இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 288

ஆர்.அபி​லாஷ்

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது ஜூலி ஒரு corny joke சொல்கிறது. அதில் ஒன்று இப்படி ஆரம்பிக்கிறது: I told my doctor I broke my hand in two places. அப்போது டாக்டர் என்ன பதில் சொல்லியிருப்பார்? பார்க்கலாமா?

கணேஷ்: நான் ரொம்ப யோசிச்சுப் பார்த்திட்டேன் ஜூலி. டாக்டர் என்ன சொல்லியிருப்பார், ஸ்கேன் எடுக்கணுங்கிறதைத் தவிர? 
ஜூலி: அதான் இல்ல. டாக்டர் சொன்னார்: Stop going to those two places. 

புரொபஸர்: அடப்பாவி! 
கணேஷ்: சார்... எனக்கு ஜோக் புரியவில்லை. 
புரொபஸர்: புரிந்தால் அது ஜோக் இல்லடா, இருந்தாலும் சொல்றேன். இரண்டு இடங்களில் என் கையை உடைத்து விட்டேன் என நோயாளி சொல்கிறார். அதற்கு அந்த மருத்துவரோ நீ அந்த இடங்களுக்கு இனிமேல் போகாதே என்கிறார்.
கணேஷ்: ஹா... ஹா... செம செம! 
ஜூலி: இன்னொரு ஜோக்: Why did the tomato blush?
கணேஷ்: Blush என்றால்?
ஜூலி: வெட்கி கன்னம் சிவந்து போவது.
கணேஷ்: ஓ... அதுவா? 
ஜூலி: ரொம்ப அனுபவமா? 
கணேஷ்: ஆக்சுவலி என் கேர்ள்பிரண்ட் பேச்சைக் கேட்டா நான் தான் blush பண்ணனும். சரி... இந்த கேள்விக்கு வரேன். ஏன் 
தக்காளி வெட்கப்படுது? ஏதாவது 
எக்குத்தப்பா கேட்டுட்டாங்களா? இல்லை, அதோட காதலன் கேலி பண்ணிட்டானா? 
ஜூலி: ம்ஹும்... Because it saw the salad dressing.
கணேஷ்: சாலட் ஏன் ஆடை அணியணும்? எனக்குப் புரியல. 
ஜூலி: நீ ஏன் ஒண்ணும் தெரியாத ஆள் மாதிரியே இருக்கே? சரி விடு, டிரெஸ்ஸிங் என்றால் என்ன?
கணேஷ்: ஆடை அணிவது. 
ஜூலி: அது மட்டும் தானா?
கணேஷ்: என்னய்யா குழப்புறீங்க? 
ஜூலி: டிரெஸ்ஸிங் என்பதற்கு ஒரு பொருள் 
ஒருவர் ஆடை அணிகிற process. இன்னொரு பொருள் சாலட்டில் சேர்க்கப்படும் sauce. அதே போல நீ சிக்கனை ரோஸ்ட் பண்ணும் முன்பு அதில் மசாலா கலவை ஒன்றை தேய்த்து டிரெஸ்ஸிங் பண்ணுவாய் அல்லவா அதுவும் dressing தான். கடைசியாக, உடம்பில் காயம்பட்டு மருத்துவரிடம் சென்றால் அவர் தையலோ மருந்தோ போட்டு விட்டு ஒரு லேசான மிருதுவான துணியால் கட்டுப்போடுவாரே அதையும் dressing என்று தான் சொல்லுவோம். இப்படி பல அர்த்தங்கள். இதில் தக்காளியை எதில் சேர்ப்போம்? 
கணேஷ்: சாலட்டில். 
ஜூலி: சாலட்டில் அதைச் சேர்ப்பதற்கு முன் வெட்டாமல் வைத்திருக்கிறார்கள். டிரெஸ்ஸிங் தயாரித்து இன்னொரு கிண்ணத்தில் வைத்திருக்கிறார்கள். அதைக் கண்டதும் தான் தக்காளிக்கு முகம் சிவந்து போனது. 
கணேஷ்: ஏன்? 
ஜூலி: முடியலடா! Dressing என்பதை வினைச்சொல்லாக எடுத்துக் கொண்டால் ஒருவர் ஆடை அணிவதைப் பார்ப்பதாகப் பொருள் வரும். சாலட் ஆடை அணிவதைப் பார்த்து தக்காளி வெட்கப்பட்டதாகப் பார்க்கலாம். ஆனால் இங்கு பெயர்ச்சொல்லாக வரும் போது sauce ஆகிறது. இரண்டையும் குழப்பிக் கொள்கிற போது, அந்த சாத்தியத்தை கருதும் போது காமெடியாக வருவதே இந்த ஜோக். 
கணேஷ்: ஓ...கே. சார் எனக்கு இன்னொரு டவுட். 
புரொபஸர்: கேளுடா. 
கணேஷ்: இதை ஏன் corny joke என சொல்றீங்க? இர்ழ்ய் என்றால் சோளம் தானே? இதென்ன சோள 
ஜோக்கா? 
புரொபஸர்: அதுவா? அதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு. ஒரு ஜோக் பழசா, எந்த தனித்துவமும் புதுமையும் இல்லாம, ஜவ்வு மாதிரி எடுத்ததையே திரும்பத் திரும்ப எடுத்து மெல்லுற மாதிரி இருந்தா அது corny joke. சுருக்கமா சொல்றதுன்னா, ஒரு நாகரிகம், பண்பாடு இல்லாத, காட்டுமிராண்டிகளுக்கானது எனப் பொருள். Something worn out, overtly sentimental.  

கணேஷ்: அட, நான் என்ன காட்டுமிராண்டியா? 
புரொபஸர்: இதுக்குப் போய் கொதிக்காதே. இப்போ இந்த மாதிரி மொக்கை ஜோக்குகளுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சொல் எப்படி இவ்வாறு தோன்றியதுங்குறது தான் உன் கேள்வியா?
கணேஷ்: ஆமா சார்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT