இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

10th Nov 2020 06:00 AM | - இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT


நிலக்கரி சுரங்கத்தில் பெண்களுக்கு  வேலை 

பணி: ஜூனியர் ஓவர்மேன்  
காலியிடங்கள்: 75
சம்பளம்: மாதம் ரூ.31,825.56
வயது வரம்பு: 10.11.2019 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஜூனியர் ஓவர்மேன் பணிக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேஸ் டெஸ்ட்டிங்,  ஃபர்ஸ்ட் எய்ட் டெஸ்ட்டிங்  சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 
விண்ணப்பிக்கும் முறை: www.centralcoalfields.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: www.centralcoalfields.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 21.11.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.11.2020 

 

இந்திய ராணுவத்தில் வேலை 

பணி:  சர்வீஸ் கமிஷன் ஆபிசர்ஸ் (டெக்னிகல்) ஆண்களும்  பெண்களும். 
காலியிடங்கள்: 191(இதில் 2 இடங்கள் போரில் வீரமணமடைந்த வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77,500
வயது வரம்பு: 20 வயது முதல் 27வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல்துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், ஐடி, ஏரோனடிக்கல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பு பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் முதல்கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள். சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரம் ராணுவ அதிகாரி பணிக்குரிய பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்  டிஃபென்ஸ் மேனேஜ்
மென்ட் அண்ட்  ஸ்டேடஜிக் ஸ்டடீஸ் 
எனப்படும் முதுநிலைப் பட்டயப்படிப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள். படிப்பு முடிந்தவுடன்  இந்திய ராணுவத்தில் "துணை அதிகாரி'யாகப் பணி அமர்த்தப்படுவர். 
உதவித் தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.56,100 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  
மேலும் கல்வி, துறைவாரியான காலியிடங்கள் பயிற்சி விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSCW_TECH_27.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  12.11.2020 

 

ADVERTISEMENT

யுசிஓ வங்கியில் வேலை


மொத்த காலியிடங்கள்: 91
பணி:  செக்யூரிட்டி ஆபிஸர் -9
பணி: என்ஜினியர் (சிவில், எலக்ட்ரிகல், ஆர்க்கிடெக்ட்) - 8
பணி: எகானாமிஸ்ட் - 2
பணி: ஸ்டேடிஸ்டியன் -2
பணி: ஐடி ஆபிஸர் - 20
பணி:  சார்ட்டர்டு  அக்கவுண்டன்ட்ஸ்/ சிஎஃப்ஏ (ஜேஎம்ஜிஎஸ்) -25
பணி:  சார்ட்டர்டு  அக்கவுண்டன்ட்ஸ்/ சிஎஃப்ஏ (எம்எம்ஜிஎஸ்) -25
சம்பளம் : ஜேஎம்ஜிஎஸ் பிரிவினருக்கு ரூ.23,700 இலிருந்து ரூ.42020
எம்எம்ஜிஎஸ்  பிரிவினருக்கு ரூ. 31,705 - ரூ.45950
வயது: செக்யூரிட்டி ஆபிஸர் பணிக்கு 21 வயதிலிருந்து 40 வயதுக்குள்  இருக்க வேண்டும். பிற பணிகளுக்கு 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்டி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினர் ரூ.100,  பிற பிரிவினர் ரூ.1000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். சிஎஸ்டி  தனி.
விண்ணப்பிக்கும் முறை: www.ucobank.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: https://www.ucobank.com/english/ViewJobOpportunities.aspx?from=&filename=Recruitment_revised%20publish%20spl%20advertisment25.10.2020%20-%20%20(1)_123c58e59d.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யுங்கள். 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.11.2020


வன ஆராய்ச்சி மையத்தில்  வேலை

 
பணி: ஸ்டேனோகிராபர் கிரேடு -ஐஐ - 01
பணி: லோயர் டிவிசன் கிளார்க்  - 01
பணி: மல்ட்டிடாஸ்கிங் ஸ்டாப் (எம்டிஎஸ்)  - 02
வயது வரம்பு: 24.11.2020 தேதியின்படி 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் மற்றும் அதனை கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Director, Institute of Forest Biodiversity, Hyderabad என்ற பெயருக்கு ஏதாவதொரு தேசிய வங்கியில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Director, Institute of Forest Biodiversity, Dulapally, Hyderabad } 500 100.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.11.2020


 

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT