இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

24th Nov 2020 06:00 AM | - இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT

விளையாட்டு ஆணையத்தில் வேலை


பணி: எக்ùஸர்சைஸ் பிசியாலஜிஸ்ட்
காலியிடங்கள்: 34
சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ.80,000
தகுதி: ஸ்போர்ட்ஸ் அன்ட் எக்ùஸர்சைஸ் சயின்ஸ்,  ஸ்போர்ட்ஸ் சயின்ஸ், மெடிகல் பிசியாலஜி,  ஹியூமன் பிசியாலஜி  போன்ற துறைகளில் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் விளையாட்டு துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, விளையாட்டு துறை சார்ந்த பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்களுக்குப் பணி வழங்கப்படும். 
விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=11012  என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.11.2020


சாகித்ய அகாதெமியில் சுருக்கெழுத்தர் வேலை

பணி: ஸ்டெனோகிராபர் -ஐஐ
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.20,200
வயதுவரம்பு: 30  வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் 2 முடித்திருப்பதுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: ஓர் ஆண்டு சுருக்கெழுத்தராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து எழுதும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.sahitya-akademi.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
முகவரி: The Secretary, Sahitya Akademi, Rebindra Bhavan, New Delhi- 110 001

மேலும் விவரங்கள் அறிய: http://sahitya-akademi.gov.in/pdf/Stenographer-GR-II.pdf   என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.11.2020


பாரத ஸ்டேட்  வங்கியில் வேலை

 
மொத்த காலியிடங்கள்: 2000 
பணி: புரபஷனரி ஆபிஸர்
சம்பளம்: மாதம் ரூ.27,620
தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். 
வயதுவரம்பு: 01.04.2020 தேதியின்படி 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபிள்எஸ்   பிரிவினர் ரூ.750 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 
மேலும் விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/documents/77530/400725/13112020_PO+2020+-+Detailed+Advertisement+-+English.pdf/3795d355-7798-1923-955d-52bd59277758?t=1605272191443 என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.12.2020

ADVERTISEMENT


ஆவின் நிறுவனத்தில் வேலை


மொத்த காலியிடங்கள்: 460
பணி: சீனியர் பேக்டரிஅஸிஸ்டன்ட்
பிரிவுகள்: 
டய்ரிங் -170
லேப்-20
அனிமல் ஹஸ்பன்டரி-70
அட்மினிஸ்ட்ரேஷன் -70
மார்க்கெட்டிங் - 60
இன்ஜினியரிங் -70 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000
தகுதி: தகுதி பற்றிய முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். 
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 வயது  முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ஒசி, பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகள் மற்றும் ஆன்லைனில் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinfedrecruitment.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: https://drive.google.com/file/d/14ucnts6G_nmIjDOsuaRpcLQ62NQIXrb0/view?usp=sharing என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.  
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.12.2020

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT