இளைஞர்மணி

உலக சுகாதார நிறுவனம்... குறும்படப் போட்டி!

DIN

உடல் நலக் கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு குறித்த செய்திகளை மக்களிடையே எளிதாகக் கொண்டு சேர்க்கும் விதமாக, உலகச் சுகாதார நிறுவனம் "அனைவருக்குமான உடல் நலத் திரைப்பட விழா'வினை நடத்தி வருகிறது.

வருகிற 2021 - ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் இரண்டாவது திரைப்பட விழாவில், உலகளாவிய உடல் நலம் குறித்த புதிய சிந்தனைகளை மையமாகக் கொண்டு திரைப்படம் மற்றும் விடியோ படங்களை உருவாக்குவதற்கான போட்டி நடத்தப்படுகிறது. சுயமாகத் திரைப்படம் தயாரிப்பவர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், திரைப்படப் பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் திரைப்படத்துறை ஆர்வலர்கள் ஆகியோர் உடல் நலம் தொடர்புடைய குறும்படங்களை இப்போட்டிக்குச் சமர்ப்பிக்க முடியும். இப்போட்டி முதன்மைப் பிரிவு,

சிறப்புப் பிரிவு என்று இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

போட்டிக்கான முதன்மைப் பிரிவில்,

1.உலகளாவிய உடல் நலப் பாதுகாப்பு (யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ்)

2.சுகாதார அவசர நிலைகள் (ஹெல்த் எமர்ஜென்ஸி)

3. சிறந்த உடல் நலம் மற்றும் நல்வாழ்வு (பெட்டர் ஹெல்த் அண்ட் வெல் பீயிங்)
எனும் மூன்று வகைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த மூன்று வகைகளில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

மேற்காணும் மூன்று முதன்மைப் பிரிவுகளில், பங்கேற்பாளர்கள் ஏதாவதொரு பிரிவில் 3 முதல் 8 நிமிடங்கள் வரையிலான நீளமுடைய குறுகிய ஆவணப்படங்கள் அல்லது புனைகதைப் படங்களை உருவாக்கிச் சமர்ப்பிக்கலாம்.

இது தவிர, 1 முதல் 5 நிமிடங்கள் வரையிலான நீளமுடைய சமூக ஊடகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட குறுகிய நிகழ்படங்கள் அல்லது அசைவூட்ட நிகழ்படங்களைச் சிறப்புப் பிரிவின் கீழ் சமர்ப்பிக்கலாம்.

சிறப்புப் பிரிவில் மாணவர்கள் உருவாக்கிய படம், இளைஞர்களை இலக்காகக் கொண்ட சுகாதாரக் கல்விப் படங்கள், சமூக ஊடகங்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் படங்கள் என்று மூன்றாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தங்கள் நாட்டின் சட்டப்படி பெரியவர்களாகவும், திரைப்படப் பள்ளியில் மாணவர்களாக இருப்பவர்கள் அல்லது மாணவர்களாகப் பதிவு செய்து கொண்டிருப்பவர்கள் 3 முதல் 8 நிமிடங்கள் வரை நீளமுடைய படங்களை "மாணவர்கள் உருவாக்கிய படம்' எனும் பிரிவிலும்,

ஒரு குறிப்பிட்டக் கல்விக் குறிக்கோளுடன் 3 முதல் 8 நிமிடங்கள் வரை நீளமுடைய படங்களை "இளைஞர்களை இலக்காகக் கொண்ட சுகாதாரக் கல்விப் படங்கள் எனும் பிரிவிலும்,

சமூக ஊடகங்களுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட 1 முதல் 5 நிமிடங்கள் வரை நீளம் கொண்ட படங்களை "சமூக ஊடகங்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் படங்கள்' எனும் பிரிவிலும் சமர்ப்பிக்கலாம்.
விதிமுறைகள்

குறும்படங்கள் ஜனவரி 1, 2018 முதல் ஜனவரி 30, 2021 வரையிலான காலத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

குறும்படங்கள் எந்த மொழியிலும் இருக்கலாம். ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிப் படங்களுக்கு உரையாடல்களை ஆங்கிலத்தில் துணைத்தலைப்புகளாக இடம் பெறச் செய்ய வேண்டும்.

சமர்ப்பிக்கப்படும் குறும்படம் படுக்கை நிலையில் முழுமையாக எச்டி (1920 ஷ்1080 பிக்சல்ஸ்) வடிவத்தில் கம்ப்ரெஸ்டு செய்யப்பட்டதாக எம்பி4 (10எம்பி/எஸ்) படமாக இருக்க வேண்டும்.

பரிசுகள்: முதன்மைப் பிரிவில் ஒவ்வொரு வகைப்பாட்டுக்கும் ஒரு படம் என்று மூன்று படங்கள் தேர்வு செய்யப்பெற்று, ஒவ்வொரு படத்திற்கும் 10,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். இதே போல் சிறப்புப் பிரிவுக்கான படங்களில் மூன்று படங்கள் தேர்வு செய்யப்பெற்று, ஒவ்வொன்றுக்கும் 5,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும்.

உலகச் சுகாதார நிறுவனம் நடத்தும் இத்திரைப்படப் போட்டி குறித்து மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், உலகச் சுகாதார நிறுவனத்தின் https://www.who.int/initiatives/the-health-for-all-film-festival எனும் வலைப்பக்கத்திற்குச் செல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT