இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் -  269

DIN


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப்பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அப்போது ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி நினைக்க, ஆடுமேய்ப்பவர் ஆல் இன் ஆல் அழகுராஜாவும் அவரது ஆடான வள்ளியும் அங்கு வருகிறார்கள். Flea market எனும் சொல் செகண்ட் ஹேண்ட் பொருட்கள் எனப்படும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பதற்கான சந்தை எனும் போது ஏன் அந்த பெயர் ஏற்பட்டது எனும் கேள்வி எழுகிறது. புரொபஸர் இதற்கு என்ன பதிலளிக்கிறார் எனப் பார்ப்போமா?

புரொபஸர்: Flea என்றால் என்னவெனத் தெரியுமா? 

கணேஷ்: தெள்ளுப்பூச்சி, உண்ணிப்பூச்சி. அதானே?
புரொபஸர்: சரி. ஆனால்... பார்த்திருக்கியா? 
ஜூலி: நான் நிறைய பார்த்திருக்கேன்.
புரொபஸர்: எங்கே?
ஜூலி: அது ஓர் அமானுஷ்ய சக்தி. 
புரொபஸர்: ஏன்? 
ஜூலி: அது எங்க இருக்குமுன்னு என்னால உணர முடியுது. ஆனால் கண்டுபிடிச்சு சாகடிக்கலாமுன்னா ம்ஹும். (பரபரவென பின்னங்காலைக் கொண்டு சொறிகிறது.) 
புரொபஸர்: ஸ்டாப் இட் ஜூலி. 
ஜூலி: அவை கடவுள் மாதிரி. இல்லன்னு சொல்ல முடியாது. இல்லாதிருந்தா நல்லா இருக்குமுன்னு வேணும்னா சொல்லலாம். Omniscient, omnipresent.
கணேஷ்: அதென்ன ஆம்னி பஸ்? 
ஜூலி: சர்வ வல்லமை பொருந்தியது - omniscient சர்வ வியாபகம் செய்யக் கூடியது - omnipresent.  
புரொபஸர்: சரி விசயத்துக்கு வருவோம். பயன்படுத்தப்பட்ட பொருட்களின் சந்தையில் இப்படியான தெள்ளுப்பூச்சிகள் அதிகமிருக்கும். அதனாலே தெள்ளுப்பூச்சி சந்தை எனும் பொருளில் flea market என இது அழைக்கப்படுகிறது. இது பிரெஞ்சில் இருந்து - marché aux puces எனும் வழக்குச் சொற்றொடரில் இருந்து - ஆங்கிலத்துக்கு வந்தது. ஏனென்றால் ஆரம்பத்தில் பிரான்சில் தான் இத்தகைய இரண்டாம் பயன்பாட்டுப் பொருட்களுக்கான பெரிய சந்தைகள் இருந்தன. அவை பூச்சிகளின் பிறப்
பிடமாக இருந்தன.  
ஜூலி சொறிந்தபடி: இப்படியாக பூச்சி வரலாறு முடிவுக்கு வருகிறது.  
வள்ளி அப்போது அங்கு வருகிறாள். 
வீரபரகேசரி (வள்ளியிடம்): அந்தப்புரத்தில் வசதி எல்லாம் எப்படி? 
வள்ளி: அங்கே பெண்டிர் சதா அழுகை, ஒப்பாரி கொண்ட சீரியல்களும், காதல், கசமுசா, அடிதடி கொண்ட பிக்பாஸூம் மட்டுமே பார்க்கிறார்கள். எனக்குப் பிடித்த வெப்சீரிஸ் யாரும் காட்ட மாட்டேன் என்கிறார்கள். இது மட்டுமே எனது ஒரே புகார் மன்னா. 
வீரபரகேசரி: ஹா... ஹா... இங்கே தான் நீ என்னோட micropower - ஐ புரிஞ்சிக்கணும். 
வள்ளி: புரியல மன்னா.
வீரபரகேசரி: இரண்டு விதமான அதிகாரங்கள் இருக்கின்றன - நுண் அதிகாரம், அதாவது micropower. அடுத்து வன்- அதிகாரம், அதாவது macropower. நீங்கள் பார்க்கும் ராணுவம், காவல்துறை, நீதிமன்றம், அவர்களுக்கு மேலே மக்கள் பிரதிநிதிகள், அவர்களுக்கும் மேலே என்னைப் போன்ற மன்னர்கள் எல்லாம் macropower - இன் வடிவங்கள், வெளிப்பாடுகள். பல நூற்றாண்டுகளாய் நாம் இந்த மேக்ரோ பவரினால் தான் மக்களைக் கட்டுப்படுத்த முடியும் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இது உண்மையல்ல. 
வள்ளி சீரியஸôக: பின்னே? 
வீரபரகேசரி: ஒரு நகரத்தில் ஒரு கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள். அவர்களை நிர்வகித்துக் கட்டுப்படுத்தும் காவல்துறையினர் எத்தனை பேர் இருப்பார்கள்? 
கணேஷ்: ஆயிரத்துக்கும் குறைவாக. 
வீரபரகேசரி: ஆம், அதற்கும் குறைவாக. எப்படி இந்த சொற்பம் அரசு அதிகாரிகளால் இவ்வளவு மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது? துப்பாக்கியாலா, தண்டனை பயத்தினாலா? இல்லை. மக்கள் ஒன்று திரண்டு எதிர்த்தால் காவலர்களாலோ நீதிமன்றத்தாலோ ஒன்றுமே பண்ண முடியாது. அங்கு தான் micropower வருகிறது. பெரிய சட்டங்கள் அல்ல, சின்னச் சின்ன நுட்பமான விதிமுறைகள் தாம் மக்களை கட்டுப்படுத்துகின்றன. அடுத்து surveillance. அதாவது மக்களை கண்காணிக்கும் பல சமூக கலாசார கட்டமைப்புகள். ஆல் இன் ஆல் அழகுராஜா மூலமாக நான் ஒரு புதுப்பிரசாரத்தை முன்னெடுக்கிறேன் - இதன்படி ஒவ்வொரு வீட்டிலும் இனி ஒரு ஆடு வளர்க்க வேண்டும் என வேண்டுகிறோம். நீ பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்தால் அவன் ஒரு ஆடு வாங்கி இருக்கிறான். 
இப்போது உனக்கு அழுத்தம் ஏற்படுகிறது. மக்கள் பெருமளவில் ஆடு வளர்க்கும் போது வேறு பிரச்னைகளை மறந்து மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள், தாம் முழுக்க எனது, அதாவது எனது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் நினைப்பார்கள். இதுதான் micropower.   
வள்ளி: ரொம்பத் தெளிவாக. 
வீரபரகேசரி: இப்படித்தான் நான் ஒரு மாமாமன்னனாக நீடிக்கிறேன்.

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT