இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 261

29th Sep 2020 06:00 AM | ஆர்.அபிலாஷ்

ADVERTISEMENT

ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அப்போது மயில்களுடன் ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, மயில்களையும் ஆடுகளையும் மேய்க்கிறவர்களும் வருகிறார்கள்.
வீரபரகேசரி (மயில்களையும் மேய்ப்பனையும் பார்க்கிறார்): கான மயிலாட மோனக் குயில் பாட ... ஆஹா ஆஹா 
(அப்போது மயில் அகவுகிறது - வீரபரகேசரி தன் காதுகளைப் பொத்திக் கொள்கிறார்): அமைச்சரே! this noise is grating to my ears. Save me.
கணேஷ்: மயில் கூவுவதைக் கேட்க முடியவில்லை என்கிறாரா? 
ஜூலி: Grating என்றால் ஒரு adjective. Harsh, unpleasant sound ஐ, அதாவது கேட்க கொடூரமாக, இனிமையற்றதாக உள்ள சத்தத்தை grating எனச் சொல்லுவார்கள்.  
கணேஷ்: ஓ! மன்னா, மயில் என்றால் அப்படித்தானே அகவும்? 
வீரபரகேசரி: பார்க்க இவ்வளவு அழகாக இருக்கிறதே என நினைத்தேன். ஆனால் வாயைத் திறந்து பாடினால் சில அந்தப்புர அழகியர் குரலைப் போல ஒலிக்கிறதே. யோவ்... மயில் மேய்ப்பனே... 
மயில் மேய்ப்பன்: மன்னா 
வீரபரகேசரி: இதுக்கு டப்பிங் எதாவது கொடுய்யா. சின்னக்குயில், 
குழலினியாள் இப்படியான இனிய குரல் படைத்த பெண்களை வைத்து இவை வாயைத் திறக்கும் போது சத்தம் கொடுக்கச் சொல்லலாமா? இவை என்னைச் சுற்றி நின்று பாடி ஆடுவதை வீடியோ எடுக்கும் போது இப்படி கொடூரமாய் 
கத்தினால் நன்றாகவா இருக்கும்? 
மயில் மேய்ப்பன்: அதெல்லாம் எனக்குத் தெரியாது மன்னா. என் மயிலுக்கு எல்லாம் பசிக்குது. பூச்சி கீச்சி இருந்தா புடிச்சுக் கொடுங்க. எனக்கும் பசிக்குது. எங்க கூட்டமே மூணுவேளை சாப்பிட்டு ஆறுமாசம் ஆகுது. பல ஆயிரம் மைல்கள் வெயிலில நடந்து வர்றோம். 
வீரபரகேசரி: அதெல்லாம் பேசக்கூடாது. என் ஆட்சியில எல்லாரும் 
வயிறாரச் சாப்பிட்டு மகிழ்ச்சியா இருக்காங்கன்னு நினைக்கணும். சரியா? 
மயில்மேய்ப்பன் பயந்து: உத்தரவு மன்னா. 
வீரபரகேசரி: சரி... அதை வந்து என் பக்கத்தில் பாசமா நிக்கச் சொல்லு. நான் தடவிக் கொடுக்கிறேன். அப்புறமா என் தங்கத் தட்டில இருக்கிற முந்திரிப் பருப்பை கொத்திப் பார்க்கச் சொல்லு.  
மயில் மேய்ப்பன்: வேணும்னா கரப்பான்பூச்சியை வறுத்து வையுங்க. மொறுமொறுன்னு இருந்தா சாப்பிடும். 
வீரபரகேசரி: yuk. 
கணேஷ்: Be? 
ஜூலி: Yuk என்றால் ஒரு விசயம் அருவருப்பு ஊட்டும் போது சொல்வது.  
தளபதி முன் வருகிறார்: மன்னர் மன்னா... அமைச்சர் is no more. அவரை நீங்கள் தலைகொய்து பிணத்தை நான்கு பக்கமும் குதிரைகளால் இழுத்து கிழித்து நாற்துண்டாக்கி .... 
வீரபரகேசரி: போதுமய்யா... கேட்கவே முடியலை... எனக்குப் பசிக்கிறதய்யா.  
தளபதி: தலைமை சமையற்காரரை அழைக்கவா? 
வீரபரகேசரி: வேண்டாம். நம் அமைச்சர் முறுகலாக மசாலா தோசை போடுவதில்
வல்லவர். இப்போ எனக்கு உடனடியா தோசை வேணும். அவரது தண்டனையை நான் ரத்து செய்கிறேன். நான் அவரை அமைச்சராக்கியதே அந்த தோசை, வெங்காய சட்னிக்காகத்தானே? என்ன ஒரே பிரச்னை... he would cook the books often.. கேட்டால் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொள்வது.  
கணேஷ்: என்ன புத்தகங்களை எல்லாம் போட்டு சமைப்பாரா? நினைத்தாலே I feel like throwing up. என்ன ஜூலி, எப்படி என் பிரயோகம்? 
ஜூலி: Throw up என்பது வாந்தி எடுப்பது அல்லது வாந்தி உணர்வு வருவது - to feel nauseous. அது சரிதான், ஆனால்... 
கணேஷ்: என்ன நோனால்? 
ஜூலி: Cook the books என்றால் புத்தகத்தை அடுப்பில் போட்டு சமைப்பதல்ல. 
கணேஷ்: பின்னே? 
ஜூலி: தவறாகக் கணக்கெழுதி ஊழல் பண்ணுவது. அதாவது to falsify a company’s financial accounts. 

அப்போது அமைச்சர் ஓடோடி வந்து வீரபரகேசரியின் காலில் விழுகிறார்: 
மூவுலக சக்ரவர்த்தியே... நான் மேலுலகம் சென்று தங்களைத் தரிசித்து காலடியில் அடைக்கலம் தேடலாம் என எண்ணியிருந்தபோது...
வீரபரகேசரி: சாவு பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்து விட்டு இப்போது திருவிளையாடல் வசனமா பேசுகிறாய்? Dont try to curry favor with me now. ஓடிப் போய் முறுகலாய் ... 
அமைச்சர்: மசாலா தோசை தானே? இதோ போட்டு எடுத்து வருகிறேன் 
சக்ரவர்த்தி. (ஓடுகிறார்) 
கணேஷ் புரொபஸரிடம்: சார் இந்த no more என்கிறார்களே, இதில் no என்றால் இல்லை எனப் பொருள். more என்றால் அதிகம். இதைச் சேர்த்தால் அதிகம் இல்லை எனத் தானே பொருள் வரணும். ஒருவர் செத்துப் போனார் என்பதுக்கு ஏன் இதைச் சொல்கிறார்கள்?
புரொபஸர்: ஓர் ஆங்கில வழக்கை அப்படியே தமிழில் மொழியாக்குவதால் வருகிற சிக்கல் இது. விளக்குகிறேன். 
கணேஷ்: அதோடு curry favor என்பதையும் கொஞ்சம் விளக்குங்க.

(இனியும் பேசுவோம்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT