இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 265

ஆர்.அபி​லாஷ்


ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர்.
அப்போது ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, ஆடுமேய்ப்பவர் ஆல் இன் ஆல் அழகுராஜாவும் அவரது ஆடான வள்ளியும் அங்கு வருகிறார்கள்.
அப்போது புரொபஸரிடம் கணேஷ் close up business Gàm phrase -இன் பொருளையும் மற்றும் turncoat என்பதில் ஏன் கோட் வருது என்கிறதையும்
விளக்குமாறு கேட்கிறான். அவர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போமா?
புரொபஸர்: அதாவது தம்பி, நான் உனக்கு close up shop மற்றும் close down a business என இரண்டு phrasesக்குமான வித்தியாசத்தை விளக்குகிறேன். நீ நாள் முழுக்க வேலை செய்கிறாய். மாலை வரு
கிறது. டயர்ட் ஆகிறாய். வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டுத் தூங்கலாம் என நினைக்கிறாய்.
கணேஷ்: ஆமா சார். எனக்கெல்லாம் அந்த ஃபீலிங் காலையிலேயே வந்திடும்.
புரொபஸர்: வேலை நேரத்தில தூக்கமா? an idle mind is a devil’s workshop.

கணேஷ்: என்ன சார், நான் வொர்க்ஷாப்பில தான் வேலை பண்ணனும்னு சொல்றீங்களா?
புரொபஸர்: சேச்சே! அதை அப்புறமா விளக்கு
கிறேன். முதல்ல சொன்ன கதைக்கே வரேன். நீ சாயந்தரம் வீட்டுக்கு கிளம்பலாமுன்னு போறியே அதான் close up shop.
கணேஷ்: அதாவது வீட்டுக்குக் கிளம்புனா close up shop ஆ?
புரொபஸர்: அட இல்லடா... at the end of the day, if you stop working you close up shop.ஒரு நாளோட முடிவில நீ வேலை செய்யறதை நிறுத்தினா அது குளோசப் ஷாப்.
கணேஷ்: ஓகே சார். அப்போ இதுக்கு கடையில வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்ல?
புரொபஸர்: அவசியம் இல்ல. அது ஓர் உருவகம் மட்டும் தான். அடுத்து அந்த பழமொழியை விளக்குறேன். Idle என்றால் என்ன?
அழகுராஜா: சிலே.
புரொபஸர்: இல்லப்பா.
அழகுராஜா: சிலே தான்.
ஜூலி: அவருக்கு சிலே நாட்டை சொல்றாரோ?
புரொபஸர்: idleக்கும் சிலே நாட்டுக்கும் என்ன சம்பந்தம்?
அழகுராஜா: அதில்லே. நாம கோயிலிலே கும்பிடுவோமே சிலே, சாமி சிலே...
புரொபஸர்: oh you mean idol?

அழகுராஜா: ஆமா செர்
கணேஷ் (ஜூலியிடம்): இவனை எப்படியாவது பல்லு தேய்ச்சு நாக்கை வடிக்க வைக்கணும். அப்
படீன்னா இவனை வச்சு ஊரே பைத்தியம் ஆவறது ஒரு முடிவுக்கு வந்திடும்.
புரொபஸர்: Idol என்பதை ஐடல் என உச்சரிப்போம். ஆனால் ண்க்ப்ங் என்பதை ஐடில் என உச்சரிப்போம். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்கிறது முக்கியம். idle என்றால் சிலை, ஆனால் idle என்றால் சோம்பேறித்தனம். The students were idle and disinterested. அதாவது மாணவர்கள் சோம்பலாக அக்கறையின்றி இருந்தார்கள். இன்னொரு பொருள் அர்த்தமற்ற, நோக்கமற்றதாக இருப்பது. உதாரணமாக, whenever I meet my friends over weekend we engage in idle chatter until run out of things to chew over.

கணேஷ்: புரிஞ்சுது சார், ஆனா உங்க ரெண்டாவது உதாரணம் சுமாராத் தான் புரிஞ்சுது.
புரொபஸர்: என்னடா புரியல?
கணேஷ்: run out of things to chew over.

புரொபஸர்: அதுவா? run out of என்றால் ஒரு
விசயம் தீர்ந்து போவது. காரில் பெட்ரோல் தீர்ந்து போச்சு என்றால் the car ran out of petrol. அடுத்து, ஒரு விசயத்தைப் பற்றி நண்பர்களுடன் பொழுதுபோக்கும் நோக்கில் அரட்டை அடிப்பதை chew over எனலாம்.
வீரபரகேசரி: இல்லை ஆசிரியரே, நீங்க சொல்வதில் ஒரு பிழை உள்ளது.
புரொபஸர்: என்ன? வர வர நினைவு மங்கிப் போகுது. தப்பா சொல்லிட்டேனா?
வீரபரகேசரி: ஆமா, chew over something என்றால் ஒரு விசயத்தைப் பற்றி பேசுவது அல்லது யோசிப்பது. அந்த விதத்தில் நீங்க சொன்னது சரிதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம்.
கணேஷ்: என்ன?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT