இளைஞர்மணி

சமூக இடைவெளி... எச்சரிக்கும் வளையம்!

ஜீவா

கரோனா தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறார்கள். முடிந்த அளவு எச்சரிக்கையாக இருக்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்க நினைக்கிறார்கள். ஆனால் வேறு பல வேலைகளுக்கிடையில் ஒரு சில நிமிடங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டாலும் கூட, அதனால் ஏற்படும் விளைவுகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடும்.

எப்போதும் எச்சரிக்கையாக இருக்க கையில் அணியும் ஒரு வளையத்தைத் தயாரித்திருக்கிறார்கள் குவால்5 இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்
தினர். கோழிக்கோடில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டின் நிதியுதவியுடன், வழிகாட்டுதலுடன் இந்த வளையம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி என்று எல்லாரும் வற்புறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தாலும் சமூக இடைவெளியை பல நேரங்களில் நம்மால் கடைப்பிடிக்க முடிவதில்லை. கடைகளில், பொது இடங்களில் நாம் தள்ளித் தள்ளி நின்றாலும் பலர் அதை கவனத்தில் கொள்வதே இல்லை. இதனால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுவிடுகிறது.

இந்த வளையத்தை ஒருவர் கையில் அணிந்து கொண்டால், 1 மீட்டர் இடைவெளியை அவர் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வளையம் அதிரத் தொடங்கும். அதையும் கவனிக்காமல் போய்விடும் நிலை ஏற்படும் என்பதால், மெல்லிதான எச்சரிக்கை ஒலி ஒலிக்கும். எல்இடி வெளிச்சத்தை டார்ச் லைட் போல வெளிப்படுத்தும். இதனால் ஒருவர் வேறு எந்த வேலையில், நினைப்பில் இருந்தாலும் உடனே விழித்துக் கொள்ள முடியும்.

இந்த வளையத்தை ஒருவர் அணிந்து கொண்டால், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைப் பிறர் தெரிந்து கொள்ள முடியும். நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் இந்த வளையத்தை அணிந்திருந்தால், அலுவலக வேலையாக வெளியே செல்வதாகச் சொல்லிவிட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருக்க முடியாது. அவர் எங்கே இருக்கிறார் என்பதை நிறுவனத்தினரால் கண்டுபிடிக்க முடியும்.

பொதுமுடக்கம் நீக்கப்பட்டு, வழக்கமான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்நிலையில், மனிதர்கள் குறிப்பிட்ட தூர இடைவெளியில் இருந்தால்தான், கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இந்த வளையத்தை தங்கள் கைகளில் அணிந்து கொண்டால் பிறரிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்து கொண்டு வேலை செய்ய முடியும்.

கையில் அணியும் இந்த வளையம் ரீ சார்ஜ் செய்யப்படக் கூடிய பேட்டரியால் இயங்குகிறது.

பிறரின் அருகாமையைத் தெரிந்து கொள்ள புளூடூத் லோ எனர்ஜி (பிஎல்இ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கையில் அணியும் இந்த வளையத்துக்கு "வெளி பேண்ட்' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT