இளைஞர்மணி

கதவைத் தட்டும் வேலை வாய்ப்பு!

8th Sep 2020 06:00 AM | - இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT


கரோனா பொதுமுடக்கம்  பலருடைய வேலைவாய்ப்புகளைப் பறித்துவிட்டது. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்துவிட்டார்கள்.  வேலையில்லாமல் வீட்டினுள் எவ்வளவு நாள்கள் முடங்கிக் கிடப்பது என்று வேதனையுடன் இருப்பவர்களுக்கு,    இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 3162 கிராம அஞ்சல் ஊழியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதற்கு தகுதியான இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்  
மொத்த காலியிடங்கள்: 3,162
பணி: Gramin Dak Sevaks

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை மாநில மொழியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2 மற்றும் மேல் படிப்புகளில் கணினி அறிவியலை ஒரு பாடமாகப் படித்திருந்தால் கணினி சான்றிதழ் அவசியம் இல்லை. 

வயது வரம்பு: 01.09.2020 தேதியின்படி 18 வயது  முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.  
சம்பளம்: மாதம் ரூ.10,000  - ரூ.14,500  
தேர்வு செய்யப்படும் முறை:  தகுதி  பட்டியல் தேர்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி மற்றும் ஆண் விண்ணப்பதாரர்கள்  ரூ.100  கட்டணமாகச்  செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். 

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை: https://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  
மேலும் விவரங்களுக்கு: https://appost.in/gdsonline/Notifications/Tamilnadu-19_Cycle3.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2020 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT