இளைஞர்மணி

கூகுளில் கணக்கு பாடங்களைக் கற்கலாம்!

அ. சர்ஃப்ராஸ்

உலகின் மூலை முடுக்குகளில் இருக்கும் விஷயங்களைத் தேட கூகுளால் மட்டுமே முடியும். ஏன்... உள்ளூர் விவகாரங்களையும் தற்போது கூகுள் தேடல் புட்டு புட்டு வைக்கிறது.

ஓர் இடத்துக்கு சென்றடையவும், அதன் விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும் கூகுள் தேடல் பயன்படுகிறது.

இதுபோன்று தேடலில் முதலிடத்தில் உள்ள கூகுள் நிறுவனம், முதல் முறையாக கல்வி தொடர்புடைய தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளது.

கல்வி தொடர்பாக கூகுள் தேடலில் பதிவிட்டால் அது தொடர்பான பிற இணையதளங்களைக் காண்பிக்கும்.

ஆனால் தற்போது கூகுள் நிறுவனமே தனது இணையதளத்தில் கணிதம், வேதியல், இயற்பியல், அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் கடினமான சந்தேகங்களுக்கு தீர்வுகளை அளிக்கிறது.

கடினமான கணக்குகளை ஸ்டெப் பை ஸ்டெப்பாக போட்டும், அதற்கு ஏற்ற விடியோக்களையும் கூகுள் தேடிக் காண்பிக்கிறது.

அல்ஜீப்ரா, பிதாகோரஸ் தியரம், ஸிம்போலேப் ஆகியவையும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்டெம் கான்சப்டில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தீர்வுகளை அளித்துள்ளது.

இதற்காக பைஜூஸ், பிபிசி பைச்சைஸ், காரியர் 360, செங், கிரேட் அப், வேதாந்து, டாப்பர் போன்ற முன்னணி ஆன்லைன் கல்வி நிறுவனங்களுடன் கூகுள் கைகோர்துள்ளது.

கூகுள் லென்ஸ் வழியாக கணக்கு கேள்வியைப் படம்பிடித்து அதற்கான விடையை தேடலில் கண்டுபிடித்துவிடலாம். இதுபோன்ற பல்வேறு எளிதான தேடல்களை கூகுள் வரும் நாள்களில் அளிக்க உள்ளது. இந்த புதியசேவைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூகுளின் கல்வி சேவை நண்பனாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT