இளைஞர்மணி

ஆரஞ்சு பழ கப்!

15th Sep 2020 12:00 AM | என்.ஜே.

ADVERTISEMENT

 

இத்தாலியில் உள்ள டுரின் நகரில் "கார்லோ ரட்டி அசோசியேட்டி' என்ற நிறுவனம் உள்ளது. இது ஒரு தொழில்நுட்ப வடிவமைப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஃபீல் தி பீல் என்ற கருவியை உருவாக்கியுள்ளது. இது 3.10 மீட்டர் உயரம் உள்ளது. இந்த கருவியில் ஒரே நேரத்தில் 1500 ஆரஞ்சுப் பழங்களை வைக்கலாம். ஆரஞ்சுப் பழத்தைப் பாதி பாதியாக வெட்டி, அதிலிருந்து சாறு பிழிந்து இந்தக் கருவி கொடுக்கிறது. அதோடு கூட இன்னொரு வேலையையும் செய்கிறது. சுற்றுப்புறத்துக்குக் கேடு செய்யாத "கப்' களைத் தயாரிக்கிறது.

ஆரஞ்சுப் பழங்களின் தோல்களை வைத்து கப்கள் தயாரிக்கப்படுகின்றன. யாராவது எங்களுக்கு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத கப்கள் தேவை என்று ஆர்டர் செய்தால் இந்தக் கருவியை முடுக்கிவிட்டுவிடலாம்.

இந்தக் கருவி ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டுகிறது. சாறு பிழியப்படுகிறது. அப்போது சாறு ஒருபுறமாகவும், ஆரஞ்சு தோல் இன்னொருபுறமாகவும் பிரிந்து விழுகிறது. அவ்வாறு பிரிந்து விழுந்த ஆரஞ்சு தோல்கள் நசுக்கப்படுகின்றன. உலர வைக்கப்படுகின்றன. அரைக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பின்னர் அரைக்கப்பட்ட அந்த ஆரஞ்சு தோல் மாவுடன், பாலிலேக்டிக் அமிலம் கலக்கப்படுகிறது. சரியான விகிதத்தில், சரியான முறையில் இந்த அமிலம் ஆரஞ்சுத் தோல் மாவுடன் கலக்கப்பட்டதும், அது பயோ பிளாஸ்டிக் பொருளாக மாறிவிடுகிறது. அவ்வாறு மாறிய பயோபிளாஸ்டிக் பொருளைச் சூடாக்கி, 3 டி பிரிண்டருக்குள் செலுத்தி, கப்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த கப்களில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றிக் குடித்த பிறகு, கீழே தூக்கி எறிந்தால் அது அப்படியே இருப்பதில்லை. மண்ணில் மக்கி கலந்துவிடுகின்றன.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத இந்த ஆரஞ்சுத் தோல் கப்களைத் தயாரிப்பதால், ஏற்கெனவே சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற பிளாஸ்டிக் கப்களின் பயன்பாடு மிகவும் குறைந்துவிடும் என்கிறது கார்லோ ரட்டி அசோசியேட்டி நிறுவனம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT