இளைஞர்மணி

வா‌ங்க இ‌ங்​கி​லீ‌ஷ் பேச​லா‌ம் -268

17th Nov 2020 06:00 AM

ADVERTISEMENT

 

ஊரடங்கு பிரகடனம்  செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். 

வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்ரவர்த்தியாக  நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அப்போது ஒரு போட்டோ ஷூட் செய்ய வீரபரகேசரி  நினைக்க, ஆடுமேய்ப்பவர் ஆல் இன் ஆல் அழகுராஜாவும் அவரது ஆடான வள்ளியும் அங்கு வருகிறார்கள். 

அப்போது மன்னர் வீரபரகேசரி s‌o‌v‌e‌r‌e‌i‌g‌n எனும் சொல்லை விளக்குகிறார். அடுத்து H‌o‌l‌o​c​a‌u‌s‌t எனும் சொல்லை ஜூலி குறிப்பிடுகிறது. இது குறித்து அவர்கள் விவாதிக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஜூலி: ஹோலோகாஸ்ட் என்றால் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிப் படைகளால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்டது. இதை இன அழிப்பு என சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் g‌e‌n‌o​c‌i‌d‌e.. 

கணேஷ்: நம்ம அண்டை தேசத்தில் நடந்ததா சொல்லுவாங்களே அதுவா? 

வீரபரகேசரி: ச்...சூ...  நம்முடன் நட்பில் இருக்கும் தேசங்களைப் பழிக்கக் கூடாது. அது சர்வதேச உறவுகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.  

கணேஷ்: சரி மன்னா... உங்க பதிலை ஆமான்னு புரிஞ்சுக்கிறேன். 

வீரபரகேசரி காதுகளைப் பொத்திக் கொள்கிறார். 

கணேஷ்: ஜூலி, அதென்ன அப்படி ஒரு பேரு ஹோலோகாஸ்ட்? வாயிலேயே ஒட்ட மாட்டேன் என்கிறதே.

ஜூலி: அது லத்தீனில் இருந்து ஆங்கிலத்துக்கு வந்த ஒரு பழைய சொல். அதன் ஆதிப்பொருள் நெருப்பினால் ஏற்பட்ட மிகப் பெரிய அழிவு. நெருப்பில் இட்டு படையல் கொடுப்பது, யாகம் செய்வது எனப் பொருளும் உண்டு. நவீன யுகத்தில் தான் இதன் பொருள் மக்களைக் கூட்டங் கூட்டமாய் நெறியின்றி கொன்றொழிப்பது என ஆனது. குறிப்பாக, ஜெர்மனியில் யூத அழித்தொழிப்பு நடந்த பிறகு அந்த வரலாற்று நிகழ்வு இச்சொல்லால் தான் அறியப்படுகிறது.  

புரொபஸர்: கரெக்ட். இந்த சொல் ஹீப்ரூ மொழியில் இருந்து ஓலா / o‌l​a‌h எனும் சொல் கிரேக்க மொழியில் ‌h‌o‌l‌o‌k​a‌u‌s‌t‌o‌n என மொழியாக்கப்பட்டதன் விளைவாக ஆங்கிலத்துக்கு ஏர்ப்ர்ஸ்ரீஹன்ள்ற் எனத் தோன்றியது. யூதர்களின் மொழியில் ஓலா என்றால் தெய்வத்தின் நெருப்பில் இட்டு ஒன்றை பலி கொடுப்பது. ஜெர்மனியில் அப்போது யூதர்களை விஷப்புகையைச் சுவாசிக்க வைத்து கொத்துக் கொத்தாய் கொன்ற பின் உடல்களை  மலைமலையாகக் குவித்து வைத்து எரியூட்டினார்கள். இந்த சம்பவங்கள் ஓலா எனும் சடங்கை ஒத்திருப்பதால் ஹோலோகாஸ்ட் எனும் சொல் பொருத்தமானதாகக் கருதப்பட்டது. ஆனால் இந்தச் சொல்லுக்கு மதரீதியான அர்த்தங்கள் உண்டு. அதாவது தெய்வத்துக்காக மக்களைப் பலிகொடுப்பது என. யூதர்கள் தமக்கென ஒரு தேசம் ஏற்பட்ட பிறகு இதை விரும்பவில்லை. அவர்கள் ஹோலோகாஸ்டுக்குப் பதில் S‌h‌o​a‌h எனும் சொல்லையே விரும்புகிறார்கள். இதன் பொருள் யூதர்களை ஒட்டுமொத்தமாய் அழிக்கும் செயல்.  

கணேஷ்: கேட்கவே கொடூரமாக இருக்கு சார். இதுக்கு மேல சொல்லாதீங்க. 

வீரபரகேசரி: உண்மை. இதனால் தான் நான் இது போன்ற கருத்துகள், வரலாறுகளை என் நாட்டில் தடை செய்திருக்கிறேன். செய்தித்தாளில் நற்செய்திகளை, பாடப் புத்தகங்களில் இனிமையான மகிழ்ச்சியான கருத்துகளை, என்னுடைய ஆட்சியின் பெருமைகளை மட்டுமே படிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறேன். என்ன சொல்றீங்க?

கணேஷ்: ரொம்ப கரெக்ட் மன்னா. இன்னிக்கு ஆட்சி என்றாலே பிரச்சாரம் தானே? மக்கள் வேறெதைப் பார்க்குறாங்க. 

வீரபரகேசரி: சரி அதிருக்கட்டும் தம்பி, நீ போட்டிருக்கும் ஜீன்ஸ் ரொம்ப ஸ்டைலாக இருக்கிறதே. 
கணேஷ்: நீங்களும் அடுத்த முறை உரையாற்றும் போது இதைப் போட்டுக்குங்க மன்னா, இளைஞர்களுக்கு உங்களை ரொம்ப பிடித்து விடும். 
வீரபரகேசரி: நானும் அதைத் தான் யோசித்தேன். இதை எங்கே வாங்கினே? 
ஜூலி: வேறெங்கே, s‌o‌m‌e ‌f‌l‌ea ‌ma‌r‌k‌e‌t.
கணேஷ்: அதெல்லாம் இல்லீங்க, இதை டிரிப்ளிகேன்ல பிளாட்பார்மில எடுத்தேன். ரொம்ப சீப்பா வாங்கினேன். ஆனா பார்க்க ரெண்டாயிரம் ரூபாய் ஜீன்ஸ் மாதிரி இருக்கில்ல. 

புரொபஸர்: பழைய துணிகளை வாங்கி சிறிய மாற்றங்கள் செய்து அப்படி கம்மியான ரேட்டுக்கு விற்கிறார்கள் என நினைக்கிறேன். 

கணேஷ்: அதெப்படியோ சார், ப்ளீ மார்க்கெட் எல்லாம் இல்ல. அது மார்க்கெட்டே இல்ல சார். 

புரொபஸர்: இல்லடா, பழைய பொருட்களை, s‌e​c‌o‌n‌d-h​a‌n‌d ‌g‌o‌o‌d‌s ஐ, விற்கிற சந்தையை s‌o‌m‌e ‌f‌l‌ea ‌ma‌r‌k‌e‌t என அழைப்போம். 

கணேஷ்: அது ஏன் சார் அப்படி ஒரு பேரு?

(இனியும் பேசுவோம்)

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT