக்கு காற்று வாங்கச் செல்பவர்கள் கடற்கரையை மாசுபடுத்துவதும் நடைபெறுகிறது. சிகரெட்டைப் புகைத்துவிட்டு, கடற்கரை மணலில் போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். இதுபோன்று ஆண்டுக்கு சுமார் 4.5 லட்சம் கோடி சிகரெட் துண்டுகள் கடற்கரை மணலில் போடப்படுகின்றன என ஆய்வு தெரிவிக்கிறது. இந்த சிகரெட் துண்டுகளைத் தேடி சுத்தப்படுத்தும் முயற்சிகள் குறைவாக இருப்பதால், உலகம் முழுவதும் கடற்கரைகள் மாசடைந்து கிடக்கின்றன.

இந்த சிகரெட் துண்டுகளில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நச்சு ரசாயனங்கள் கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த சூழலியல் பாதிப்பைத் தடுக்க நெதர்லாந்தைச் சேர்ந்த இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் எட்வின் பாஸ், மார்ட்ஜின் லுக்கார்ட் ஆகியோர் "பீச் பாட்' எனும் ரோபோவைத் தயாரித்துள்ளனர். இந்த ரோபோ மண்ணில் புதைந்துள்ள சிகரெட் துண்டுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேடி எடுக்கும் திறன் படைத்ததாகும்.

ADVERTISEMENT

கடற்கரையில் கிடக்கும் சிகரெட் துண்டுகளைப் படம் பிடித்து இந்த ரோபோவுக்கு அனுப்பினால் போதும்; இந்த ரோபோ கடற்கரைக்கு வந்து அதில் மைக்ரோ சாப்ட் நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள இரண்டு கேமராக்களின் மூலமாகச் சிகரெட் துண்டுகளைத் தேடி கண்டுபிடித்து
எடுத்துவிடும்.
சிறு கண்ணாடித் துண்டுகளையும் இந்த ரோபோ கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தது.
பொது மக்களின் பங்களிப்புடன் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற வேண்டும் என்பதற்காகவே, மக்கள் அனுப்பும் புகைப்படங்களின் அடிப்படையில் இந்த ரோபோ செயல்படும்வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்.
குப்பைகள் அடங்கிய புகைப்படங்களை அனுப்பி வைப்பவர்களுக்கு இந்த ரோபோ மூலம் சன்மானமும் அளிக்கப்படுகிறது.
நெதர்லாந்தில் உள்ள ஸ்கிவிநின்சின் கடற்கரையில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் இந்த ரோபோ சிகரெட் துண்டுகளைத் தேடி சேகரித்துள்ளது. பத்து சிகரெட் துண்டுகளைத் தேடி எடுக்க "பீச் பாட்'க்கு சுமார் அரை மணி நேரம் ஆகிறது.

Tags : Ilaignarmani Cleaning Robot
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT