இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

27th Oct 2020 06:00 AM | -இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT


மத்திய அரசில் வேலை

பணி: ஜூனியர் என்ஜினியர்
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், சிவில், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400
வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 30வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி நடத்தும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்
திறனாளிகள், பெண்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_eng_je_01102020.pdf Gu என்ற என்ற இணையதள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.10.2020

 

செபி நிறுவனத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 147
பணி: அசிஸ்ட்டன்ட் மேனேஜர்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. ஜெனரல் - 80
2. லீகல்- 34
3. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி - 22
4. என்ஜினியரிங் (சிவில்)- 01
5. என்ஜினியரிங் (எலக்ட்ரிகல்)- 04
6. ரிசர்ச் - 05
7. அபிஸியல் லாங்வேஜ் - 01

ADVERTISEMENT

தகுதி: சிஏ, சி.எஸ்., சி.எப்.ஏ., சி.டபுள்யு.ஏ மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், சட்டம், எம்சிஏ., சிவில், எலக்ட்ரிகல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இவை சார்ந்த பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 29.02.2020 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு - ஐ, ஐஐ மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்
ரூ.1000 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=147 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.10.2020

 

இந்திய நாணயத் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை


பணியிடம்: ஹைதராபாத்
பணி: என்கிரேவர் (ஸ்கல்ப்ச்சர்)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.8,500 - ரூ.20,850
வயது வரம்பு: 18 வயது முதல் 28வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஸ்கல்ப்ச்சர் பாடத்தில் குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஎஃப்ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: என்கிரேவர் (மெட்டல் ஒர்க்ஸ்) - 01
சம்பளம்: மாதம் ரூ.8,500 - ரூ.20,850
வயதுவரம்பு: 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெட்டல் ஓர்க்ஸ் பாடத்தில் 55 சதவீதம் மதிப்பெண் களுடன் பிஎஃப்ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: யுஆர், ஓபிசி, இடபிஸ்யூஎஸ் பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினர் ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://igmhyderabad.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://igmhyderabad.spmcil.com/UploadDocument/ENGRAVER%20ADVERTISEMENT.8f84058e-9570-4dd4-a813-db82cdcaeeb7. என்ற லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.10.2020


சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

பயிற்சி: டிரேடு அப்ரன்டீஸ்
காலியிடங்கள்: 142
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. ஃபிட்டர் - 13
2. வெல்டர் - 09
3. எலக்ட்ரீசியன் - 09
4. எம்எம்வி - 09
5. மெஷினிஸ்ட் - 05
6. டர்னர் - 05
7. மெக்கானிக் (ரெப்ஜிரேட்டர் அன்ட் ஏர்கண்டிஷன்) - 02
8. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 02
9. ஃட்ராப்ட்ஸ்மேன் (சி) - 04
10.ஃட்ராப்ட்ஸ்மேன் (எம்) - 02
11. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டன்ட் - 03
12. ஃபுட் புரொடக்ஷன் (ஜெனரல்) - 02
13. லெபாரட்டரி ஆபரேட்டர் (சிபி) -10
14. அட்டென்ட் ஆபரேட்டர் (சிபி) -10
15. அக்கவுண்டண்ட் - 02
16. பேக் ஆபிஸ் அப்பரன்டீஸ் -17
17. எக்ஸ்கியூடிவ் (மார்கெட்டிங்)- 02
18. எக்ஸ்கியூடிவ் (ஹெச்ஆர்)- 08
19. எக்ஸ்கியூடிவ் (சிஎஸ்) - 09
20. எக்ஸ்கியூடிவ் (எஃப் அண்ட் ஏ) - 04
21. ஆபிஸ் அசிஸ்டன்ட்- 03
22. வேர்ஹவுஸ் எக்ஸிகியூட்டிவ் - 02
23. ஸ்டோர் கீப்பர் - 05
24. டேடா என்ரி ஆபரேட்டர் - 05

தகுதி : 10, +2 தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், பி.எஸ்சி., பி.காம்., எம்பிஏ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தெளிவான விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 01.10.2020 தேதியின்படி 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2020/CPCL-TA%202020-21%20-%20Advt%20-%20Final%20-%20Web.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.11.2020

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT