இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

தினமணி

முக நூலிலிருந்து....

நான் பறவையிடம் சொன்னேன்:
""நான் உன்னைப் பற்றி ஒரு கவிதை எழுத விரும்புகிறேன்''
பறவை என்னிடம் கேட்டது:
""உன் வார்த்தைகளில் என் இறக்கைகளின் வண்ணங்கள் இருக்கின்றனவா?''


நா.வே.அருள்


கிடைத்தால்போதும் எனும் வரை சுவாரசிய வாழ்க்கை...
கிடைத்தும் மகிழ்வது அழகான வாழ்க்கை!
கிட்டியும் -கிட்டாமலும் வாழ்வது,அனுபவ வாழ்க்கை.

ராசி.அழகப்பன்

சுட்டுரையிலிருந்து...

சரியான நோக்கத்திற்குநாம் உண்மையாகஇருக்கும் பட்சத்தில்...
உயர்ந்த எண்ணங்கள்எப்போதும் நம்மோடுதுணை நிற்கும்.

எம்.முருகன்

புத்தகங்கள் தரும் வெளிச்சத்தை...
ஒருபோதும்செல்போன்கள்தந்து விடாது.

இதயவன்

வலைதளத்திலிருந்து...

எப்போதோ எழுந்த விசாரங்கள் (1962 டைரிக் குறிப்பிலிருந்து)
நான் ஒரு குழந்தையிடம் கேட்டேன்: ""நீ ஏன் அப்பாவை நேசிக்கிறாய்?'' என்று.
""எங்க அப்பா தான் எனக்கு சட்டை பொம்மையெல்லாம் வாங்கித் தராங்க! அதனால தான்'' என்றது.
""நீ ஏன் அம்மாவை நேசிக்கிறாய்?'' என்று கேட்டேன்.
""எங்க அம்மா தான் எனக்கு சாதம் பாலு எல்லாம் தராங்க!'' என்றது.
இதை விட நேரான எளிமையான யதார்த்தமான பதிலை பெரியவர்களால் கூட சொல்ல முடியாது. இதே கேள்வியை பெரியவர்களிடம் கேட்டிருந்தால் பொய் சொல்லியிருப்பார்கள். அன்பு , பாசம், நேசம் என்றல்லாம் வார்த்தைகளால் விளையாடியிருப்பார்கள். ஆனால் உண்மை, குழந்தை சொன்ன பதிலில் தான் நிறைய இருக்கிறது.
இதே விஷயத்தை இன்னும் சற்றுத் தொடர்ந்து பார்ப்போம். ஒரு குழந்தைக்கு அப்பா இல்லை என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தைக்கும் சட்டை பொம்மை எல்லாம் கிடைத்து விடுகிறது. என்றாலும், ""எனக்கு அப்பா இல்லையாம்மா? எனக்கு அப்பா வேண்டும்!'' என்று கேட்கும்.
அப்பா இருக்கிற குழந்தைக்கு பொம்மை, சட்டை கிடைக்காவிட்டால், அதை வாங்கித் தாவென்று அப்பாவிடம் அழும்.
ஆக குழந்தைக்கு அப்பாவும் வேண்டியிருக்கிறது... பொம்மையும் வேண்டியிருக்கிறது.
பொம்மையும் வேண்டும்... அதை வாங்கித் தர அப்பாவும் வேண்டும்... பொம்மை வாங்கித் தந்த நற்பணிக்காக அப்பாவை நேசிக்கவும் வேண்டும்!
ஆக, குழந்தையின் அன்பு அப்பாவிடம் மட்டுமில்லை. பொம்மையிடம் மட்டுமில்லை. அப்பா -பொம்மை என்ற இரண்டு வளையங்களுக்கு நடுவே ஏதோ ஓர் இடத்தில் பதிந்து போயிருக்கிறது.
அந்த அன்பு எங்கே இருக்கிறது? ஏன் ஏற்பட்டது?
அந்த இடத்தில் தான் மனிதப் பிராணிகளின் இயல்பான தொன்மையான தற்காப்பு நிலை தெரிய வருகிறது.
டார்வின் ஆய்ந்தறிந்த முடிவின் உண்மையை மேற்கூறிய குழந்தையின் இயல்பிலிருந்து ஊகிக்க முடியும்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தன்னை துன்பங்களிலிருந்தும் அபாயங்களிலிருந்தும் மீட்கவும் தனக்கு செüகரிங்களை உண்டாக்கித் தரவும் ஒரு சாதனத்தைத் தேடுகிறது குழந்தை.
அந்தச் சாதனமே முடிவில் அப்பாவாக முடிகிறது. அதுவே உயிரினங்களின் இடையறாத தொடர்ச்சிக்கு அணுசக்தியாக அமைகிறது.
http://vydheesw.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT