இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம்: 264

20th Oct 2020 06:00 AM | ஆர். அபிலாஷ்

ADVERTISEMENT


ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். 
வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அப்போது ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, ஆடுமேய்ப்பவர் ஆல் இன் ஆல் அழகுராஜாவும் அவரது ஆடான வள்ளியும் அங்கு வருகிறார்கள்.  அப்போது புரொபஸரிடம் கணேஷ் close up business 
என்பதன்பொருள் என்ன எனக் கேட்கிறான். அதற்கு புரொபஸர்  அளிக்கும் பதிலை மறுக்கிறார் அழகுமலை. அதற்கு பதில் கூற முயலும் புரொபஸர் வேறு பல புதிய சொற்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.

புரொபஸர்: பொருள் குற்றமா? அதிருக்கட்டும். முதல்ல
ஸ்ரீ என சொல்லக் கத்துக்கோ. அது ஜ்ரீ இல்ல. 
அழகுராஜா: நாங்க ஆட்டுக்காரங்க அப்படித்தான் வணக்கம் சொல்லுவோம். ஜெய் ஜ்ரிராம். 
ஜூலி பயந்து பின்வாங்குகிறது: புரொபஸர், ஐயோ புள்ள புடிக்கிறவரு. அவங்கதான் ஓம்க்ரீம் எல்லாம் சொல்லி மயக்குவாங்க. 
புரொபஸர்: நீ புள்ளபிடிக்கிறவனாப்பா? 
அழகுராஜா: இல்ல ஐயா. ஆயா ஜாம், காயா ஜாம். 
புரொபஸர்: ஆங்? 
ஜூலி: புரொபஸர் இவர் சொல்றது ஆயா ராம், காயா ராம். இது ஹரியாணா மாநிலத்தில் தோன்றி பின்னர் நாடு முழுக்க பிரசித்தமான ஒரு சொலவடை. அதாவது ராமர் வந்தார், ராமர் போனார். இன்றைக்கு ஒரு கட்சி, நாளைக்கு இன்னொன்னு, நாளை மறுநாள் எந்த கட்சின்னு அவருக்கே தெரியாது. 
அழகுராஜா: கரெக்ட். நான் கூப்பிட்டா அடுத்த கட்சிக்காரங்க திரும்பி தன் கூட்டத்திடம் காயா ஜாமுன்னு சொல்லிட்டு வந்திருவாரு. 
புரொபஸர்: அது ஜாம் இல்ல ராம். 
அழகுராஜா: எங்க ஆட்டுக்கார கூட்டத்தில நாங்க அப்படித்தான் சொல்லுவோம். I only trade with turncoats and defectors.  
அவங்க எங்க ஆடுகளைப் பார்த்து நாங்களும் மேய்க்குறோமுன்னு சொன்னா கூட கூட்டிக்கிட்டு வருவேன். 
கணேஷ்: Defectors, turncoats  என்றால்?
புரொபஸர்: டர்ன்கோட் என்றால் a person who shifts allegiance from one loyalty or ideal to another, betraying or deserting an original cause by switching to the opposing side or party. அதாவது ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குத் தாவுவது, குறிப்பாக தமது ஆதாரமான கொள்கையை மதிக்காமல் அதற்கு எதிரான கொள்கையைத் தழுவுவது. Defector என்பதை நாம் மற்றொரு பொருளில் புரிந்து கொள்கிறோம். இரண்டு நாடுகளுக்கு இடையே யுத்தம் நடக்கும் போது ஒருவர் துரோகியாகி தன் எதிரிநாட்டுடன் சேர்ந்து விட்டாலோ அல்லது ஒரு குழுவை விட்டு மற்றொரு குழுவுக்கு இடம்பெயர்ந்து விசுவாசமின்றி நடந்து கொண்டாலோ அது defection. இரண்டுமே துரோகம் தான், ஆனால் நாட்டுக்கு துரோகம் செய்வதையே அதிகமும் defection என்கிறோம். 
வீரபரகேசரி: Defectors-ஐ நாங்கள் எங்கள் தேசத்தில் பொதுவாக தலையைக் கொய்து.... 
புரொபஸர்: இல்லை பிளீஸ்... எனக்கு தெரிஞ்சுக்க வேண்டாம். மதியம் சாப்பிட முடியாது. 
வீரபரகேசரி: எதுக்கு சொன்னேன் என்றால் defectorsக்கு விசாரணையோ மன்னிப்போ கிடையாது. விசாரித்தால் நமக்கு குழப்பம் ஏற்பட்டு ஒருவேளை நல்லவர்களோ எனத் தோன்றி விடும். நான் அதற்கெல்லாம் இடமளிப்பதே இல்லை. 
புரொபஸர்: விசாரிக்காம எப்படித் தெரியும்? 
வீரபரகேசரி: Gut feeling. தோணினா தலையைக் கொய்து விடுவேன். தாமதிக்க மாட்டேன். தாமதித்தால் என் முடிவு மாறிவிடும். 
கணேஷ்: கட் பீலிங்னா? என்ற் என்றால் குடல் தானே? 
புரொபஸர்: உள்ளுணர்வு எனச் சொல்வோமே அதுதான் gut feeling. Instinct அல்லது intuition. 
கணேஷ்: சரி சார்... ஆனால் குடலுக்கும் உள்ளுணர்வுக்கும் என்ன சம்பந்தம்? 
புரொபஸர்: நல்ல கேள்வி டா. சிக்மண்ட் பிராயிட் எனும் உளவியலின் பிதாமகர் இதைப் பற்றி பேசியிருக்கிறார். நம் மனம் என்பது மூளையில் இல்லை, நரம்பணுக்களில் உள்ளது. நரம்பணுக்கள் அதிகமாய் இருப்பது குடலில் தானே? சில நேரம் வயிறு சரியில்லை என்றால் கெட்ட கனவுகள் வருகின்றன என்பதை அவர் அவதானித்தார். அதைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர் குடலில் உள்ள நரம்பணுக்களுக்கும் நமது மனநிலைக்குமான தொடர்பைப் பற்றி பேசினார். அதனால் தான் உள்ளுணர்வு என்பதற்கும் குடலுக்குமான தொடர்பைக் குறிக்கும் நோக்கில் gut feeling எனும் சொல்லாட்சி தோன்றியது. 
கணேஷ்: பிரமாதம். அதோட அந்த close up business மேட்டரையும் turncoat என்பதில் ஏன் கோட் வருது என்கிறதையும் விளக்கிடுங்க சார். 
புரொபஸர்: கண்டிப்பா!

(இனியும் பேசுவோம்)

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT